உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp19 எண் 3 பக். 14-15
  • இப்போதே சந்தோஷமாக வாழ

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்போதே சந்தோஷமாக வாழ
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • திருப்தியோடு இருப்பது
  • உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிப்பது
  • திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது
  • நிலைத்துநிற்கும் திருமணத்திற்கு இரண்டு திறவுகோல்கள்
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • புன்னகை புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!
    விழித்தெழு!—2000
  • பிற்பட்ட ஆண்டுகள்
    குடும்ப வாழ்க்கை
  • பணம்தான் எல்லாத் தீமைக்கும் வேரா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
wp19 எண் 3 பக். 14-15
முன்பு குறிப்பிடப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவர் தன் மனைவியோடு சேர்ந்து சமைக்கிறார்

இப்போதே சந்தோஷமாக வாழ

நோயோ முதுமையோ மரணமோ இல்லாத அருமையான வாழ்க்கை உங்களுக்குக் காத்திருக்கிறது! ஆனால், இன்று நிறைய பிரச்சினைகளோடு நாம் போராட வேண்டியிருக்கிறது. இருந்தாலும், இப்போதே சந்தோஷமாக வாழ முடியுமா? முடியும். இப்போதே நிம்மதியாகவும் திருப்தியாகவும் வாழ்வதற்கான வழியை பைபிள் உங்களுக்குக் காட்டுகிறது. சில பிரச்சினைகளைச் சமாளிக்க பைபிள் எப்படி உதவும் என்று பார்க்கலாம்.

திருப்தியோடு இருப்பது

பைபிள் ஆலோசனை: “பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.”​—எபிரெயர் 13:5.

நமக்கு இது தேவை, அது தேவை என்றும், அவையெல்லாம் நம்மிடம் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் என்றும் இந்த உலகம் சொல்கிறது. ஆனால், “உள்ளதை வைத்துத் திருப்தியோடு” வாழ நம்மால் முடியும் என்று பைபிள் சொல்கிறது. எப்படி?

‘பண ஆசையை’ தவிருங்கள். ‘பண ஆசையினால்’ மக்கள் தங்களுடைய ஆரோக்கியத்தையும், குடும்பத்தையும், நட்பையும், ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும்கூட தூக்கியெறியத் துணிந்துவிடுகிறார்கள். (1 தீமோத்தேயு 6:10) வெறும் பணத்துக்காக இதையெல்லாம் இழந்து என்ன லாபம்? முடிவில், அவர்களுக்கு ‘திருப்தி’ கிடைப்பதில்லையே!​—பிரசங்கி 5:10.

பொருள்கள் அல்ல, மனிதர்கள்தான் முக்கியம். பொருள்கள் பயன் தருவது உண்மைதான். ஆனால், பொருள்களால் அன்பு காட்டவோ, நன்றி காட்டவோ முடியாது. மனிதர்களால் மட்டும்தான் இவற்றைச் செய்ய முடியும். சொல்லப்போனால், ‘உண்மையான நண்பர்[கள்]’ நம் மனநிறைவுக்கு முக்கியக் காரணமாக இருக்கிறார்கள்.​—நீதிமொழிகள் 17:17.

பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் நாம் இப்போதே சந்தோஷமாக வாழலாம்

உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிப்பது

பைபிள் ஆலோசனை: “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து.”​—நீதிமொழிகள் 17:22.

உடல்நலப் பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்ள உதவும் “அருமையான மருந்து” சந்தோஷம்தான். ஆனால், உடம்புக்கு முடியாமல் போகும்போது நாம் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?

நன்றியோடு இருங்கள். நம்முடைய பிரச்சினையைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருந்தால், ‘எல்லா நாளும் திண்டாட்டமாகத்தான்’ இருக்கும். (நீதிமொழிகள் 15:15) அதனால், “நன்றியுள்ளவர்களாக இருப்பதைக் காட்டுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:15) உங்கள் வாழ்க்கையில் உள்ள நல்ல விஷயங்களுக்காக நன்றியோடு இருங்கள், அவை எவ்வளவு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி! அழகான சூரிய மறைவு, இதமான தென்றல் காற்று, ஒருவருடைய அன்பான புன்னகை—இதெல்லாம் நம் வாழ்க்கைக்குச் சுவை சேர்க்கும்!

