நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—உறுதியான நம்பிக்கையுடன்
1 தெசலோனிக்கேயா சபையினருடைய கடின உழைப்பை நினைவுகூருபவனாய் பவுல் அவர்களுக்குச் சொன்னதாவது: “எங்கள் சுவிசேஷம் உங்களிடம் வசனத்தோடே மாத்திரம் அல்ல வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும் முழு [பலமான, NW] நிச்சயத்தோடும் வந்தது. . . . நீங்கள் . . . எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களானீர்கள்.” (1 தெச. 1:5, 6) ஆம், பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் தெசலோனிக்கேயா சபையுடன் சேர்ந்து தாங்கள் கடவுளை சரியாக வணங்கிக் கொண்டிருந்ததை நிச்சயமாக அறிந்திருந்தார்கள். இந்த முழு நிச்சயம் அல்லது உறுதியான நம்பிக்கையை அவர்களுடைய பேச்சு வெளிப்படுத்திக் காண்பித்தது. நம்முடைய ஊழியமுங்கூட நமது உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்ட வேண்டும்.
இதயத்திலிருந்து பேசுதல்
2 நம்முடைய ஊழியத்தில் நாம் எப்படி அந்தத் தனிப்பட்ட உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்டலாம்? அடிப்படையில், அது நாம் நம்முடைய இருதயத்திலிருந்து பேசுவதை உட்படுத்துகிறது. நற்செய்தியை நாம் எடுத்துரைக்கும் முறையானது நாம் எதைச் சொல்லுகிறோமோ அதை நாம் உண்மையிலே நம்புகிறோம் என்பதைக் காட்ட வேண்டும். நாம் இருதயத்திலிருந்து எடுத்துபேசும்போது நமது உண்மை மனதும் மற்றும் தனிப்பட்ட உறுதியான நம்பிக்கை ஊடுருவி பிரகாசிக்கும், ஏனெனில் ‘இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.’—லூக். 6:4, 5.
4 நாம் தனிப்பட்ட உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்ட வேண்டுமானால் சத்தியத்தின் பேரிலும் யெகோவாவினுடைய அமைப்பின் பேரிலும் ஆழமான மதித்துணர்வை நாம் கொண்டிருக்க வேண்டும். சத்தியத்தை உடையவர்களாக, மற்றவர்கள் அதைக் கற்றுக்கொள்ள உதவுவது உங்களுடைய உத்தரவாதம். இந்தக் காரியங்களைக் குறித்து நம்பிக்கையான மனநிலையோடு சிந்தித்துப் பார்ப்பதானது சத்தியத்தை உறுதியான நம்பிக்கையோடு எடுத்துரைப்பதற்கான உந்துவிக்கும் உதவியை உங்களுக்குக் கொடுக்கும். சமாரிய பெண்ணிடம் பேசினதில் இயேசு நமக்கு நல்ல முன்மாதிரியை வைத்தார்.—யோ. 4:21-24.
4 நாம் இலக்கியங்களை அளிக்கும் அந்த முறைதானே இருதயத்திலிருந்து பேசுகிறோமா என்பதை வெளிக்காட்டுகிறது. நாம் நற்செய்தியை அறிமுகப்படுத்தும்போது அளிக்கும் பிரசுரத்தை நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும். வீட்டுக்காரரின் பசியார்வத்தைத் தூண்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய திட்டவட்டமான குறிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் இலக்கியங்களை அளிக்கையில் இதுவும்கூட நமது உறுதியான நம்பிக்கையை கட்டியெழுப்பும்.
கண்ணியமற்ற செயல்களைத் தவிருங்கள்
5 நமது உண்மைத்தன்மை மற்றும் உறுதியான நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றிய வீட்டுக்காரரின் நோக்குநிலையை சில சமயங்களில் நமது ஒரு சில கண்ணியமற்ற செயல்கள் பாதிக்கக்கூடும். அவசியமில்லாமல் நம்முடைய இலக்கியத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது அல்லது ஒரு வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பார்வையை அலையவிடுவது, நாம் உண்மை மனதுடன் இல்லை என்ற எண்ணத்தை வீட்டுக்காரருக்கு உண்டுபண்ணக்கூடும். நாம் பேசும்போது வீட்டுக்காரரைப் பார்த்துபேச வேண்டும். நாம் என்ன சொல்லுகிறோமோ அதை நம்புகிறோம் என்பதை வெளிக்காட்ட வேண்டும்.
6 முகப்பாவனையும்கூட முக்கியமானது, ஏனெனில் பொதுவாக உங்கள் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அவை வெளிப்படுத்திவிடும். உறுதியான நம்பிக்கையும் வீட்டுக்காரர் மீதுள்ள மனமார்ந்த அக்கறையும் உங்கள் முகத்தில் பிரதிபலிக்கப்பட வேண்டும்.
7 நாம் என்ன விதமான எண்ணத்தை பின்விட்டு வருகிறோம் என்பது நாம் பேசிவிட்டு வரும் வார்த்தைகளைப் பொருத்தே இருக்கும். நாம் திரும்பத் திரும்ப “என்று நான் நினைக்கிறேன்” மற்றும் “ஒருவேளை” போன்ற கூற்றுகளை பயன்படுத்துவோமானால், நாம் எதைச் சொல்லுகிறோமோ அதைக் குறித்து நாமே நிச்சயமாயில்லை என்ற முடிவுக்கு வீட்டுக்காரர் வந்துவிடுவார். ஆகவே, நாம் பேசும் வார்த்தைகள் நமது பங்கில் உறுதியான நம்பிக்கையை வெளிக்காட்ட வேண்டும்.—மத். 7:28, 29-ஐ ஒப்பிட்டு பார்க்கவும்.
8 நற்செய்தியை உறுதியான நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் சொல்வதற்கு நீங்கள் கடினமாக உழைக்கையில் நீங்கள் ‘கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாக இராது’ என்ற நிச்சயத்தை நீங்கள் கொண்டிருக்கலாம்.—1 கொரி. 15:58.