உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w19 ஜனவரி பக். 31
  • ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • இதே தகவல்
  • கேப்டன் ஜேம்ஸ் குக்—பசிபிக்கின் துணிச்சல் மிகுந்த ஆய்வுப்பயணி
    விழித்தெழு!—1995
  • ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
w19 ஜனவரி பக். 31
கென்னத் மற்றும் ஜேமி குக்

கென்னத் ஈ. குக் மற்றும் அவருடைய மனைவி ஜேமி

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்

ஜனவரி 24, 2018, புதன்கிழமை காலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருக்கிற பெத்தேல் குடும்பத்தாருக்கு ஒரு விசேஷ அறிவிப்பு செய்யப்பட்டது. சகோதரர் கென்னத் குக், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் அந்த அறிவிப்பு.

சகோதரர் குக் அமெரிக்காவில் இருக்கும் தெற்கு பென்ஸில்வேனியாவின் மத்தியப் பகுதியில் பிறந்து வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு கொஞ்சம் முன்பு, தன்னோடு படித்த மாணவர் ஒருவரின் மூலம் அவருக்குச் சத்தியம் கிடைத்தது. ஜூன் 7, 1980-ல் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். செப்டம்பர் 1, 1982-ல் ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, பெத்தேலில் சேவை செய்வதற்கான அழைப்பு அவருக்கு வந்தது. அக்டோபர் 12, 1984-ல் நியு யார்க், வால்கில்லில் தன்னுடைய பெத்தேல் சேவையை ஆரம்பித்தார்.

அடுத்த 25 வருஷங்கள், சகோதரர் குக் அச்சக இலாகாவிலும் பெத்தேல் அலுவலகத்திலும் வெவ்வேறு நியமிப்புகளைச் செய்தார். 1996-ல், ஜேமி என்பவரைக் கல்யாணம் செய்தார். பிறகு, ஜேமியும் அவரோடு சேர்ந்து வால்கில் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார். டிசம்பர் 2009-ல், நியு யார்க், பேட்டர்ஸனில் இருக்கிற உவாட்ச்டவர் கல்வி மையத்துக்குச் சகோதரர் குக் மற்றும் அவருடைய மனைவி மாற்றப்பட்டார்கள். அங்கே, கடிதத் தொடர்பு இலாகாவில் சகோதரர் குக் சேவை செய்தார். பிறகு, ஏப்ரல் 2016-ல், வால்கில் பெத்தேலுக்கு மறுபடியும் அவர்கள் மாற்றப்பட்டார்கள். அங்கே கொஞ்ச நாட்கள் சேவை செய்த பிறகு, நியு யார்க், புருக்லினுக்கு மாற்றப்பட்டார்கள். ஐந்து மாதங்கள் கழித்து, நியு யார்க் வார்விக்கில் இருக்கிற உலகத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார்கள். ஜனவரி 2017-ல், சகோதரர் குக் ஆளும் குழுவுடைய எழுத்துக் குழுவின் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆளும் குழுவில் இப்போது எட்டு சகோதரர்கள் இருக்கிறார்கள்:

கெ. ஈ. குக்; எஸ். எஃப். ஹெர்ட்; ஜி. டபிள்யு. ஜாக்சன்; எம். எஸ். லெட்; ஜி. லாஷ்; எ. மாரிஸ்; டி. எம். ஸான்டர்ஸன்; டி. எச். ஸ்ப்லேன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்