குடும்ப ஒத்துழைப்பு நன்மைகளைக் கொண்டுவருகிறது
1 மனிதனால் நிறுவப்பட்டிருக்கும் எல்லா அமைப்பு முறைகளிலும் குடும்ப அமைப்பு முறையே மிகப் பழமையானது. அது யெகோவாவுக்கு மிக அருமையான ஒன்று. ஏனெனில் அவரே “பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக் குடும்பத்துக்கும் நாமகாரணர்.”—எபே. 3:14.
2 பைபிள் காலங்களில், குடும்பம் தேவ பக்தி நிறைந்த ஒன்றாயிருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டிய பிரதான உத்தரவாதம் தந்தையினுடையதாக இருந்தது. இன்றும் அது அவ்வாறே இருக்கிறது. (யோசு. 24:15; எபே. 6:1-4) அத்தியாவசியமான எல்லாக் குடும்ப விவகாரங்களையும் பராமரித்தல் ஒரு சவாலாக இருக்கிறது. இது எவ்வாறு நிறைவேற்றப்படலாம்? குடும்ப ஒத்துழைப்பு மற்றும் ஒழுங்கமைப்பின் மூலமே.—1 கொரி. 14:40.
தலைவன் முன்நின்று வழிநடத்துகையில்
3 அனைவருடைய ஆவிக்குரிய நிலை பிரதான அக்கறைக்குரிய ஒன்று. ஒழுங்கான முறையில் குடும்பப் படிப்பு நடத்தப்பட வேண்டும். குடும்ப தேவைகளுக்கேற்ப அதை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். இது தினவாக்கியத்தைக் கலந்தாலோசிக்கும் விஷயத்திலும் உண்மையாக இருக்கவேண்டும். கடவுளுடைய வார்த்தையின் கலந்தாலோசிப்போடு நாளை துவங்குவது எவ்வளவு சிறந்ததோர் காரியம்! நாள்முழுவதும் அதைத் தியானிப்பது ‘கற்புள்ளவைகளை, அன்புள்ளவைகளை, மற்றும் புண்ணியம் எதுவோ அவைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு’ நமக்கு உதவிசெய்யும். (பிலி. 4:8) இதில் நீங்கள் முன்னேற்றம் செய்யக்கூடுமா?
4 குடும்பப் படிப்போடுகூட, தனிப்பட்ட படிப்பு அட்டவணை முக்கியமானது. யோசுவா 1:8-ல் உள்ள வார்த்தைகள் நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் சமவலிமையுள்ளது: “இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும், அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”
5 சபை கூட்டங்களுக்கு நேரத்தோடு வருவதும்கூட ஒரு சவாலாக இருக்கிறது. இதற்கும்கூட ஒத்துழைப்பு அவசியம். குடும்ப தலைவனிடமிருந்து வரும் வழிநடத்துதலானது தேவைப்படும் இடத்தில் உதவி கொடுக்கப்படுவதை நிச்சயப்படுத்தும். இது எல்லாரும் நேரத்தோடு வந்து சேருவதற்கும் ஆரம்ப பாட்டிலும் ஜெபத்திலும் பங்குகொள்ளுவதற்கும் உதவி செய்யும்.
6 குடும்ப ஐக்கிய ஏற்பாட்டிற்கு எதிராக அநேக தீயச் செல்வாக்குகள் செயற்படுவதால் குடும்பத்தலைவன் ஜெபத்தில் குடும்பத்தை தலைமைத் தாங்கி நடத்துவது அதிக அத்தியாவசியமானது. (2 தீமோ. 3:1-5) “ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்.” இதுவே ரோமர் 12:12-ல் பவுல் கொடுத்த புத்திமதி. இதை ஒழுங்கான முறையில் செய்வது குடும்பத்தை ஒன்றாக இறுக இணைத்திட உதவிசெய்யும். ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் செய்யக்கூடிய தனிப்பட்ட ஜெபத்தோடுகூட இந்தக் குடும்ப ஜெபமும் இருக்க வேண்டும்.
ஆயத்தம் செய்யுங்கள்
7 யெகோவாவுக்குச் செய்யும் நம்முடைய வணக்கத்தில் அவருடைய நாமத்தைத் தெரியப்படுத்துவதும் உட்பட்டிருக்கிறது. குடும்பத்தில் பேசி பழகிக்கொள்ளும் நிகழ்ச்சிகளைக் கொண்டிருப்பது எல்லாரும் ஊழியத்துக்கு ஆயத்தமாக இருக்க உதவிசெய்யும். நாம் உபயோகப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த உபகரணம் நியாயங்கள் புத்தகம். சம்பாஷணைக்குரிய பேச்சுப்பொருளுக்கு ஏற்ற முன்னுரைகள் பக்கங்கள் 9-15-லிருந்து தேர்ந்தெடுக்கப்படலாம். முன்னேற்றத்துக்குத் தேவைப்படக்கூடிய பொருத்தமான யோசனைகளைக் குடும்பத் தலைவன் தெரிவிக்கலாம்.
8 குடும்ப அங்கத்தினரில் ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அங்கத்தினரோ முழுநேர சேவையில் இருக்கக்கூடுமா? (1 கொரி. 16:9) குடும்பத்திலுள்ள எல்லாருடைய பங்கிலும் நல்ல ஒத்துழைப்பையும் ஒழுங்கமைப்பையும் இது தேவைப்படுகிறது. தங்களுடைய வாழ்க்கைப் பாணிகளை எளிமையானதாக ஆக்கிக்கொள்வதன் மூலமும் உதவிசெய்யும் பாங்குடையவர்களாக இருப்பதன் மூலமும் அநேக குடும்பங்கள் இந்த மகிழ்ச்சியையும் சிலாக்கியத்தையும் கொண்டிருக்கின்றன.
9 தகப்பன் அல்லது குடும்பத் தலைவன் தலைமைத் தாங்கி வழிநடத்த வேண்டியதாக இருந்தபோதிலும் யெகோவாவின் வணக்கத்திற்காக குடும்பத்திற்கு உதவிசெய்ய தனிப்பட்ட விதத்தில் தனக்கு பொறுப்பு இருக்கிறது என்பதை ஒவ்வொரு குடும்ப அங்கத்தினரும் நினைவில் வைக்கவேண்டியது அவசியம். அனைவருடைய அக்கறைகளைக் குறித்தும் கவனமாயிருப்பது சந்தோஷமும் ஐக்கியமுமுள்ள ஒரு குடும்பத்தை உண்டுபண்ணும்.