உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.
கடவுளுடைய அமைப்பிலிருந்து வரும் வழிநடத்துதலுக்கு, வட்டாரக் கண்காணிகள், மூப்பர்கள் உட்பட சகோதரர்கள் என்ன மனப்பான்மையைக் காட்ட வேண்டும்?
அவர்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவுக்கு உண்மையா இருக்க சகோதர சகோதரிகளை நான் உற்சாகப்படுத்துறேனா? கடவுளோட அமைப்பு தர்ற வழிநடத்துதலை ஏத்துக்கிட்டு உடனடியா செயல்படுறேனா?’—w16.11, பக்கம் 11.
உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்போது பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் போனார்கள்?
அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, சீக்கிரத்திலேயே இது நடந்தது. அந்தச் சமயத்தில், குருமார் வகுப்பு உருவாக ஆரம்பித்தது. சர்ச்சும் ரோம அரசாங்கமும் விசுவாச துரோக கிறிஸ்தவத்தை ஊக்குவித்தன. அதனால், கோதுமையைப் போல இருந்த கிறிஸ்தவர்கள் சொன்னதை சிலர்தான் கேட்டார்கள். ஆனால், 1914-க்குப் பல வருஷங்களுக்கு முன்பிருந்தே, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பாபிலோனின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிக்கொண்டிருந்தார்கள்.—w16.11, பக்கங்கள் 23-25.
‘பாவ காரியங்களைப் பற்றி யோசிப்பதற்கும்,’ ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிப்பதற்கும்’ என்ன வித்தியாசம்? (ரோ. 8:6)
‘பாவ காரியங்களைப் பற்றி யோசிப்பவர்கள்’ தங்கள் சுயநல ஆசைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், தங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தைப் பற்றித்தான் எப்போதும் பேசுவார்கள். இவர்களுக்குக் கிடைப்பதோ மரணம். ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிப்பவர்கள்’ யெகோவாவுடைய சக்தி தங்களை வழிநடத்த அனுமதிப்பார்கள். கடவுள் யோசிப்பது போல யோசிக்க கற்றுக்கொள்வார்கள். இவர்களுக்குக் கிடைப்பதோ வாழ்வும் சமாதானமும் ஆகும்.—w16.12, பக்கங்கள் 15-17.
கவலையைச் சமாளிக்க என்னென்ன நடைமுறையான வழிகள் இருக்கின்றன?
ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுங்கள், நியாயமான எதிர்பார்ப்புகளுடன் இருங்கள், தனியாக இருப்பதற்கு தினமும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள், கடவுளின் படைப்புகளை ரசியுங்கள், நகைச்சுவை உணர்வோடு இருங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், நன்றாகத் தூங்குங்கள்.—w16.12, பக்கங்கள் 22-23.
“ஏனோக்கு வேதனைப்பட்டுச் சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார்.” (எபி. 11:5) எப்படி?
ஏனோக்கு தான் இறந்துபோவது தெரியாமலேயே கடவுள் அவரை எடுத்துக்கொண்டார். அதாவது, அவரை மரணத்தில் தூங்க வைத்துவிட்டார் என்று தெரிகிறது.—wp17.1, பக்கங்கள் 12-13.
அடக்கமாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்?
அடக்கமானவர்கள் தங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்க மாட்டார்கள், தங்களுக்கு வரம்புகள் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார்கள். மற்றவர்களை மதிப்பார்கள், அவர்களை அன்பாக நடத்துவார்கள்.—w17.01, பக்கம் 18.
இன்றிருக்கும் ஆளும் குழுவை வழிநடத்துவது போலவே முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவையும் கடவுள்தான் வழிநடத்தினார் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?
பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ள கடவுளுடைய சக்தி அவர்களுக்கு உதவியது. தேவதூதர்களின் உதவியோடு அவர்கள் பிரசங்க வேலையை மேற்பார்வை செய்தார்கள். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் அவர்கள் வழிநடத்துதல் கொடுத்தார்கள். இந்த விஷயங்கள் இன்றும் பொருந்துகின்றன!—w17.02, பக்கங்கள் 26-28.
மீட்புவிலையை ஒரு பொக்கிஷம் என்று ஏன் சொல்லலாம்?
அதைக் கொடுத்தது யார், ஏன் கொடுக்கப்பட்டது, அதைக் கொடுக்க எவ்வளவு தியாகம் செய்ய வேண்டியிருந்தது, அது நமக்கு எந்தளவு தேவை ஆகிய 4 விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும்போது மீட்புவிலையை ஒரு பொக்கிஷம் என்று சொல்வோம். இவற்றைப் பற்றி நாம் ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டும்.—wp17.2, பக்கங்கள் 4-5.
ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை ஒரு கிறிஸ்தவர் மாற்றிக்கொள்ளலாமா?
நாம் சொன்னதைச் செய்ய வேண்டும். ஆனால், சில சமயங்களில் நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். நினிவே மக்கள் மனம் திருந்தியபோது, கடவுள் தன் தீர்மானத்தை மாற்றிக்கொண்டார். சில சமயங்களில், சூழ்நிலைகள் மாறும்போது அல்லது புதிய தகவல்கள் கிடைக்கும்போது, நாமும் நம் தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம்.—w17.03, பக்கங்கள் 16-17.
தவறான பேச்சு ஏன் ஆபத்தானது?
பிரச்சினை கட்டுக்கடங்காமல் போய், நிலைமை இன்னும் மோசமாவதற்கு தவறான பேச்சு ஒரு காரணமாக ஆகிவிடலாம். நம் பங்கில் நியாயம் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, மற்றவர்களைப் பற்றி மோசமாகப் பேசுவதால் நிலைமை சரியாகப் போவதில்லை.—w17.04, பக்கம் 21.