நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—இளைஞர்களுக்கு
1 இந்த நவீன சகாப்தம் இளைஞர்களுக்கு பொதுவாக மிகக் கடினமான காலமாக நிரூபித்திருக்கிறது. என்றபோதிலும், நூற்றாண்டுகளுக்கு முன்பு கடவுளால் ஏவப்பட்ட ஒரு மனிதன் எழுதினான்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” (சங். 119:9) யெகோவாவின் வார்த்தையின் பேரில் சார்ந்த வழிநடத்துதல் உண்மையிலேயே இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயனளிக்கிறது.
2 விழித்தெழு! பத்திரிகையில் உள்ள “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளில் ஒன்றை வாசித்தப் பிறகு, ஓர் இளம் மனிதன் சொன்னான்: “நான் ஒழுங்காக எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகள் செய்து வந்தேன். ஏனென்றால் அது செய்ய வேண்டிய காரியம் என்று நினைத்தேன். திருமணத்தைக் குறித்து நான் எதுவும் நினைக்கவில்லை. பின்னர் உங்கள் விழித்தெழு! பத்திரிகையை வாசித்தேன். அது என் மதிப்பீடுகளை மேன்மையானதாக மாற்றியது. திருமணம் செய்துகொள்வதற்கு தயாராகும் வரை எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்புகளில் ஈடுபடக்கூடாது என்று நிறுத்திவிட்டேன்.” கொடுக்கப்பட்ட நடைமுறையான ஆலோசனையிலிருந்து அவர் தெளிவாகவே பயனடைந்தார். வேதப்பூர்வ தகவல் அடங்கிய மதிப்பு வாய்ந்த ஊற்றுமூலத்திற்கு இப்பொழுது இளைஞர்களுக்கு எளிதான வழி இருக்கிறது. அது ஒரு புதிய புத்தக வடிவில், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு அல்லது பள்ளியில் இருக்கும் வாலிபர்களுக்கு இது கிடைக்கச் செய்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
இளைஞர்களில் அக்கறை எடுங்கள்
3 யெகோவாவின் வார்த்தையின் மதிப்பைப் போற்றுவதற்கு இளைஞர்களை இணங்க வைப்பது சவாலாயிருக்கக்கூடும். (நீதிமொழிகள் 22:15-ஐ பாருங்கள்.) என்றபோதிலும், அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப் . . . போலவுமானேன்.” (1 கொரி. 9:20) அதேப் போன்று, இளைஞர்கள் பயனுள்ள ஆவிக்குரிய வழிநடத்துதலை கண்டுபிடிக்கவும் போற்றவும் உதவிசெய்வது நீங்கள் இளைஞர்களையும் அவர்கள் பிரச்னைகளையும் புரிந்துகொள்வதை தேவைப்படுத்துகிறது. இளைஞர்களுக்கு எது அக்கறையூட்டுவதாய் இருக்கிறது, மேலும் பள்ளியில், அவர்கள் வாழும் இடங்களில், வேலையில் அவர்களுக்கு என்ன பிரச்னைகள் இருக்கிறது என்பதன் அடிப்படையில் நீங்கள் சிந்திக்க வேண்டும். இளைஞருக்கு சாட்சிகொடுக்கையில், இந்தச் சிந்தனை உங்கள் முகவுரையிலும், பதில்களிலும், கேள்விகளிலும் பிரதிபலிக்கப்பட வேண்டும். இளைஞர் கேட்கின்றனர் என்ற புதிய புத்தகத்திலுள்ள பொருளடக்க அட்டவணை, எதைப்பற்றி பேசவேண்டும் என்பதன் பேரில் மிகச் சிறந்த கருத்துக்களின் ஊற்றுமூலமாய் இருக்கிறது. இந்தப் பொருள்களோடு அறிமுகமாவதன் மூலம், இன்று இளைஞர்கள் எதைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதற்குள் உங்களுக்கு உட்பார்வை இருக்கும்.
