நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டிற்கான கேள்விகள்
முதல் வாரம்
பக்கம் 3, தலைப்பு: “நீங்கள் இதை நம்பவேண்டுமா?”
1, 2. திரித்துவக் கோட்பாட்டைப் பற்றி என்ன கருத்து நிலவுகிறது?
3. திரித்துவத்தைப் பற்றிய குறிப்பு, நம்முடைய நாளில் ஏன் அக்கறைக்குரியது?
4. திரித்துவப் போதகம் என்றால் என்ன?
5. அக்கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்களின் நம்பிக்கை என்ன?
6. திரித்துவப் போதகத்தின் தொடக்கத்தைப் பற்றி ஆதரவாளர்களின் கருத்தென்ன? குற்றங்கண்டுபிடிப்போரின் கருத்தென்ன?
7. சில விளைவுகள் என்ன: (அ) திரித்துவம் உண்மையானால்? (ஆ) அது பொய்யானால்?
8. இந்த சிற்றேட்டில் எதை கலந்தாராயப் போகிறோம்?
பக்கம் 3, தலைப்பு: “திரித்துவத்தை எவ்வாறு விளக்குகின்றனர்?”
1. திரித்துவத்தை கத்தோலிக்க சர்ச் எப்படி விளக்குகிறது?
2, 3. மற்ற அநேக சர்ச்சுகள் இந்தக் கோட்பாட்டை எப்படி விளக்குகின்றன?
பக்கம் 4:
1. திரித்துவத்தின் இப்படிப்பட்ட விளக்கங்களை அநேகர் எப்படிக் கருதுகின்றனர்?
2-4. திரித்துவக் கோட்பாட்டைப் பற்றிய வித்தியாசப்பட்ட சில கருத்துக்கள் யாவை?
5, 6. கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா இறையியல் மாணாக்கர்களையும் போதகர்களையும் பற்றி என்ன சொல்லுகிறது, மேலும் இக்கருத்துக்கள் உண்மையாயென நீங்கள் எப்படி உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்?
7. ஜெஸ்யுட் போதகர் ஒருவர் திரித்துவத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்?
8. என்ன வலுவான கருத்துக்களை ஒரு கத்தோலிக்க இறையியலாளர் தெரிவித்தார்?
9. திரித்துவம் தோன்றிய விதத்தை சிலர் எவ்வாறு விளக்குகின்றனர்?
பக்கம் 5:
1, 2. திரித்துவம் தெய்வீக வெளிப்படுத்துதலினால் வந்தது என்று சொல்வது என்ன பெரிய பிரச்சினையை கிளப்புகிறது?
3. ‘உண்மையான கடவுளையும் அவருடைய குமாரனையும் அறிய’ மக்கள் இறையியல் வல்லுநர்களாக இருக்க வேண்டுமா?
பக்கம் 5, தலைப்பு: “இது தெளிவாகவே பைபிள் போதகமா?”
1. திரித்துவம் உண்மையெனில் அதன் தெளிவான விளக்கத்தை பைபிளில் எதிர்பார்ப்பது ஏன் நியாயமானது?
2. முதல் நூற்றாண்டு விசுவாசிகள் வேத எழுத்துக்களை எப்படி கருதினர்?
3, 4. அப்போஸ்தலனாகிய பவுலும், இயேசுவும் தங்கள் போதகத்திற்கு ஆதாரமாக எதைப் பயன்படுத்தினர்?
5, 6. (அ) முதல் நூற்றாண்டு விசுவாசிகள் வேத எழுத்துக்களுக்கு எந்தளவு மதிப்புக்குக் கொடுத்தார்கள்? (ஆ) திரித்துவம் உண்மையெனில் பைபிளில் எதை நாம் எதிர்பார்ப்பது சரியானது?
7-9. (அ) “திரித்துவம்” என்ற வார்த்தையைப் பற்றி புராட்டஸ்டண்ட், கத்தோலிக்க ஆதார மூலங்கள் இரண்டும் என்ன ஒத்துக்கொள்ளுகின்றன, எப்பொழுது இந்த வார்த்தை சர்ச் இறையியலில் முதல் முறையாக காணப்பட்டது? (ஆ) திரித்துவத்திற்கான லத்தீன் வார்த்தையை டெர்ட்டுலியன் பயன்படுத்தினது, அவர் அந்தக் கோட்பாட்டை கற்பித்தார் என்று அர்த்தப்படுத்துமா?
பக்கம் 6:
1, 2. எபிரெய வேத எழுத்துக்களையும், திரித்துவத்தையும் பற்றி இரண்டு என்ஸைக்ளோப்பீடியாக்கள் என்ன ஒத்துக்கொள்ளுகின்றன?
3. ஜெஸ்யுட் போதகர் ஒருவர் எபிரெய வேத எழுத்துக்கள் அளிக்கும் சாட்சியைப் பற்றி என்ன கூறினார்?
4. எபிரெய வேத எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு என்ன காட்டுகிறது?
5-7. திரித்துவத்தையும், கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களையும் பற்றி இறையியல் வல்லுநர்களின் கருத்துக்கள் யாவை?
