அணுகிவரும் மேலான நிலைமைகளைப் பற்றிய நற்செய்தியை கூறுங்கள்
1. அணுகிவரும் புதிய உலகத்தைப் பற்றிய செய்தியை அறிவிப்பதில் ஒழுங்காகப் பங்குகொள்வது என்னே ஒரு சந்தோஷமான சிலாக்கியமாக இருக்கிறது! மற்றவர்களுக்கு இந்தச் செய்தியை எடுத்துச் செல்ல நாம் எவ்வளவு முழுநிறைவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்! வரப்போகும் நல்ல காரியங்களைப் பற்றிய இந்த நற்செய்தியைப் நாம் பகிர்ந்து கொள்கையில், நம் சொந்த விசுவாசமும், வைராக்கியமும் பலப்படுத்தப்படுகின்றன. யெகோவாவைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்’ என்ற ஆர்வமான தூண்டுதலுக்கு நாம் கீழ்படிகையில் நம் இருதயங்கள் களிப்படைகின்றன.—சங். 96:2-4.
2. ராஜ்யத்தின் செய்தியை ஒவ்வொரு நாளும் பேசுவதை நீங்கள் இலக்காக ஆக்கிக்கொண்டிருக்கிறீர்களா? துணை அல்லது ஒழுங்கான பயனியர் வேலையில் ஈடுபடுவோர் நற்செய்தியை கூறுவதில் ஒவ்வொரு நாளும் பங்கு கொள்கின்றனர். இதை நீங்கள் செய்ய முடியுமா? முடியவில்லையென்றால், நீங்கள் ஒவ்வொரு நாளும் கொஞ்சமாவது பங்குபெற முடியுமா, குறைந்த பட்சம் சிறு சந்தர்ப்ப சாட்சியாவது கொடுக்க முடியுமா? நாம் அனைவரும் இதைச் செய்வோமானால் யெகோவாவுக்கு என்னே ஒரு மகத்தான உரத்த துதி ஏறெக்கப்படும்! ஒவ்வொரு நாளும் ராஜ்ய நம்பிக்கையை அறிவிக்கையில் நீங்கள் யெகோவாவின் ஐசுவரியமான ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.
3. நாம் எவ்வளவு அடிக்கடி நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம் என்பதை ஊழியத்தைக் குறித்து நாம் கொண்டுள்ள மனநிலை பாதிக்கக்கூடும். ஜனங்களின் பிரதிபலிப்பின்மையின் காரணமாக நாம் உற்சாகமிழந்து ராஜ்ய செய்தியை அறிவிப்பதில் தளர்ந்துவிடக்கூடாது. மாறாக, ஓர் உடன்பாடான மனநிலையும், அணுகிவரும் மேலான நிலைமைகளைப் பற்றிய செய்திக்கான கூரிய போற்றுதலும், நற்செய்தியை தினமும் சொல்வதில் பங்கு கொள்ள நாம் செய்யும் முயற்சியை பயன்படுத்தும்.—லூக். 6:45.
4. குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றாக வேலை செய்து ஐக்கியமான யெகோவாவுக்கு ‘மகிமையையும் வல்லமையையும்’ செலுத்துகையில், அநேக ஐசுவரியமான ஆசீர்வாதங்கள் அனுபவிக்கப்படலாம். (சங். 96:7) ஒரு குடும்பமாக ஊழியத்தில் வேலை செய்வதற்கு நேரம் அட்டவணையிடப்படும்போது, குடும்ப பிணைப்பும், ஆவிக்குரிய பிணைப்பும் பலப்படுத்தப்படுகின்றன. குடும்ப அங்கத்தினர்கள் சபையில் இருக்கும் மற்ற குடும்பங்களோடு ராஜ்ய நம்பிக்கையை கூறுவதில் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்வதற்கு சனிக்கிழமைகளும், ஞாயிற்றுக்கிழமைகளும் மிகச் சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.
