கேள்விப் பெட்டி
● சபை புத்தகப்படிப்புக்கு ஆஜராகும்போது நாம் எப்படிக் கிறிஸ்தவ நன்நடத்தையை வெளிக்காட்டலாம்?
சாதாரணமாக நாம் நமது அயலகத்தாரால் கவனிக்கப்படுகிறோம். சில வேளைகளில் அவர்கள் நம்முடைய நடத்தையைப் பற்றி குறிப்பு சொல்லக்கூடும், அல்லது அதற்குப் பிரதிபலிக்கக்கூடும். (1 கொரிந்தியர் 4:9-ஐ ஒப்பிடவும்.) யெகோவாவின் ஊழியர்களாக நம்முடைய நடத்தையைப் பற்றிய அவர்களுடைய குறிப்பும் பிரதிபலிப்பும் சாதகமானதாக இருக்க விரும்புகிறோம். (1 பேதுரு 2:12) சபை புத்தகப்படிப்புகளில் நமது நடத்தை சம்பந்தமாக இது உண்மையானதாக இருக்கவேண்டும். பெரும்பான்மையான புத்தகப்படிப்புகள் தனியார் வீடுகளில் நடைபெறுவதால் நாம் செய்யும் எல்லாக் காரியங்களிலும் நமது நன்னடத்தை வெளிக்காட்டப்படுவதற்கு விசேஷ கவனம் செலுத்தப்பட வேண்டும். புத்தகப்படிப்பு நடத்தப்படும் இடத்தைச் சுற்றியுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் குறைவாக இருக்குமானால் அயலகத்தார் பேரிலுள்ள நமது அன்பு அவருக்கு அசெளகரியத்தை அல்லது மனவருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முறையில் நமது வாகனங்களை கரிசனையற்ற விதமாய் நிறுத்தி வைப்பதைத் தவிர்க்கச்செய்யும்.
நாம் எங்கு கூடினாலும் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். இது கூட்டத்துக்கு முன்பும் பின்பும் அதிக உற்சாகமான உரையாடல்களில் விளைவடைகிறது. (மீகா 2:12) நன்நடத்தையும் மற்றவர்கள் பேரிலுள்ள கரிசனையும் நமது உரையாடலின் சப்தம் மிதமான அளவில் வைத்துக்கொள்வதைத் தேவைப்படுத்துகிறது. (மத். 7:12; கலா. 6:10) நம்முடைய பிள்ளைகள் வெளியில் ஓடுவதையும் மற்றவர்களின் உடமைகளை நாசப்படுத்துவதையும் கட்டுப்படுத்தும்படி கிறிஸ்தவ அன்பு தூண்டும். (நீதி. 29:15; 1 கொரி. 13:4, 5) இது புத்தகப் படிப்பு நடத்தப்படும் அந்த இல்லங்களிலும் மரியாதையுள்ள நடத்தை கொண்டிருப்பதை உட்படுத்துகிறது. ஒழுங்கற்ற நடத்தை காணப்படுமானால் மூப்பர்கள் அன்பார்ந்த மற்றும் உறுதியான அறிவுரைகளைக் கொடுக்க தாமதிக்கக்கூடாது. இது அயலார் குறைகூறுவதிலும், உபசரிப்பு உள்ளத்தோடு தனது வீட்டை புத்தகப்படிப்பு நடத்துவதற்காக கொடுத்திருப்பவருக்கு தொந்தரவுகளை உண்டுபண்ணுவதிலும், அல்லது அந்தக் குறிப்பிட்ட புத்தகப்படிப்புக்கு வருகிறவர்களுக்கு அசெளகரியங்களை உண்டுபண்ணுவதிலும் விளையக்கூடிய பிரச்னைகள் எழும்பாதபடி தவிர்க்கும்.