8-10. கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் திரித்துவம் போதிக்கப்படவில்லை என்று காண்பிக்க எந்த மேற்கோள்கள் உதவுகின்றன?
11, 12. எப்பொழுது கிறிஸ்தவமண்டலத்தில் திரித்துவம் நுழைக்கப்பட்டிருக்கலாம், இதைப் பற்றி இரண்டு சரித்திர ஆசிரியர்களின் அபிப்பிராயம் என்ன?
13. அத்தாட்சி எந்தத் தெளிவான முடிவுக்கு வழிநடத்துகிறது?
14-17. பூர்வ கிறிஸ்தவர்கள் திரித்துவத்தைக் கற்பித்தார்களா?
பக்கம் 7:
1. எந்த நூற்றாண்டு வரை திரித்துவப் போதனை உறுதியாக நிலைநாட்டப்படவில்லை?
2-4. இரண்டாம் நூற்றாண்டு மதப்போதகர்களாகிய ஜஸ்டின் மார்டரும் ஐரீனியஸும் கடவுளையும் கிறிஸ்துவையும் எவ்வாறு கருதினர்?
5, 6. அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த கிளெமென்ட் மற்றும் டெர்ட்டுலியனின் நோக்குநிலை என்ன?
7, 8. மூன்றாம் நூற்றாண்டில் ஹிப்போலிட்டஸும் ஆரிஜனும் என்ன கருத்துத் தெரிவித்தனர்?
9. ஒரு சரித்திர ஆசிரியர் திரித்துவத்தை ஆதரிக்கும் ஆதாரத்தை எப்படித் தொகுத்துரைக்கிறார்?
10. பைபிள் மற்றும் சரித்திரத்தின் அத்தாட்சியிலிருந்து என்ன தெளிவாகத் தெரிகிறது?
இரண்டாவது வாரம்
பக்கம்7, தலைப்பு: “திரித்துவக் கோட்பாடு எவ்வாறு தோன்றிற்று?”
1, 2. பொ.ச. 325-ல் நடந்த நைசியா ஆலோசனை சபையில் திரித்துவப் போதகம் முழுவதுமே உருவாக்கப்பட்டதா?
பக்கம் 8:
1. கான்ஸ்டன்டீன் நைசியா ஆலோசனை சபையை ஏன் கூட்டினான்?
2. கான்ஸ்டன்டீனுடைய மதமாற்றத்தைப் பற்றி ஒரு சரித்திர ஆசிரியர் என்ன சொல்லுகிறார்?
3. நைசியாவில் கான்ஸ்டன்டீன் என்ன முக்கிய பங்காற்றினான்?
4. நைசியா ஆலோசனை சபையின் இறையியல் கேள்விகள் கிளப்பிய வாக்குவாதத்தை உண்மையில் கான்ஸ்டன்டீன் விளங்கிக்கொண்டானா?
5. நைசியா ஆலோசனை சபை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் என்ன கேள்விகள் கேட்கப்படலாம்?
6, 7. (அ) நைசியா ஆலோசனை சபைக்குப் பின்பு என்ன நடந்தது? (ஆ) பொ.ச. 381-ல் கான்ஸ்டான்டிநோப்பிலின் ஆலோசனை சபையால் என்ன தீர்மானிக்கப்பட்டது?
8. கான்ஸ்டான்டிநோப்பிலின் ஆலோசனை சபைக்குப் பின்பு என்ன நடந்தது, எப்பொழுது திரித்துவம் முறைப்படுத்தப்பட்ட சமயக்கோட்பாடானது?
பக்கம் 9:
1. அதனேசியஸ் யார்? அவனுடைய பெயரை உடைய விசுவாசப் பிரமாணம் என்ன சொல்லுகிறது?
2. (அ) தன்னுடைய பெயரைத் தாங்கிய அந்த விசுவாச பிரமாணத்தை அதனேசியஸ் இயற்றினானா? (ஆ) ஐரோப்பாவில் மிக பரவலாகப் பரவுவதற்கு அதனேசியன் விசுவாசப் பிரமாணம் எவ்வளவு காலம் எடுத்தது?
3. நூற்றாண்டுகளினூடே திரித்துவம் விரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு. எது வழிநடத்தினது?
4. திரித்துவத்தின் சரித்திரம் பைபிள் தீர்க்கதரிசனத்தோடு எப்படி பொருந்துகிறது?
5, 6. பவுலும், மற்ற பைபிள் எழுத்தாளர்களும் என்ன முன்னறிவித்தார்கள்?
7. (அ) மெய்க் கிறிஸ்தவத்திலிருந்து விலகி போதலின் பின்னால் யார் இருப்பதாக இயேசு காண்பித்தார்? (ஆ) என்ன நடந்தது என்பதை என்ஸைக்ளோப்பீடியா எப்படி விளக்குகிறது?
8. பூர்வ காலங்களில் என்ன பொதுவான பொய்மத வணக்கமுறை இருந்துவந்தது?
