“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்”
மற்ற எல்லாரும் உங்களைக் கைவிட்டாலும், ஒருவர் மட்டும் உங்களைக் கைவிடவே மாட்டார். யார் அவர்?
அன்று வாழ்ந்த தாவீது ராஜா இப்படிச் சொன்னார்: “என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்வார்.”—சங்கீதம் 27:10.
யெகோவாதான் “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார்.”—2 கொரிந்தியர் 1:3, 4.
“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
கடவுள் உங்களுக்கு எப்படி உதவி செய்ய விரும்புகிறார் என்று தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! என்ற புத்தகத்தில் 08-வது பாடத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை www.jw.org வெப்சைட்டிலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.