காவற்கோபுரம் சந்தா விசேஷ அளிப்புக்கு தயாராயிருங்கள்
ஏப்ரல் மற்றும் மே மாதத்தின்போது காவற்கோபுரம் விசேஷ சந்தா அளிப்பை எதிர்பார்த்து காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!வின் விசேஷ–அக்கறை இதழ்களை சங்கம் தயாரிக்கிறது. எங்குமுள்ள ஜனங்களின் மனதில் மேலோங்கியுள்ள பலவிதமான பொருள்களின் பேரில் தனிச்சிறப்பு கட்டுரைகள் இருக்கும்.
காவற்கோபுரம் பின்வரும் பொருள்களை கலந்தாலோசிக்கும்: “நீங்கள் நினைப்பதைவிட காலம் பிந்திவிட்டதா?” (ஏப்ரல் 1), “சமாதானம் உண்மையில் எப்பொழுது வரும்?” (ஏப்ரல் 15), “ஒரு குழப்பமான உலகில் குற்றச்செயலோடு சமாளித்தல்” (மே 1), “உங்கள் குடும்ப வாழ்க்கையில் கடவுளை முதலில் வையுங்கள்!” (மே 15). விழித்தெழு! கட்டுரைகள் பின்வரும் இந்தப் பொருள் சம்பந்தப்பட்டவை: “மனிதனும் விலங்குகளும் சமாதானமாய் வாழும்போது” (ஏப்ரல் 8), “விவாகரத்து செய்யப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி” (ஏப்ரல்22), “லாட்டரி ஜுரம்-யார் வெற்றிபெறுவது? யார் தோல்வியடைவது?” (மே 8), “தொலைக்காட்சி—உலகத்தை மாற்றிய அந்தப் பெட்டி” (மே 22). இந்திய மொழிகளில் காவற்கோபுரம்: “மகிழ்ச்சியான தேசம்” (ஏப்ரல் 1), “சமாதானம்—அது படைவலிமை குறைப்பால் வருமா?” (மே 1), “பேராசையற்ற ஓர் உலகம்—அது சாத்தியமா?” (ஜூன் 1), இந்திய மொழிகளில் விழித்தெழு!: “வீடுகள் இல்லா பிள்ளைகள்—ஒரு தீர்வு இருக்கிறதா?” (ஏப்ரல் 8), துப்பாக்கிகள் இல்லாத ஓர் உலகம்—அது சாத்தியமா?” (மே 8).
எல்லாப் பிரஸ்தாபிகளும், விசேஷமாக பயனியர்களும் சந்தாக்களை அளிப்பதிலும், தனிப்பட்ட பத்திரிகைகளை விநியோகிப்பதிலும் அதிகரிக்கப்பட்ட வேலைக்காக தங்கள் தனிப்பட்ட தேவைகளை சிந்திக்க வேண்டும். காவற்கோபுரம் விசேஷ அளிப்பின் ஆரம்பம் முதற்கொண்டே போதுமான பத்திரிகைகள் கையிருப்பில் இருப்பதற்காக அதிகமான பத்திரிகைகளை போதிய காலத்திற்கு முன்பே கேட்டு தருவிக்க நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.