பக்கம் 10:
1. பூர்வ புறமதங்களில், இந்து, புத்தமதம் மற்றும் கிறிஸ்தவ மண்டல மதங்களில் காணப்படும் ஒற்றுமைகள் யாவை?
பக்கம் 11:
1. திரித்துவத்தைப் பற்றிய கருத்துக்கள் கிறிஸ்தவத்துக்குள் ஊடுருவியதை சரித்திரஆசிரியர்கள் எப்படி விவரிக்கின்றனர்?
2, 3. எகிப்திய புறமத திரித்துவக் கடவுட்களின் வணக்கத்திற்கும், கிறிஸ்தவ மண்டல திரித்துவத்திற்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது?
4. இரண்டு மத புத்தகங்கள் திரித்துவத்தின் தொடக்கத்தைப் பற்றி என்ன முடிவுக்கு வந்திருக்கின்றன?
5. புறமத திரித்துவத்திற்கும், கிறிஸ்தவ மண்டல திரித்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி ஹேஸ்டிங்ஸின் மதம் மற்றும் ஒழுக்கநெறியின் என்ஸைக்ளோப்பீடியா என்ன சொல்லுகிறது?
6, 7. கிறிஸ்தவ மண்டலத்தில் திரித்துவத்தின் பிற்பகுதி பிரபலமாவதற்கு பிளேட்டோவின் தத்துவங்கள் எப்படி உதவின?
8, 9. திரித்துவத்தின் வளர்ச்சியில் பிளேட்டோவின் பங்கை சரித்திர ஆசிரியர்களால் எப்படி விளக்குகின்றனர்?
10, 11. பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் முடிவுக்குள் என்ன நடந்தது?
12. ஒரு மத புத்தக குறிப்பின்படி திரித்துவத்தின் வளர்ச்சியைப் பற்றி என்ன சொல்லலாம்?
பக்கம் 12:
1. பைபிள் தீர்க்கதரிசனத்திற்கிசைய பொ.ச. நான்காம் நூற்றாண்டில் எது முழு நிறைவுக்கு வந்தது?
2. திரித்துவக் கோட்பாடு கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது என்று எது காட்டுகிறது?
3, 4. (அ) திரித்துவத்தை ஏற்றுக்கொள்வது கிறிஸ்தவர்களுக்கு ஏன் நியாயமானதாக இருக்க முடியாது? (ஆ) திரித்துவத்தைப் பற்றி என்ன திட்டவட்டமான முடிவுக்கு நாம் வரலாம்?
மூன்றாவது வாரம்
பக்கம் 12, தலைப்பு: “கடவுளையும் இயேசுவையும் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?”
1, 2. மக்கள் திரித்துவத்தைப் பற்றி முன்னதாகவே உருவாக்கி வைத்துள்ள எண்ணம் எதுவும் இல்லாமல் பைபிளை வாசித்தால், கடவுளையும் இயேசுவையும் பற்றி என்ன முடிவுக்கு வருவார்கள்?
3, 4. இறையியல் சரித்திரப் பேராசிரியர் ஒருவர் கடவுளின் நோக்குநிலையைப் பற்றி என்ன சொல்லுகிறார்: (அ) எபிரெய வேத எழுத்துக்களில் (ஆ) கிரேக்க வேத எழுத்துக்களில்?
பக்கம் 13:
1. உபாகமம் 6:4-ன் இலக்கணம் கடவுள் ஒரு நபர் என்று எப்படி காட்டுகிறது?
2. கடவுளின் இயல்பு பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எதை உறுதிப்படுத்தினார்?
3. பைபிள் முழுவதிலும் கடவுள் எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறார்?
4. திரித்துவம் உண்மையாக இருந்திருந்தால், ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர்கள் எதைத் தெளிவுபடுத்தியிருப்பார்கள்?
5. பைபிள் எழுத்தாளர்கள் எதைத் தெளிவுபடுத்தினார்கள்?
6. (அ) இயேசு கடவுளைப் பற்றி என்ன சொன்னார்? (ஆ) ஏன் யெகோவா மாத்திரமே சர்வவல்லமையுள்ளவர் என்று அழைக்கப்படுகிறார்?
7. யெகோவாவை எபிரெய வேத எழுத்துக்கள் ஏன் பன்மையில் குறிப்பிடுகிறது?
8. கடவுள் என்பதற்கான எபிரெய வார்த்தை பன்மையில் இருந்தபோதிலும் அது ஒரு நபரை மட்டுமே குறிக்கிறது என்று எப்படி விளக்கலாம்?
9. ‘எலோஹிம்’ என்பதன் அர்த்தம் ஏன் திரித்துவத்திற்கு எதிராக விவாதிக்கிறது?
10. “கடவுள்” அல்லது “கடவுட்கள்” என்ற வார்த்தைகளை பைபிள் யாருக்கும் பொருத்துகிறது?
பக்கம் 14:
1. பைபிள் பயன்படுத்துகிற “கடவுள்,” “கடவுட்களு”க்கான எபிரெய வார்த்தைகள் ஏன் திரித்துவத்தை ஆதரிப்பதில்லை?
