உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 5 பக். 3
  • தேவதூதர்களால் உங்களுக்கு உதவ முடியுமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தேவதூதர்களால் உங்களுக்கு உதவ முடியுமா?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • இதே தகவல்
  • உங்களைப் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருக்கிறாரா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • தேவதூதர்கள்—அவர்கள் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறார்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • தூதர்கள் உங்களுக்கு எப்படி உதவுவார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • தேவதூதர்கள்—‘மீட்பைப் பெறப்போகிறவர்களுக்குப் பணிவிடை செய்கிறார்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 5 பக். 3
பைபிளைப் பயன்படுத்தி ஒரு கணவனும் மனைவியும் ஒரு பெண்ணுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்

அட்டைப்படக் கட்டுரை | தேவதூதர்கள்—உண்மையிலேயே இருக்கிறார்களா?

தேவதூதர்களால் உங்களுக்கு உதவ முடியுமா?

ஒரு ஞாயிறு மதியம், கூராசோ நாட்டில் வாழும் கென்னத்தும் ஃபிலோமினாவும், தங்களோடு பைபிள் படித்துவரும் ஒரு தம்பதியைப் பார்க்கப் போனார்கள்.

“நாங்க அங்க போனப்போ, அவங்க வீடு பூட்டிருந்தது, அவங்களோட காரும் அங்க இல்ல. ஆனா, அவரோட மனைவிக்கு ஃபோன் பண்ணலாம்னு தோணுச்சு” என்று கென்னத் சொல்கிறார்.

அந்தப் பெண் ஃபோனில் பேசினார்; தன்னுடைய கணவர் வேலைக்குப் போயிருப்பதாகச் சொன்னார். கென்னத்தும் ஃபிலோமினாவும் தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்தார்.

அந்தப் பெண் அழுதுகொண்டிருந்ததை இவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. ஜெபம் செய்துவிட்டு பைபிள் படிப்பை ஆரம்பித்தபோது, அவர் மறுபடியும் அழ ஆரம்பித்தார். ஏதாவது பிரச்சினையா என்று அவர்கள் உடனே அந்தப் பெண்ணிடம் கேட்டார்கள்.

அன்று மதியம், தான் தற்கொலை செய்ய நினைத்திருந்ததாகவும், தன் கணவருக்கு ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டிருந்ததாகவும், அந்தச் சமயத்தில் கென்னத்திடமிருந்து வந்த ஃபோன்தான் தன் தற்கொலை முயற்சியைத் தடுத்ததாகவும் அவர் சொன்னார். மனச்சோர்வால் பாதிக்கப்பட்டிருந்ததால் அப்படியொரு முடிவுக்கு வந்ததாகவும் சொன்னார். அதனால், பைபிளில் இருக்கிற ஆறுதலான விஷயங்களைப் பற்றி அவரிடம் பேசினார்கள். அவர்கள் ஆறுதலாகப் பேசியதுதான் அவருடைய உயிரைக் காப்பாற்றியது.

“மனச்சோர்வால பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு உதவி செய்ய எங்கள தூண்டுனதுக்காக, முக்கியமா, அவரோட சக்தியின் மூலமாவோ ஒரு தேவதூதர் மூலமாவோ, அவங்களுக்கு ஃபோன் பண்ண எங்கள தூண்டுனதுக்காக யெகோவாவுக்கு நன்றி சொன்னோம்” என்று கென்னத் சொல்கிறார்.a

ஒரு தேவதூதரையோ, தன்னுடைய சக்தியையோ, அல்லது, செயல் நடப்பிக்கும் ஆற்றலையோ பயன்படுத்தி கடவுள் தங்களுக்கு உதவி செய்திருப்பார் என்று கென்னத்தும் ஃபிலோமினாவும் நம்புவது சரியா? அல்லது, சரியான நேரத்தில் அவர்கள் ஃபோன் செய்தது வெறும் தற்செயலாக நடந்த ஒன்றா?

இதைப் பற்றி நம்மால் நிச்சயமாக சொல்ல முடியாது! ஆனால், தன் மக்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவ, கடவுள் தேவதூதர்களைப் பயன்படுத்துகிறார் என்பது மட்டும் நமக்குத் தெரியும். உதாரணத்துக்கு, ஒரு எத்தியோப்பிய அதிகாரிக்கு ஆன்மீக வழிநடத்துதல் தேவைப்பட்டபோது, அவருக்கு உதவி செய்ய, கடவுள் ஒரு தேவதூதரைப் பயன்படுத்தி கிறிஸ்தவ நற்செய்தியாளரான பிலிப்புவைத் தூண்டினார் என்று பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 8:26-31.

கண்களால் பார்க்க முடியாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இருப்பதாக நிறைய மதங்கள் நம்புகின்றன. அவற்றில் சில, கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாகவோ தனிப்பட்ட நபருக்குப் பாதுகாவலர்களாக இருப்பதாகவோ வர்ணிக்கப்படுகின்றன. தேவதூதர்கள் இருப்பதாக மட்டுமல்ல, அவர்கள் ஏதோவொரு வழியில் தங்களுக்கு உதவி செய்வதாகவும் நிறைய பேர் நம்புகிறார்கள். ஆனால் இன்னும் சிலர், தேவதூதர்கள் இருப்பதாகத் துளிகூட நம்புவதில்லை.

தேவதூதர்கள் உண்மையிலேயே இருக்கிறார்களா? அப்படி இருக்கிறார்கள் என்றால், அவர்கள் எப்படி வந்தார்கள்? அவர்களைப் பற்றிய உண்மைகள் என்ன? அவர்களால் உங்களுக்கு உதவ முடியுமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

a பைபிளில், யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்