என்றும் வாழலாம் புத்தகத்தை உபயோகியுங்கள்
5. ஏப்ரல் மாதத்தின்போது நாம் என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்போம். ஜனங்கள் அன்றாட வாழ்க்கையைக் குறித்து அக்கறையுள்ளவர்களாய் இருக்கின்றனர், ஒரு சந்தோஷமான எதிர்காலத்தை விரும்புகின்றனர். நேர்மை இருதயமுள்ள ஆட்கள், இன்று மனிதவர்க்கத்தில் சர்வசாதாரணமாய் காணப்படும் பிரச்னைகள் இல்லாத நீண்ட கால வாழ்க்கையின் வருங்கால எதிர்பார்த்தலைக் குறித்து கற்றறியும் போது சந்தோஷப்படுகின்றனர். இந்த நம்பிக்கையைப் பற்றிய திருத்தமான அறிவும், அது விரைவில் உண்மையானதாகிவிடும் என்ற விசுவாசமும், ராஜ்ய செய்தியை அளிக்கையில் நம்மை உடன்பாடான செயலுக்கு தூண்டுவிக்க வேண்டும்.
6. உங்கள் அளிப்பை கவர்ச்சியுள்ளதாக்க நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்களோ அதற்கு ஜெபத்தோடு முன்யோசனை கொடுங்கள். உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபிறகு, இதைப்போன்று நீங்கள் சொல்லலாம்: “உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எத்தகைய எதிர்காலத்தை நீங்கள் விரும்புகிறீர்கள்? (பிரதிபலிப்புக்கு அனுமதியுங்கள்.) நாம் அனைவரும் வாழ்க்கையை அனுபவிக்கிறோம், எவ்வளவு காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் வாழ விரும்புகிறோம். இருந்தபோதிலும், அநேக பிரச்னைகள் முளைக்கின்றன. அவைகள் நம் உயிரையே பயமுறுத்துவதாய் தோன்றுகின்றன. இந்தக் காரணத்தின் நிமித்தம் நீங்கள் ஒரு பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றியும், வாழ்க்கையின் கவலைகளை எவ்வாறு சமாளிப்பது என்பதைப் பற்றியும் பைபிளின் செய்தியைக் கற்றறிய ஆர்வமுள்ளவர்களாய் இருப்பீர்கள்.” இக்கட்டத்தில் நீங்கள் தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளின் உள்ள வேத வசனங்களை சிறப்பித்துக்காட்டலாம். என்றும் வாழலாம் புத்தகத்தில், பக்கங்கள் 9, 11-13, 161, 162-ல் உள்ளதைப் போன்ற திட்டவட்டமான பேச்சுக்குறிப்புகளை, வரப்போகும் பிரகாசமான எதிர்காலத்தை அழுத்திக் காட்ட உபயோகியுங்கள்.
7. நாம் அறிவிப்பதற்கு என்னே ஒரு சந்தோஷமான, விசுவாசத்தைப் பலப்படுத்தும் செய்தியை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார்! யெகோவாவின் மகத்தான வாக்குகளுக்காக ஓர் ஆழ்ந்த போற்றுதலைக் கொண்டிருக்கும் மற்றவர்களோடு நெருக்கமாக வேலைசெய்யும் பெரிய சிலாக்கியமும் நமக்கு இருக்கிறது. இப்பொழுது நாம் செய்யும் வேலை ஒருபோதும் மறுபடியும் செய்யப்படப்போகாததாலும், விரைவில் ஒரு முடிவுக்கு வரப்போவதாலும், நமக்குக் கிடைக்கக்கூடிய நேரத்தையும் ஆதாரங்களையும் ஒவ்வொரு நாளும் வரப்போகும் மேலான காரியங்களைப் பற்றிய நற்செய்தியை கூறுவதற்கு நாம் உபயோகிக்க வேண்டாமா?