2. இயேசு, தான் எங்கிருந்து வந்ததாக சொன்னார்?
3. மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்க்கையில் இயேசு எப்படி இருந்தார்?
4. மனித வாழ்க்கைக்கு முன்னான வாழ்க்கையில் இயேசுவை பைபிள் எப்படி அழைக்கிறது, அந்தப் பதத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
5. நீதிமொழிகள் புத்தகம் “ஞானம்” என்று யாரை குறிப்பிடுகிறது, மேலும் அவருடைய ஆரம்பம் எப்படி ஆயிற்று?
6. இயேசு மனிதனாவதற்கு முன்பிருந்த வாழ்க்கையைப் பற்றி நீதிமொழிகள் 8:30 என்ன சொல்லுகிறது, மேலும் கொலோசெயர் 1:6 இந்தப் பாகத்தை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?
7. சிருஷ்டிப்பு வேலையில் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இருந்த உறவை பற்றி பைபிள் எப்படி குறிப்பிடுகிறது?
8. ஆதியாகமம் 1:26-ல் “நாம்,” “நமது” என்ற வார்த்தைகளை உபயோகித்திருப்பது ஏன் திரித்துவத்தை குறிக்காது?
9, 10. இயேசு சோதனைக்குள்ளானது அவர் கடவுளாக இல்லை என்று எப்படி காட்டுகிறது?
பக்கம் 15:
1, 2. உண்மைதவறாமை என்ற விஷயத்தை இயேசு தெரிந்தெடுத்தது எதை நிரூபித்து காட்டுகிறது?
3, 4. ஆதாமின் பாவத்தை சரியீடு செய்ய எது மீட்கும்பொருளாக இருக்க வேண்டும்?
5. (அ) இயேசு கடவுளின் பாகமாக இருந்திருந்தால், மீட்பின் கிரயபலியைக் குறித்ததில் எதை அர்த்தப்படுத்தும்? (ஆ) பூமியில் இருந்த போது இயேசுவின் நிலை அவர் கடவுளாக இருந்திருக்க முடியாது என்பதை எப்படி காட்டியது?
6. இயேசு கடவுளின் “ஒரே பேரான குமாரன்” ஆக இருந்தார் என்ற உண்மை எப்படி திரித்துவத்திற்கு எதிராக வாதிடுகிறது?
7. எந்த வழியில் சில மத குறிப்புரையாளர்கள் “ஒரே பேறானவர்” என்ற பதத்தை விளக்க முயலுகின்றனர், ஆனால் அது ஏன் நியாயமானதல்ல?
8. இயேசுவைத் தவிர வேறு யாருக்கும் பைபிள் “ஒரே பேறானவர்” என்ற சொல்லை பயன்படுத்துகிறது, என்ன அர்த்தத்தோடு?
பக்கம் 16:
1, 2. “ஒரே பேறானவர்” என்பதற்கான கிரேக்க வார்த்தை என்ன, இதன் பொருள் என்ன?
3. பைபிள் எந்த அர்த்தத்தில் கடவுளை இயேசுவின் பிதா என குறிப்பிடுகிறது?
4. “ஒரே பேறானவர்” என்ற பதத்தை பைபிள் இயேசுவிற்கு உபயோகிப்பது ஏன் குறிப்பிடத்தக்கது?
5. ரோம போர்வீரர்களும் ஏன் பிசாசுகளுங்கூட இயேசுவைப் பற்றி என்ன அறிந்திருந்தனர்?
6. இயேசு ஏன் கடவுளாக இருக்க முடியாது?
7. இயேசு “மத்தியஸ்தராக” இருப்பது அவர் கடவுள் இல்லை என்று எப்படி காட்டுகிறது?
8. கடவுளையும், இயேசுவையும் பற்றி பைபிளின் தெளிவான போதகம் என்ன?
நான்காம் வாரம்
பக்கம் 16, தலைப்பு: “கடவுள் எப்பொழுதும் இயேசுவுக்கு மேலானவரா?”
1, 2. கடவுளிடம் தமக்கிருந்த உறவை தெளிவாக நிரூபித்துக் காட்ட இயேசு என்ன செய்தார்?
பக்கம் 17:
1. இயேசு தன்னைப் பற்றி என்ன சொன்னார்? கடவுளிலிருந்து அவர் வேறுபட்டவர் என்பதை இது எவ்வாறு காட்டுகிறது?
2. கடவுளும், இயேசுவும் வேறுபட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதை பவுல் எப்படி குறிப்பிட்டு காட்டினார்?
3. ஒரு காரியத்தை நிரூபிக்க இரண்டு சாட்சிகள் தேவைப்படுவதாக மோசேயின் நியாயப்பிரமாணம் சொல்லுகிறது. இயேசுவும் கடவுளும் சாட்சி கொடுத்த விஷயத்தில் இது எதைக் காட்டுகிறது?
4. தான் கடவுளின் பாகமாக இருக்கவில்லை என்பதை இயேசு மாற்கு 10:18-ல் எப்படி காட்டினார்?
