உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp17 எண் 6 பக். 16
  • பைபிள் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் என்ன சொல்கிறது?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அர்மகெதோன் என்றால் என்ன?
  • அர்மகெதோன் போரில் உயிர் தப்ப முடியுமா?
  • அர்மகெதோன் போர் என்றால் என்ன?
    பைபிள் தரும் பதில்கள்
  • அர்மகெதோன்—மகிழ்ச்சியான ஓர் ஆரம்பம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • அர்மகெதோன் மக்களின் கருத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • அர்மகெதோன்​—ஓர் ஆசீர்வாதமே!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
wp17 எண் 6 பக். 16
உலகம் முழுவதும் இருக்கிற “திரள் கூட்டமான” மக்கள் அர்மகெதோனில் உயிர் தப்புகிறார்கள்

எல்லா தேசங்களிலிருந்தும் எண்ண முடியாதளவுக்கு “திரள் கூட்டமான” மக்கள் அர்மகெதோனில் உயிர் தப்புவார்கள்

பைபிள் என்ன சொல்கிறது?

அர்மகெதோன் என்றால் என்ன?

சிலர் சொல்கிறார்கள் . . .

அணு ஆயுதங்களாலோ சுற்றுச்சூழல் நாசமாவதாலோ இந்த முழு உலகமும் அழிக்கப்படுவதுதான் அர்மகெதோன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் தரும் பதில்

அர்மகெதோன் என்பது ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்.’ இது, கெட்டவர்களுக்கு எதிராகக் கடவுள் செய்யும் போர். —வெளிப்படுத்துதல் 16:14, 16.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • அர்மகெதோன் போரில் கடவுள் போர் செய்வார்; பூமியை அழிப்பதற்காக அல்ல, மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக அப்படிப் போர் செய்வார்.—வெளிப்படுத்துதல் 11:18.

  • எல்லா போர்களுக்கும் அர்மகெதோன் போர் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.—சங்கீதம் 46:8, 9.

அர்மகெதோன் போரில் உயிர் தப்ப முடியுமா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • முடியும்

  • முடியாது

  • ஒருவேளை முடியலாம்

பைபிள் தரும் பதில்

அர்மகெதோன் போரோடு ‘மிகுந்த உபத்திரவம்’ முடிவுக்கு வரும். எல்லா தேசங்களையும் சேர்ந்த “திரள் கூட்டமான” மக்கள் அதிலிருந்து உயிர் தப்புவார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.

பைபிள் இன்னும் என்ன சொல்கிறது?

  • அர்மகெதோன் போரில், நிறைய பேர் உயிர் தப்ப வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். யாரும் அழிய வேண்டும் என்று அவர் விரும்புவதில்லை. கெட்டவர்கள் திருந்தாததால்தான் அவர்களை அழிக்கிறார்.—எசேக்கியேல் 18:32.

  • அர்மகெதோனிலிருந்து உயிர் தப்ப என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.—செப்பனியா 2:3.

கூடுதலாகத் தெரிந்துகொள்ள, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தின் 8-வது அதிகாரத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம்

www.jw.org வெப்சைட்டில் இருந்து இதை டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்