ராஜ்ய மன்றங்களை அடையாளங்கண்டுகொள்ளுதல்
ஒவ்வொரு ராஜ்ய மன்றமும் “யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்” என்ற எழுத்துக்களைக் கொண்ட பொருத்தமான பலகையால் தெளிவாக அடையாளங் காட்டப்பட வேண்டும். இந்த எழுத்துப்பலகை நேர்த்தியாகவும் பார்வைக்கும் விரும்பத்தக்கதாகவும் நன்கு செப்பனிடப்பட்டதாகவும் இருக்க வேண்டும்.
2. ஒரே ராஜ்ய மன்றத்தில் வித்தியாசமான மொழிகளை பயன்படுத்தும் சபைகள் கூடுகையில், சாதாரணமாக அந்தந்த சபையின் மொழியில் ராஜ்ய மன்றம் என்று காட்டும் எழுத்துப்பலகை இருக்க வேண்டும். சந்தேகமின்றி இவை அந்த மொழி பேசும் ஆட்கள் நம்முடைய வணக்க ஸ்தலத்தை சுலபமாக அடையாளங்கண்டுகொள்ள உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட ராஜ்ய மன்றத்தை பயன்படுத்தும் சபைகளின் மூப்பர் குழுக்கள் அந்தந்த சபையின் மொழியில் ராஜ்ய மன்றம் என்ற வார்த்தைகளைக் கொண்ட பொருத்தமான எழுத்துப் பலகையை கொண்டிருக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.—பிலி. 2:4.
3. கூடுதலாக, நடைமுறையானதாக இருக்கையில் கூட்டங்கள் நடைபெறும் நேரங்கள் எழுதிவைக்கப்பட வேண்டும். அந்த நேர குறிப்பு சரியானதாக இருக்க வேண்டும். ஒன்றிற்கும் அதிகமான மொழி தொகுதிகள் ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்துகையில், அவர்கள் ஒரு கூட்டு எழுத்துப் பலகையை உபயோகிக்க வேண்டும். அதில் ஒவ்வொரு மொழி தொகுதியின் கூட்டங்கள் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட வேண்டும்.