5. கடவுளின் மேலான நிலையை இயேசு கூறின எந்த வார்த்தைகள் காட்டுகின்றன?
6. இயேசு கொடுத்த ஓர் உவமை, கடவுளுக்கு அவருடைய கீழ்ப்படிதலை எவ்வாறு வெளிப்படுத்தியது?
7. இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவரை யாராக கருதினர்?
பக்கம் 18:
1. இயேசு கடவுள் அல்ல என்பதை அவருடைய முழுக்காட்டுதல் எவ்வாறு காட்டுகிறது?
2. யெகோவா இயேசுவை அபிஷேகம் செய்ததானது எதைக் குறிப்பிட்டு காட்டுகிறது?
3. இரண்டு சீஷர்களின் தாயிடம் பேசும் போது, தன்னுடைய பிதாவின் மேலான நிலையை இயேசு எவ்வாறு குறிப்பிட்டார்?
4. இயேசுவின் ஜெபங்கள் எதைக் காட்டுகின்றன?
5. இயேசு மரணத் தருவாயில் இருக்கையில் அவருடைய பலமான சத்தம் கடவுளின் மேலான நிலையை எப்படி வெளிப்படுத்தினது?
6. இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவர் கடவுளாயிருக்கிறார் என்பதற்கு எதிராக எவ்வாறு விவாதிக்கின்றன?
7. அற்புதங்களை நடப்பிக்க இயேசுவுக்கு இருந்த திறமை, அவர் கடவுள் என ஏன் அர்த்தமாகாது?
பக்கம் 19:
1. இந்தக் காரிய ஒழுங்குமுறை எப்பொழுது முடிவடையும் என்று ஏன் இயேசுவுக்குத் தெரியவில்லை?
2. இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று எபிரெயர் 5:8 எப்படிக் காட்டுகிறது?
3. இயேசு கடவுளாக இருக்க முடியாது என்று வெளிப்படுத்துதல் 1:1 எப்படி நிரூபிக்கிறது?
4, 5. உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இயேசு மேலான ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டது எதை குறிக்கிறது?
6-8. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பற்றிய பின்வரும் குறிப்புகள், என்ன வழியில் திரித்துவத்திற்கு எதிராக விவாதிக்கிறது? (அ) எபிரெயர் 9:24; (ஆ) அப்போஸ்தலர் 7:55; (இ) வெளிப்படுத்துதல் 4:8 முதல் 5:7 வரை.
9, 10. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பற்றி ரைலண்ட்ஸ் வெளியீடு என்ன குறிப்பிடுகிறது?
பக்கம் 20:
1. எவ்வளவு காலத்திற்கு இயேசு தொடர்ந்து கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருப்பார்?
2. இயேசுவைப் பார்க்கிலும் கடவுளுக்கு இருக்கும் உயர்வான ஸ்தானத்தை 1 கொரிந்தியர் 11:3 எவ்வாறு காட்டுகிறது?
3-5. சமீபகால ஆராய்ச்சி பெரும்பாலான அறிஞர்களை என்ன முடிவுக்கு வரும்படி வழிநடத்தியிருக்கிறது?
ஐந்தாவது வாரம்
பக்கம் 20, தலைப்பு: “பரிசுத்த ஆவி—கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி”
1. திரித்துவப் போதகம் பரிசுத்த ஆவியைப் பற்றி என்ன சொல்லுகிறது?
2. பைபிளில் “ஆவி” என்ற வார்த்தைக்கு எந்த எபிரெய, கிரேக்க வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது?
3, 4. ஆதியாகமம் 1:2-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பரிசுத்த ஆவியை என்னவென்று பைபிள் சொல்லுகிறது?
5. கடவுளுடைய ஆவி எப்படி அவருடைய ஊழியர்களை கற்பித்து அறிவொளியூட்டுகிறது என்பதற்கு உதாரணங்கள் கொடுங்கள்.
6. பைபிளின் எழுத்தாளர்கள் எப்படி பரிசுத்த ஆவியினால் பலனடைந்தனர்?
7. பரிசுத்த ஆவி ஒரு சக்தி என்பதை என்ன உதாரணங்கள் தெளிவாக்குகின்றன?
பக்கம் 21:
1. என்ன வழிகளில் கடவுள் தம்முடைய ஆவியை உபயோகிக்கிறார்?
2. கடவுளுடைய ஆவி அவருடைய ஊழியர்களுக்கு எதை கொடுக்க முடியும்?
3. சிம்சோனுக்கு சக்தி எங்கிருந்து வந்தது, அந்த சக்தி ஓர் ஆளாக இருந்ததா?
4. எந்த வடிவத்தில் பரிசுத்த ஆவி இயேசுவின் மீது வந்தது, இது எதைச் செய்ய அவருக்கு உதவியது?
5, 6. எந்த வடிவத்தில் பரிசுத்த ஆவி சீஷர்கள் மீது வந்தது, அவர்கள் எதைச் செய்ய இது உதவியளித்தது?
