அறிமுகம்
எதிர்காலம் எப்படி இருக்கும்?
உங்கள் எதிர்காலமும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலமும் எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பைபிள் இப்படிச் சொல்கிறது:
“நீதிமான்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் என்றென்றும் அதில் வாழ்வார்கள்.”—சங்கீதம் 37:29.
மனிதர்களுக்கும் பூமிக்குமான கடவுளுடைய அருமையான நோக்கத்தைப் புரிந்துகொள்ளவும், அந்த நோக்கத்திலிருந்து எப்படி நன்மையடையலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் இந்தக் காவற்கோபுர பத்திரிகை உங்களுக்கு உதவும்.