வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்
பகுதி 3: மற்றவர்கள் முன்னேற உதவியளியுங்கள்
1 மூத்த சகோதரனாகிய பவுலுக்கும், பக்தியுள்ள இளம் மனிதனாகிய தீமோத்தேயுவுக்கும் இருந்த உறவு, ஊழியத்துக்காக பயிற்சி கொடுப்பதில் சிறந்த முன்மாதிரியாக அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. (1 கொரி. 14:7) தான் பெற்றுக்கொண்ட அதே அறிவையும் பயிற்சியையும் மற்றவர்களுக்கு கொடுக்கும்படியாக பவுல் தீமோத்தேயுவுக்கு அறியுரை கொடுத்தார். இன்று சபையில் இதே வழிமுறையை நாம் பின்பற்றுவது நலமாயிருக்கும்.
2 மற்றவர்களை பயிற்றுவியுங்கள்: மூன்று வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட இந்தியாவில் இன்று 3,500 பிரஸ்தாபிகள் கூடுதலாக இருக்கின்றனர் என்பதை உணரும்போது, பயிற்றுவிப்பு கொடுப்பதற்கான தேவை இருக்கிறது என்பது தெளிவாகிறது. அனுபவமிக்க பிரஸ்தாபிகள் கொடுக்கக்கூடிய பயிற்றுவிப்பிலிருந்து இப்படிப்பட்டவர்களில் அநேகர் நன்மையடையலாம். சாதாரணமாக வெளி ஊழியத்தில் ஒரு மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள் மட்டுமே செலவழித்த ஒரு சகோதரி, அனுபவம் வாய்ந்த ஒரு பிரஸ்தாபியால் உதவியளிக்கப்பட்டபோது, வீடுகளில் திறம்பட்ட விதமாக பேசுவதற்கு கற்றுக் கொண்டாள். ஊழியத்தில் பங்கு கொள்வதற்கான அவளுடைய முந்தைய தயக்கம் மறைந்து போயிற்று, அவள் நற்செய்தியின் வைராக்கியமுள்ள பிரஸ்தாபியாக ஆனாள். இப்போது ஒரு கைதேர்ந்த பயனியராக இருக்கும் அவள் கடந்த காலத்தைக் குறித்து இவ்வாறு சொல்கிறாள்: “என்ன சொல்வது என்பதை எனக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது, அதன் பின்பு ஊழியத்தை நான் அனுபவித்து மகிழ ஆரம்பித்தேன்.”
3 நீங்கள் ஒரு மூப்பராகவோ, ஓர் உதவி ஊழியராகவோ, ஒரு பயனியராகவோ அல்லது ஓர் அனுபவமிக்க பிரஸ்தாபியாகவோ இருந்தால், மற்றவர்களின் முன்னேற்றத்துக்கு நீங்கள் எவ்வாறு உதவியளிக்கலாம்? மற்றொரு பிரஸ்தாபிக்கு உதவியளிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை உங்களுடைய சபை புத்தகப்படிப்பு நடத்துபவரிடம் தெரிவிப்பது முதலாவது படியாகும்.
4 ஒழுங்கமைப்போடும் தயாரிப்போடும் இருங்கள்: ஒன்றாக வேலை செய்வதற்கு ஒரு திட்டவட்டமான ஏற்பாட்டை கொண்டிருப்பது உதவியாயிருக்கும். உங்களுடைய கூட்டாளி ஒருவேளை ஆரம்பத்தில் மனவுறுதியற்றவராகவும் அல்லது தன்னைப் பற்றி நிச்சயமற்றவராகவும் இருக்கலாம், ஆனால் தேவை எழும்புமேயானால் உதவி செய்வதற்கு அவரோடு ஒருவர் வேலை செய்கிறார் என்பதை அவர் போற்றுவார். (பிர. 4:9) கூடுமானால் பைபிள் பொருள்களின் பேரில் சம்பாஷிக்க விரும்பும் ஜனங்கள் இருக்கக்கூடிய ஒரு பிராந்தியத்தை தேர்ந்தெடுங்கள். புதியவர் சம்பாஷணையில் ஈடுபடவும் இவ்வாறு தைரியம் பெறவும் இது உதவும்.
5 படிப்படியாக முன்னேறுகிற பயிற்றுவிப்பை தொடருவதற்கு, கண்டுபிடிக்கப்பட்ட அக்கறையின் பேரில் எவ்வாறு ஒரு மறுசந்திப்பை செய்வது என்பதை கலந்தாலோசிப்பது பயனுள்ளதாயிருக்கும். அது முதல் சந்திப்பில் அடிப்படையை போடுவதை உட்படுத்துகிறது, நீங்கள் திரும்பி செல்கையில் பதிலளிப்பதற்கு வீட்டுக்காரரிடம் ஒரு கேள்வியை விட்டு வருவதன் மூலம் இது செய்யப்படலாம். குறைந்த அனுபவமுள்ள பிரஸ்தாபி தயாரிப்பதற்கு உதவி செய்ய நிச்சயமாயிருங்கள், அதற்கு பின்பு அந்தச் சந்திப்புக்கு அவரோடு செல்லுங்கள். ஒரு படிப்பு ஆரம்பிக்கப்பட்டால், புதிய பிரஸ்தாபி தன் சொந்த திறமையைக் குறித்து இன்னும் நிச்சயமற்றவராக இருந்தால், புதியவர் படிப்பை நடத்துவதற்கு தகுதி பெறும்வரை அதிக அனுபவமுள்ள பிரஸ்தாபி சில தடவைகள் படிப்பை நடத்துவதற்கு விரும்பலாம்.
6 அமைப்புக்குள் விரைவாக புதிய நபர்கள் வந்து கொண்டிருப்பதால், வெளி ஊழியத்தில் ஊக்கமான கல்விபுகட்டுவது எவ்வளவு ஞானமானது என்று வெளிப்படையாகிறது. பிரசங்க வேலையில் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டவர்களிடமிருந்து உதவி தேவையாயிருக்கிறது. நீங்கள் யாராவது ஒருவருக்கு உதவி செய்தால், காலப்போக்கில் அவரும் “மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க தகுதியுடையவராக” ஆவார்.—2 தீமோ. 2:2.