7. பரிசுத்த ஆவியை விவரிக்க ஆளைக் குறிப்பிடும் சொற்களை பைபிள் உபயோகிப்பதைப் பற்றி, இறையியல் வல்லுநர் ஒருவர் என்ன சொல்லுகிறார்?
8. ஆளாக இல்லாத சிலவற்றை வேத எழுத்துக்கள் எப்படி ஆட்களைப்போல் உருவமைத்து பேசுகின்றன?
பக்கம் 22:
1. பரிசுத்த ஆவி ஓர் ஆள் இல்லை என்பதை 1 யோவான் 5:6-8 எவ்வாறு குறிப்பிட்டுக் காட்டுகிறது?
2. பைபிளின் என்ன பொதுவான சொற்கள் பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல என்பதைக் காட்டுகின்றன?
3. பரிசுத்த ஆவி பேசுகிறதென்று பைபிள் சொல்லுவதை நாம் எப்படி விளக்கிக் காட்டலாம்?
4. “பரிசுத்த ஆவியின் நாமத்தில்” என்று மத்தேயு 28:19 சொல்வதன் அர்த்தம் என்ன?
5. (அ) “சகாயர்” என்பதற்கான கிரேக்க வார்த்தையை இயேசு பயன்படுத்தியபோது ஏன் அவர் ஆண்பாலை பயன்படுத்தினார்? (ஆ) “ஆவி” என்பதற்கு அஃறிணை கிரேக்க வார்த்தை தொடர்பாக என்ன சுட்டுப்பெயர் பயன்படுத்தப்பட்டது?
6. ஆண்பால் சுட்டுப்பெயர்களுடன் “ஆவி” என்ற வார்த்தையை உபயோகிப்பது சரியல்லவென்று எப்படி கத்தோலிக்க பைபிள் ஒத்துக்கொள்ளுகிறது?
7. “சகாயர்” என்ற வார்த்தையை கிரேக்க வசனம் ஆண்பால் சுட்டுப்பெயர்களுடன் ஏன் பயன்படுத்துகிறது?
8-10. பரிசுத்த ஆவியைப் பற்றி கத்தோலிக்க மத புத்தகம் மற்றும் இறையியல் வல்லுநர் ஒப்புக்கொள்ளும் கருத்துக்கள் யாவை?
11, 12. பரிசுத்த ஆவியைப் பற்றிய பைபிளின் நோக்குநிலையை, கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா மற்றும் கத்தோலிக்க அகராதி எப்படி ஆதரிக்கின்றன?
13. பரிசுத்த ஆவி ஓர் ஆள் என்று கிறிஸ்தவமண்டலம் அறிக்கை செய்தது எப்பொழுது?
பக்கம் 23:
1. பரிசுத்த ஆவி என்றால் என்ன, அது எதுவல்ல?
பக்கம் 23, தலைப்பு: “திரித்துவத்தை ‘நிரூபிக்கும்’ வசனங்களைப் பற்றியதென்ன?”
1, 2. திரித்துவத்தை ஆதரிப்பதாக நிரூபணம் அளிக்கிற பைபிள் வசனங்களை வாசிக்கையில் எதை நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்?
3. என்ன மூன்று “நிரூபிக்கும் வசனங்களை” கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா அளிக்கிறது?
4. திரித்துவத்திற்கு நிரூபணமாக அளிக்கப்பட்ட வசனங்கள் என்ன சொல்லுகின்றன?
5-7. மெக்ளின்டாக் மற்றும் ஸ்டிராங்ஸ் சைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்ளுகிறபடி, திரித்துவத்திற்கு நிரூபணமாக அளிக்கப்படும் இந்த வசனங்கள் உண்மையில் எதை நிரூபிக்கின்றன?
8. கடவுள், இயேசு மற்றும் பரிசுத்த ஆவி பற்றி மத்தேயு 3:16-ல் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இது திரித்துவத்தை ஏன் ஆதரிப்பதில்லை?
9. சில பழைய மொழிபெயர்ப்புகளில் காணப்படும் 1 யோவான் 5:7-ஐ நாம் ஏன் பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம்?
பக்கம் 24:
1. மற்ற “நிரூபிக்கும் வசனங்கள்” திரித்துவத்தை ஏன் ஆதரிப்பதில்லை?
2. “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்று இயேசு தாமே எப்படி காண்பித்தார்?
3. “ஒன்று” என்பதற்கான கிரேக்க வார்த்தையை பவுல் பயன்படுத்தியது, யோவான் 10:30-ல் உள்ள அதே வார்த்தை எண்ணத்திலும் நோக்கத்திலும் ஒன்றுபட்டிருப்பதை எப்படி அர்த்தப்படுத்துகிறது?
4. திரித்துவத்தை ஆதரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட யோவான் 10:30 பற்றி ஜான் கால்வின் பதினாறாம் நூற்றாண்டில் என்ன சொன்னார்?
5. யோவான் 10-ம் அதிகாரத்தில் இயேசு தாம் கடவுள் இல்லை என்று எப்படி விவாதித்தார்?
