உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp19 எண் 2 பக். 4-5
  • பேரழிவில் சிக்கும்போது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பேரழிவில் சிக்கும்போது
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வாழ்க்கைக்குப் பிடிப்பைத் தரும் வேதம்
  • தயாராக இருக்கிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • கவலைகளை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாவின் மேல் வைத்துவிடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
wp19 எண் 2 பக். 4-5
ஒரு கட்டிடத்தின் இடிபாடுகள் மத்தியில் இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள்

பேரழிவில் சிக்கும்போது

“நிலச்சரிவுலயும் வெள்ளத்துலயும் நாங்க எல்லாத்தயும் தொலைச்சுட்டோம். இனி எங்க கதி அவ்ளோதான்னு நினைச்சோம்.”—ஆன்ட்ரூ, சியர்ரா லியோன்.

“சூறாவளிக்கு அப்புறம் வந்து பார்த்தா... எங்க வீடு இருந்த இடமே தெரியல. எல்லாம் மொத்தமா போயிடுச்சு. அதிர்ச்சியில எங்களுக்கு பேச்சே வரல. என்னோட பொண்ணு அப்படியே தரையில விழுந்து ‘ஓ’ன்னு அழ ஆரம்பிச்சுட்டா.”—டேவிட், விர்ஜின் தீவுகள்.

நீங்களும் ஏதாவது இயற்கை சீற்றத்தில் சிக்கியிருக்கிறீர்களா? அப்படியென்றால், அது எவ்வளவு கொடூரமான அனுபவம் என்று உங்களுக்கே தெரியும். அதிர்ச்சி, குழப்பம், கவலை, திகில்... இப்படிப் பல உணர்ச்சிகள் உங்கள் மனதை உலுக்கியிருக்கும். இயற்கைப் பேரழிவிலிருந்து தப்பித்த நிறைய பேர், மனம் உடைந்துபோயிருக்கிறார்கள். உயிர்வாழ்வதே கொடுமை என்று நினைக்கும் அளவுக்கு அவர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள்.

உங்கள் வாழ்க்கையும் ஒரு பேரழிவினால் சின்னாபின்னமாகிவிட்டதா? அப்படியென்றால், ‘இதுக்குமேல என்னால தாங்கிக்கவே முடியாது!’ என்று நீங்கள் நினைக்கலாம். ‘இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்?’ என்றுகூட யோசிக்க ஆரம்பித்துவிடலாம். ஆனால், வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்ற நம்பிக்கையை பைபிள் தருகிறது. உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்ற உறுதியைக்கூட அது கொடுக்கிறது.

வாழ்க்கைக்குப் பிடிப்பைத் தரும் வேதம்

“ஒரு செயலின் ஆரம்பத்தைவிட அதன் முடிவு நல்லது” என்று பிரசங்கி 7:8 சொல்கிறது. பேரழிவினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பிரச்சினை தலைக்குமேல் போய்விட்டது போல ஆரம்பத்தில் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உடைந்துபோன வாழ்க்கையை மறுபடியும் ஒட்டவைக்க பொறுமையாக முயற்சி செய்யுங்கள். அப்போது, உங்கள் வாழ்க்கையில் நிம்மதித் தென்றல் வீச ஆரம்பிக்கும்.

இன்னொரு தித்திப்பான செய்தி! சீக்கிரத்தில் கடவுளுடைய ஆட்சி வரப்போவதாக பைபிள் சொல்கிறது. அப்போது, ‘அழுகைச் சத்தமோ அலறல் சத்தமோ . . . கேட்காது.’ (ஏசாயா 65:19) இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும். (சங்கீதம் 37:11, 29) பேரழிவுகள் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. மனதை வாட்டியெடுக்கும் நினைவுகளும் வேதனைகளும் ஒரேயடியாக மறைந்துவிடும். எல்லா சக்தியும் படைத்த கடவுளே இப்படி வாக்குக் கொடுத்திருக்கிறார்: “முன்பு பட்ட கஷ்டங்கள் இனி யாருடைய மனதுக்கும் வராது. யாருடைய நெஞ்சத்தையும் வாட்டாது.”—ஏசாயா 65:17.

இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: ‘உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை’ கடவுளே தரப்போகிறார்! அவருடைய அருமையான ஆட்சியின்கீழ் நிம்மதியாக வாழப்போகும் “நம்பிக்கையை” அவர் உங்களுக்குக் கொடுக்கிறார். (எரேமியா 29:11) இந்த நம்பிக்கை உங்கள் வாழ்க்கைக்குப் பிடிப்பைத் தருமா? போன கட்டுரையில் நாம் பார்த்த சாலி என்ற பெண் சொல்வதைக் கவனியுங்கள்: “கடவுளோட ஆட்சியில எப்படியெல்லாம் சந்தோஷமா வாழப்போறோம்னு நாம அடிக்கடி நினைச்சு பார்க்கணும். அப்பத்தான், ‘நடந்தது நடந்துடுச்சு, இனி நடக்கப்போறத பார்க்கலாம்’ங்கற தைரியம் வரும்.”

கடவுளுடைய ஆட்சி மனிதர்களுக்காக வேறு என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று நீங்கள் ஏன் தெரிந்துகொள்ளக் கூடாது? அதைத் தெரிந்துகொண்டால், உங்கள் வாழ்க்கையில் நம்பிக்கை மலரும். பேரழிவின் பிடியில் சிக்கியிருந்தாலும், வாழ்க்கை கசக்காது. அதற்குப் பதிலாக, பேரழிவே இல்லாத ஒரு காலத்துக்காக ஆசையோடு காத்திருப்பீர்கள். ஆனால், இப்போதைக்கு எப்படிப் பிரச்சினையைச் சமாளிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், முத்தான ஆலோசனைகளை பைபிள் தருகிறது. இதோ, சில!

மனக்காயத்துக்கு மருந்து

நன்றாக ஓய்வெடுங்கள்.

“ரொம்பவும் கஷ்டப்பட்டு வேலை செய்து காற்றைப் பிடிக்க ஓடுவதைவிட கொஞ்சம் ஓய்வெடுப்பது மேல்.”—பிரசங்கி 4:6.

வாழ்க்கையில் பேரிடியைச் சந்தித்தவர்கள், “சரியாகத் தூங்காவிட்டால் . . . அவர்களுடைய நிலைமை இன்னும் மோசமாகும். அவர்கள் சீக்கிரத்தில் நிலைகுலைந்துவிடுவார்கள்” என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதனால், நன்றாக ஓய்வெடுங்கள்.

மனம்திறந்து பேசுங்கள்.

“கவலை ஒருவருடைய இதயத்தைப் பாரமாக்கும் [வே.வா., “ஒருவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்,” அடிக்குறிப்பு]. ஆனால், நல்ல வார்த்தை அதைச் சந்தோஷப்படுத்தும்.”—நீதிமொழிகள் 12:25.

உங்கள் மனதில் இருப்பதையெல்லாம் குடும்பத்தில் இருக்கும் ஒருவரிடம் அல்லது நம்பகமான ஒரு நண்பரிடம் கொட்டிவிடுங்கள். நீங்கள் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்பார்கள், உங்களுக்கு ஆறுதல் சொல்வார்கள், தேவையான உதவிகளையும் செய்வார்கள்.a

ஒளிமயமான எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்.

“[கடவுளுடைய] வாக்குறுதியின்படியே நீதி குடியிருக்கிற புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13.

a ரொம்பக் காலமாக மனச்சோர்வில் அல்லது தீராத கவலையில் தவிப்பவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்