எல்லா போர்க்கருவிகளும் அழிக்கப்படும்
பைபிள் என்ன சொல்கிறது?
பூமியில் என்றாவது சமாதானம் வருமா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வரும்
வராது
வரலாம்
பைபிள் தரும் பதில்
இயேசு கிறிஸ்துவுடைய ஆட்சியில், “சந்திரன் இருக்கும்வரை மிகுந்த சமாதானம் இருக்கும்,” அதாவது, சமாதானம் என்றென்றும் இருக்கும்.—சங்கீதம் 72:7.
பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?
பொல்லாதவர்கள் பூமியில் இருக்க மாட்டார்கள். நல்லவர்கள், “அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
கடவுள் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.—சங்கீதம் 46:8, 9.
உண்மையான மன சமாதானம் இப்போது கிடைக்குமா?
சிலர் சொல்கிறார்கள் . . . இந்தப் பூமியில் கஷ்டங்களும் அநீதியும் இருக்கும்வரை, உண்மையான மன சமாதானம் வரவே வராது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பைபிள் தரும் பதில்
கடவுளோடு நெருங்கி இருந்தால், இப்போதே “எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம்” கிடைக்கும்.—பிலிப்பியர் 4:6, 7.
பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?
கஷ்டங்களையும், அநீதியையும் முடிவுக்குக் கொண்டுவந்து, ‘எல்லாவற்றையும் புதிதாக்கப்போவதாக’ கடவுள் வாக்குக் கொடுக்கிறார்.—வெளிப்படுத்துதல் 21:4, 5.
‘ஆன்மீக விஷயங்களுக்கு’ முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் நம்மால் மன சமாதானத்தைக் கண்டடைய முடியும்.—மத்தேயு 5:3.