மற்றவர்களுக்கு உதவுங்கள். உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் சமயங்களில்கூட, ‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கும்.’ (அப்போஸ்தலர் 20:35) நாம் செய்யும் உதவிகளுக்காக மற்றவர்கள் நன்றி சொல்லும்போது நமக்கு மனநிறைவு கிடைக்கிறது; நம் பிரச்சினையை மறக்க அது உதவுகிறது. சந்தோஷமாக வாழ நாம் மற்றவர்களுக்கு உதவினால் நமக்கும் வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்கும்.

திருமண பந்தத்தைப் பலப்படுத்துவது

பைபிள் ஆலோசனை: “மிக முக்கியமான காரியங்கள் எவை என்று நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.”​—பிலிப்பியர் 1:10.

கணவனும் மனைவியும் சேர்ந்து செலவிடும் நேரம் குறையக் குறைய அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாகும். அதனால், திருமண பந்தத்தைக் கட்டிக்காப்பதற்கு அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

எல்லாவற்றையும் சேர்ந்து செய்யுங்கள். தனித்தனியாக அவரவருக்குப் பிடித்ததைச் செய்வதற்குப் பதிலாக, எல்லாவற்றையும் சேர்ந்து செய்ய நீங்கள் ஏன் திட்டமிடக் கூடாது? “தனியாக இருப்பதைவிட இரண்டு பேராகச் சேர்ந்திருப்பது நல்லது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 4:9) நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து சமைக்கலாம், வாக்கிங் போகலாம், காபி குடிக்கலாம், அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.

அன்பை வெளிக்காட்டுங்கள். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அன்பும் மரியாதையும் காட்ட வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:28, 33) அன்பாக புன்னகைப்பது, ஆசையாக அரவணைப்பது, சின்னச் சின்ன அன்பளிப்புகளைத் தருவது போன்றவைகூட திருமண பந்தத்தைப் பலப்படுத்தும். கணவனும் மனைவியும் ஒருவரிடம் ஒருவர் மட்டும்தான் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.​—எபிரெயர் 13:4.

“ஒருவழியா, எதுக்காக வாழ்றோங்குறத புரிஞ்சுகிட்டேன்!”

—ரியோக்கோ மியாமோட்டோ, ஜப்பான்.

தினமும் நான் பிரச்சனைகளோட போராட வேண்டியிருந்துது. என்னோட கணவர் பயங்கரமா குடிச்சாரு. அவருக்கு வேலை தர எல்லாருமே தயங்குனாங்க. எங்களுக்கு நாலு பிள்ளைங்க. ஆனா, ஒரு அப்பாவா அவரு எதுவுமே செய்யல. நான் எவ்வளவோ பாடுபட்டேன், ஆனாலும் நிலைமை முன்னேறவே இல்ல. ‘இது என் விதியா, இல்லன்னா போன ஜென்மத்துல நான் செஞ்ச பாவத்துக்கு கிடைச்ச தண்டனையா?’னு யோசிச்சேன்.

ஒருநாள், யெகோவாவின் சாட்சியா இருக்குற ஒருத்தங்க என் வீட்டுக்கு வந்தாங்க. அவங்க சிரிச்ச முகத்தோட ரொம்ப உற்சாகமா, கடவுளோட அரசாங்கத்த பத்தியும் சாவே இல்லாத வாழ்க்கைய பத்தியும் பேசுனாங்க. அப்புறம், பைபிள சொல்லிக்கொடுக்குறதா சொன்னாங்க. கடவுள் ஒருத்தர் இருக்காரு, அவரு ஞானமும் நீதியும் அன்பும் நிறைஞ்சவரு அப்படின்னெல்லாம் நான் கத்துக்கிட்டேன். இறந்தவங்களோட நிலைமைய பத்தியும் தெரிஞ்சுகிட்டேன். என் கஷ்டங்களுக்கு காரணம் விதி இல்லங்கறதயும் புரிஞ்சுகிட்டேன்.

எல்லாத்துக்கும் மேல, கடவுள்கிட்ட நெருக்கமா இருந்தாதான் திருப்தியான வாழ்க்கை கிடைக்கும்னு புரிஞ்சுகிட்டேன். பைபிள்ல இருக்குற உண்மைகள தெரிஞ்சுகிட்டதுனால எனக்கு நிறைய சுதந்திரம் கிடைச்சிருக்கு, உற்சாகமும் புத்துணர்ச்சியும்கூட கிடைச்சிருக்கு. ஒருவழியா, எதுக்காக வாழ்றோங்குறத புரிஞ்சுகிட்டேன்!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்