புதிய வெளியீடுகள் தேவ பக்தியினிடமாக நம்மைபயிற்றுவிக்க உதவுகின்றன
1 கடந்த ஆண்டு மாவட்ட மாநாட்டுக்கு ஆஜரானவர்களாக தேவ பக்தியை குறிகோளாக கொண்டு நம்மை நாமே பயிற்றுவித்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைக் குறித்து நாம் அதிக உணர்வுள்ளவர்களாக இருக்கிறோம். (1 தீமோ. 4:7) நிகழ்ச்சிநிரலில் வெளியிடப்பட்ட எல்லாத் தகவல்களையும் பிரதிபலிப்பவர்களாகவும் அதை அனுதின வாழ்க்கையில் கடைப்பிடிக்க முயலுகிறவர்களாகவும் உண்மை வணக்கத்தில் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு நாம் உதவப்படுகிறோம்.
2 என்றபோதிலும் “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டில் நாம் பெற்றுக்கொண்ட அந்த மூன்று புதிய வெளியீடுகளில் குறித்து வைக்கப்பட்டிருக்கும் நிறைவான தகவல்களை நாம் படிப்படியாக கிரகித்துக் கொள்ளுகையில் தானே தேவபக்திக்குரிய நமது பயிற்சி முக்கியமாய் மேம்படுத்தப்படும். நீங்கள் ஏற்கெனவே இந்தப் புதிய வெளியீடுகளை வாசித்துவிட்டீர்களா?
ஒரு புதிய புரோஷுர்
3 நீங்கள் திரித்துவத்தை நம்ப வேண்டுமா? என்ற புரோஷுரில் பயன்படுத்தப்பட்டுள்ள நம்பவைக்கும் வேதப்பூர்வமான விவாதங்கள் திரித்துவம் வெறுத்துத் தள்ளப்பட வேண்டிய பொய்க் கோட்பாடு என்பதை நிலைநாட்ட உதவுவது மட்டுமல்லாமல் கடவுளையும் அவருடைய குமாரனையும் பரிசுத்த ஆவியையும் பற்றிய சத்தியங்களை மற்றவர்களுக்கு விளக்கிக் காட்டுவதற்கும் உதவுகிறது.
4 நமது பைபிள் சார்ந்த நிலைநிற்கையானது “நமக்கு உண்மையில் ஒரே கடவுளும் பிதாவுமுண்டு.” (1 கொரி. 8:6) “தேவனே சத்தியபரர் என்றும் எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வதற்காக” நாம் எல்லாச் சாந்தகுணமுள்ள ஆட்களையும் உற்சாகப்படுத்தும்போது, இந்தப் புதிய புரோஷுர் திரித்துவம் என்ற இந்தப் புறமத கொள்கையின் போலி விவாதத்தை அம்பலப்படுத்துவதற்கு நமக்கு உதவி செய்யும்.—ரோ. 3:4.
இளைஞருக்கு விடைகள்
5 அந்த நேர்முகமான மாநாட்டு சொற்பொழிவையும் இளைஞர் கேட்கும் கேள்விகளும்—பலன் தரும் விடைகளும் என்ற புத்தகத்தை வெளியிடுவதற்காக செய்யப்பட்ட அந்த விசேஷ ஏற்பாடுகளையும் நாம் விரைவில் மறக்கமாட்டோம். அந்தப் புத்தகம் இளைஞருடைய நன்மைக்காக அளிக்கப்பட்ட போதிலும் பெற்றோர், முக்கியமாக, தகப்பன்மார்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்றுவிப்பதற்கும் அவர்களை ‘யெகோவாவின் சிட்சையிலும் போதனையிலும் வளர்ப்பதற்கும்’ இந்தப் புத்தகத்தை பயன்படுத்துவதில் தலைமை தாங்கும்படி ஊக்கமளிக்கப்பட்டார்கள்.—எபே. 6:4.
6 தேவ பக்தியில் தொடர்ந்து பயிற்றுவிப்பை பெறும்படி இளைஞருக்கு உதவுவதற்காக யெகோவாவின் அமைப்பால் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த இன்றியமையாத தகவலை பெற்றோர்களும் பிள்ளைகளும் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். மாநாட்டு சொற்பொழிவில் சுட்டிக்காட்டப்பட்டபடி இது குடும்ப கலந்தாலோசிப்புகளில் செய்யப்படலாம்.
கடவுளுடைய வார்த்தை, மனிதனுடையதல்ல
7 பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, அல்லது மனிதனுடையதா? என்ற புதிய புத்தகம் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இது பைபிள் ஏவப்பட்ட புத்தகம் என்பதையும் “தேவ பக்திக்கேதுவான சத்தியத்தை” அது கொண்டிருக்கிறது என்பதையும் நேர்மையான இருதயமுள்ள ஆட்கள் புரிந்துகொள்வதற்கு உதவும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது. (தீத்து 1:3) இந்தப் புதிய புத்தகம் நம்முடைய வேலைக்கு அது என்னே ஓர் ஊக்குவிப்பாக இருக்க வேண்டும்! ஆனால் ஊழியத்தில் அதைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கு, அதன் போதனைக்குரிய அம்சங்களை நாம் தனிப்பட்ட விதமாய் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். அதை வெளி ஊழியத்தில் பயன்படுத்துகையில் அந்தப் புத்தகத்திலுள்ள திட்டவட்டமான குறிப்புகளுக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்பும் நிலையில் இருக்க வேண்டும்.
8 “தேவ பக்தி” மாவட்ட மாநாட்டில் நாம் பெற்றுக் கொண்ட காலத்துக்கேற்ற அபரிமிதமான ஆவிக்குரிய உணவுக்காக யெகோவா தேவனுக்கு நாம் அனைவரும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! தேவ பக்திக்குரிய நமது போக்கிலே இந்த ஏற்பாடுகளை ஊக்கமாக பயன்படுத்துவதன் மூலம் நமது இருதயப்பூர்வமான போற்றுதலை நடப்பித்துக் காட்ட நாம் தீர்மானமுள்ளவர்களாயிருப்போமாக. இது நமது ஒரே கடவுளும், பிதாவுமாகிய யெகோவாவின் வணக்கத்தாராக ஆவதற்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இந்த ஏற்பாடுகளை பயன்படுத்துவதை உட்படுத்துகிறது.