உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp19 எண் 1 பக். 3
  • கடவுள்​—அவர் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள்​—அவர் யார்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • இதே தகவல்
  • கடவுள் யார்?
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • கடவுளைப் பற்றிய உண்மைகள் யாவை?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • நமக்கு தெரிந்திராத கடவுளை நம்புதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • கடவுளைப் பற்றி கற்றுக்கொள்வது அவசியம்
    கடவுளுடைய நண்பர்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
wp19 எண் 1 பக். 3
அழகான இயற்கைக் காட்சியை ஒருவர் ரசிக்கிறார்

கடவுள்​—அவர் யார்?

நிறைய பேர் கடவுளை நம்புவதாகச் சொல்கிறார்கள். ஆனால், கடவுள் யார் என்று கேட்டுப்பாருங்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை வைத்திருப்பார்கள். சிலரைப் பொறுத்தவரை, கடவுள் கொடூரமானவர்; தண்டிப்பதிலேயே குறியாக இருக்கிறவர். வேறு சிலருக்கு, கடவுள் என்றாலே அன்பானவர், நாம் என்ன செய்தாலும் மன்னிப்பவர். இன்னும் சிலரோ, கடவுள் எங்கேயோ இருக்கிறார், அவர் நம்மையெல்லாம் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வதால், கடவுள் யாரென்று தெரிந்துகொள்ளவே முடியாது என்ற முடிவுக்கு நிறைய பேர் வந்துவிடுகிறார்கள்.

கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வது முக்கியமா? ஆம், முக்கியம்தான். கடவுளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். (அப்போஸ்தலர் 17:26-28) நீங்கள் கடவுளிடம் எந்தளவுக்கு நெருங்கிப்போகிறீர்களோ, அந்தளவுக்கு அவர் உங்களை நேசிப்பார், உங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வார். (யாக்கோபு 4:8) அதைவிட முக்கியமாக, கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டால் உங்களால் சாவே இல்லாமல் என்றென்றும் வாழ முடியும்.—யோவான் 17:3.

நீங்கள் எப்படிக் கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்? உங்களுடைய நெருங்கிய நண்பரை எடுத்துக்கொள்ளுங்கள். அவரோடு நீங்கள் எப்படி நெருக்கமானீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? அநேகமாக, அவருடைய பெயர்... குணங்கள்... அவருக்குப் பிடித்த அல்லது பிடிக்காத விஷயங்கள்... அவர் செய்திருக்கும் காரியங்கள்... செய்யப்போகும் காரியங்கள்... இப்படிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். அப்படியென்றால், அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்ட பிறகுதான் அவரிடம் நெருக்கமாக ஆனீர்கள் என்று சொல்லலாம்.

அதேபோல், இதையெல்லாம் தெரிந்துகொண்டால் நீங்கள் கடவுளிடம் நெருக்கமாகலாம்:

  • கடவுளுடைய பெயர் என்ன?

  • அவர் எப்படிப்பட்டவர்?

  • அவர் என்ன செய்திருக்கிறார்?

  • அவர் என்ன செய்யப்போகிறார்?

  • கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?

இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் தரும் பதில்களை இந்தப் பத்திரிகை விளக்குகிறது. கடவுள் யார் என்பதை மட்டுமல்ல, கடவுளோடு நெருக்கமாவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்