ஆறாவது வாரம்
6-8. யோவான் 5:18-ல் இயேசுவுக்கு எதிராக என்ன பொய் குற்றச்சாட்டை யூதர்கள் கொண்டுவந்தனர், அதை அவர் எப்படித் தவறென நிரூபித்தார்?
பக்கம் 25:
1. பிலிப்பியர் 2:6-ஐ டூவே மொழிபெயர்ப்பும் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பும் எப்படி மொழிபெயர்க்கின்றன, என்ன நோக்கத்தோடு?
2-7. பற்பல பைபிள் மொழிபெயர்ப்புகள் பிலிப்பியர் 2:6-ஐ எவ்வாறு மொழிபெயர்க்கின்றன, மேலும் டூவே மொழிபெயர்ப்பும் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பும் கொடுக்க நினைக்கும் அர்த்தத்திற்கு எதிரான அர்த்தத்தை எவ்வாறு கொடுக்கின்றன?
8, 9. (அ) பிலிப்பியர் 2:6-ன் அதிக திருத்தமான மொழிபெயர்ப்பைப் பற்றி என்ன விவாதம் செய்யப்படுகிறது? (ஆ) பிலிப்பியர் 2:6-ல், பயன்படுத்தப்பட்ட கிரேக்க மொழிநடை, இயேசு கடவுளுக்குச் சமமாக இருந்தார் என்ற எண்ணத்தை ஏன் அனுமதிப்பதில்லை?
10. கடவுளோடு சமமாக இருப்பதை இயேசு தவறாக எண்ணவில்லை என்று காட்டும் விதமாக பிலிப்பியர் 2:6-ஐ மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்புகள் என்ன செய்கின்றன, ஆனால் கிரேக்கை திருத்தமான முறையில் படிப்பது எதை வெளிப்படுத்துகிறது?
11. இயேசு கடவுளுக்குச் சமமாக இருக்க விரும்பவில்லை என்று பிலிப்பியர் 2:6-க்கு முன்சொல்லப்பட்ட வசனங்கள் எப்படி காண்பிக்கின்றன?
12. உண்மையில் பிலிப்பியர் 2:3-8 எதைப் பற்றிப் பேசுகிறது?
பக்கம் 26:
1. திரித்துவக் கோட்பாட்டாளர்கள் யோவான் 8:58-ஐ திரித்துவத்திற்கு ஆதரவாக உபயோகிக்க எவ்வாறு முயலுகின்றனர்?
2. “இருக்கிறேன்” என்ற பதம் யாத்திராகமம் 3:14-ல் எப்படி உபயோகிக்கப்படுகிறது, இது எதை அர்த்தப்படுத்துகிறது?
3. யோவான் 8:58-ல் (தமிழ், UV) “இருக்கிறேன்” என்ற வார்த்தையை இயேசு எப்படி உபயோகித்தார்?
4-8. பல்வேறு பைபிள் மொழிபெயர்ப்புகள் யோவான் 8:58-ஐ எப்படி மொழிபெயர்க்கின்றன?
9. யோவான் 8:58-ன் உண்மையான கிரேக்க அர்த்தம் என்ன?
10. யோவான் 8:58-க்கு முன்பான வசனங்கள், இயேசு எதை அர்த்தப்படுத்தினார் என்று எப்படி காட்டுகிறது?
11. தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு யோவான் 1:1-ஐ எப்படி வாசிக்கிறது?
12. ஒரு கத்தோலிக்க எழுத்தாளர் கவனித்த விதமாக தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு கூட “அந்த வார்த்தை” சர்வவல்லமையுள்ள கடவுளாக இருக்க முடியாது என்று எப்படி காட்டுகிறது?
பக்கம் 27:
1-10. யோவான் 1:1-ன் பிற்பகுதியை எப்படி வேறு பல பைபிள் மொழிபெயர்ப்புகள் மொழிபெயர்க்கின்றன?
11. யோவான் 1:1-ன் முதல் தியாஸ் சம்பந்தமாக உபயோகித்த கிரேக்க சுட்டிடைச் சொல் என்ன காண்பிக்கிறது?
12. யோவான் 1:1-ன் பிற்பகுதியில் இரண்டாவது முறையாக உபயோகித்த தியாஸ் சுட்டிடைச் சொல் இல்லாததால் அந்தப் பதத்திற்கு என்ன நேரடியான மொழிபெயர்ப்பு இருக்கும்?
13. (அ) கோய்னி கிரேக்க மூலவசனத்தில் இரண்டாவது தியாஸக்கு முன்னால் ஒரு பொதுநிலைச் சுட்டிடைச் சொல் ஏன் இல்லை? (ஆ) ஒரு பயனிலை பெயர்ச்சொல்லுக்கு முன்னால் திட்டமான சுட்டிடைச் சொல் வராவிடில் எப்போது அது பொதுநிலையானதாயிருக்கலாம்?
14. யோவான் 1:1-ன் பிற்பகுதியைப் பற்றி பைபிள் இலக்கிய பத்திரிகை என்ன சொல்லுகிறது?
15. மனித வாழ்க்கைக்கு முன்னான இயேசுவைப் பற்றி யோவான் 1:1 எதை குறிப்பிட்டு காட்டுகிறது?