நீங்கள் என்ன சொல்லலாம்
4 வீட்டுக்கு வீடுச் செல்கையில், பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். அன்றாடகப் பிரச்னைகளை சமாளிப்பதற்கு ஜனங்களுக்கு உதவ நீங்கள் ஒரு பொது சேவை செய்கிறீர்கள் என்பதை விளக்குங்கள். இந்த வீடுகளில் நீங்கள் பிள்ளைகளோடு ஒருவேளை பேசமுடியும், நடைமுறையான ஆலோசனைக்கு ஓர் உதாரணத்தை புத்தகத்திலிருந்து குறிப்பிட்டுக் காட்டுங்கள். சங்கீதம் 119:9-ன் உண்மைத்தன்மையை அவர்கள் காண உதவுவது தான் உங்கள் இலக்கு என்பதை மனதில் வையுங்கள்.
5 ஓர் இளைஞனோடு பேசுகையில் சிநேகப்பான்மையாய் இருங்கள், அவரை மதிப்புடன் நடத்துங்கள். முதலில் வணக்கம் தெரிவித்த பிறகு, நீங்கள் சொல்லலாம்: “இந்தச் சமுதாயத்தில் இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்னைகளை சமாளிக்க உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உதவ நான் ஒரு பொது சேவையில் ஈடுபட்டிருக்கிறேன். நீங்கள் உண்மையிலேயே செய்யக்கூடாது என்று நினைக்கும் ஏதோவொன்றை செய்யும்படி தூண்டப்பட்ட நிலையில் உங்களை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? அல்லது உங்களுடைய சொந்த விருப்பத்தினால் இல்லாமல் சில சமயங்களில் வெறுமென மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நீங்கள் சில காரியங்களைச் செய்வதற்கு மனச்சாய்வுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அப்பேர்ப்பட்ட அழுத்தங்களை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம் என்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா?” அவருடைய பிரதிபலிப்பிற்குப் பின்பு, புத்தகத்தில் 9-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். பிறகு சொல்லுங்கள்: “பக்கம் 77-ல் இந்தப் புதிய பிரசுரம் என்ன சொல்கிறது என்பதை தயவுசெய்து கவனியுங்கள். (பொருத்தமான ஒரு பாராவை வாசியுங்கள்.) பைபிளைப் படிப்பதானது இந்தப் பிரச்னையை மேற்கொள்ள இளைஞர்களுக்கு உதவும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? (குறிப்புக்காக அனுமதியுங்கள்.) சங்கீதம் 119:9-ல் பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை கவனியுங்கள். (வாசியுங்கள்.) பொருளடக்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருப்பதைப் போன்ற கடினமானச் சூழ்நிலைகளை இளைஞர்கள் சமாளிக்க பைபிள் எவ்வாறு உதவும் என்பதை இப்புத்தகம் காண்பிக்கிறது. (புத்தகத்தை அவர் கையில் கொடுங்கள்.) 15 ரூபாய் நன்கொடைக்கு இதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.”
6 பள்ளிக்கு இன்னும் ஆஜராகிக்கொண்டிருக்கும் ஒரு பிரஸ்தாபியாக நீங்கள் இருந்தால், நம் ராஜ்ய ஊழியம் செப்டம்பர் 1989 இதழில் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவ்வாறு செய்கையில் உங்களுக்கு அநேக சந்தோஷமான பலன்கள் இருக்கும்.
7 யெகோவா ‘ஒருவரும் அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) இதில் இளைஞர்களும் அடங்கியுள்ளனர். என்றபோதிலும், அநேக இளைஞர்கள் அர்மகெதோனை தப்பிப் பிழைக்க மாட்டார்கள். இளைஞர்களுக்கு திறம்பட்ட விதமாய் பிரசங்கிப்பதில் நம்முடைய முயற்சிகள் யெகோவாவின் துதிக்கு ஒரு நல்ல எண்ணிக்கையான இளைஞர்கள் இரட்சிப்படைவதில் விளைவடைவதாக.