16. மொழிபெயர்ப்பவர்கள் “ஒரு” என்ற பொதுநிலைச் சுட்டிடைச் சொல்லை கிரேக்க வேத எழுத்து மூலவசனங்களில் சில சமயங்களில் இடையில் ஏன் சேர்த்தார்கள்?
17. யோவான் 1:1 பற்றி இரண்டு அறிஞர்கள் என்ன குறிப்புரைத்தார்கள்?
பக்கம் 28:
1, 2 யோவான் 1:1-ன் இரண்டாம் தியாஸை “ஒரு கடவுள்” என்று மொழிபெயர்ப்பது கிரேக்க இலக்கண விதியை மீறுவதாக இருக்குமா?
3, 4. யோவான் 1:1-ன் பிற்பகுதியின் சூழமைவு பொதுநிலைச் சுட்டிடைச் சொல் தியாஸுக்கு முன்பாக வருவதைத் தேவைப்படுத்துமா?
5, 6. இயேசுவை “ஒரு கடவுள்” என்று அழைப்பது, ஒரு கடவுள் மட்டுமே இருக்கிறார் என்பதோடு ஏன் முரணாய் இல்லை?
7. ஏசாயா 9:6-ல் இயேசுவுக்கு பொருத்தப்படும் “வல்லமையுள்ள தேவன்” என்ற பதம், அவர் யெகோவா தேவன் இல்லை என்பதை எப்படி சுட்டிகாட்டுகிறது?
8. கடவுளையும் இயேசுவையும் பற்றி ரைலண்ட்ஸ் வெளியீடு என்ன குறிப்பு சொல்லுகிறது?
பக்கம் 29:
1. யோவான் 20:28-ல் காணப்படுகிறபடி, “என் ஆண்டவனே என் தேவனே” என்று சொன்னபோது தோமா எதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்?
2. இயேசுவை சர்வவல்லமையுள்ள கடவுள் என்று தோமா அர்த்தங்கொண்டிருக்க முடியாது என்பதை புரிந்துகொள்ள யோவான் 20:28-ன் சூழமைவு நமக்கு எப்படி உதவி செய்கிறது?
3. யோவான் 20:28-ஐ தெளிவுபடுத்த யோவான் 20:31 எவ்வாறு உதவுகிறது?
4. திரித்துவத்திற்கு ஆதரவாக எந்த வசனம் அளிக்கப்பட்டாலும் நாம் அதைப் பற்றி என்ன சொல்லமுடியும்?
5. திரித்துவத்தைத் தெளிவாக போதிக்கிற ஏதாவது ஒரு வசனமாவது இருக்கிறதா?
ஏழாவது வாரம்
பக்கம் 30, தலைப்பு: “கடவுளை அவருடைய நிபந்தனைகளின்பேரில் வணங்குங்கள்”
1. நித்திய ஜீவனுக்கு என்ன வகையான அறிவு முக்கியமானது?
2. (அ) கடவுளைப் பற்றிய சத்தியத்தின் ஊற்றுமூலத்தைக் காண்பியுங்கள். (ஆ) சத்தியத்தைப் பற்றி அறிவது எதைத் தவிர்க்க நமக்கு உதவிசெய்யும்?
3. கடவுளுடைய அங்கீகாரத்தை நாம் விரும்புவோமானால் நம்மை நாமே என்ன கேட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்?
4. திரித்துவப் போதகம் கடவுளை எப்படி அவமதித்திருக்கிறது?
5. திரித்துவப் போதகத்திலிருந்து என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது?
6. ஜனங்கள் “கடவுளை திருத்தமான அறிவில் பற்றிக்கொண்டி”ல்லாத போது என்ன நடவடிக்கை தொடரும்?
7. திரித்துவக் கோட்பாட்டாளர்கள் கடவுளை எப்படி அவமதித்திருக்கின்றனர்?
8. சத்தியத்தை உடையவர்களையும், அதைக் கொண்டில்லாதவர்களையும் கடவுளின் வார்த்தை எப்படி அடையாளம் காட்டுகிறது?
9. கிறிஸ்தவமண்டலத்தைப் பற்றி டேனிஷ் இறையியல் வல்லுநர் ஒருவர் என்ன சொன்னார்?
பக்கம் 31:
1. கிறிஸ்தவமண்டலத்தின் ஆவிக்குரிய நிலைமையை எப்படி விவரிக்கலாம்?
2. கிறிஸ்தவமண்டலம் சீக்கிரத்தில் எப்படி நியாயம் தீர்க்கப்படும், ஏன்?
3. நாம் ஏன் திரித்துவ போதகத்தைப் புறக்கணித்துவிட வேண்டும்?
4. யாருடைய அக்கறைகளை இந்தத் திரித்துவப் போதகம் சேவிக்கிறது?
5. கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு எப்படி பெரும் விடுதலையைக் கொண்டுவருகிறது?
6. கடவுளைக் கனப்படுத்துவதற்கு என்ன அவசரமான காரணம் நமக்கு இருக்கிறது?