நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—வீட்டு பைபிள் படிப்புகளை அறிமுகப்படுத்துதல்
1 கிறிஸ்துவின் சீஷர்களை உண்டுபண்ணும் வழிமுறையில் நடுவதும் நீர் பாய்ச்ச வேண்டியதுமான நம்முடைய உத்தரவாதத்தை நம் ராஜ்ய ஊழியம் செப்டம்பர் 1991-ன் சேர்க்கை நமக்கு நினைப்பூட்டியது. ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிக்கும் ஜனங்களிடமாக நமக்கு இருக்கும் அன்பின் காரணமாக பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு நாம் உந்தப்பட வேண்டும் என்று அது நமக்குக் காண்பித்தது. வீட்டு பைபிள் படிப்புகளை அளிப்பது சீஷர்களை உண்டுபண்ணவேண்டிய நம்முடைய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நமக்கு உதவி செய்யும்.—மத். 28:19, 20.
2 கொடுக்கப்பட்ட சிறந்த உற்சாகத்தை நம்மில் அநேகர் நடைமுறைக்குக் கொண்டுவர ஆரம்பித்திருக்கின்றனர் என்பதைக் காண்பது அநேக கூடுதலான பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அறிக்கை செய்யப்பட்ட பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 1990-ம் ஊழிய ஆண்டைவிட 1991-ல் ஏறக்குறைய 17 சதவீதம் அதிகரித்தது. முதல் முறையாகப் படிப்புகளை நடத்த ஆரம்பித்திருப்பவர்கள் சீஷர்களை உண்டுபண்ணும் வேலையில் அவர்கள் கொண்டிருக்கும் பங்கில் நிச்சயமாகவே சந்தோஷப்படுகின்றனர். ஆனால் நம்முடைய ஊழியத்தின் இந்தப் பலன்தரும் அம்சத்தில் இன்னும் அநேகர் எவ்வாறு பங்குகொள்ள முடியும்?
3 மாதத்துக்கான அளிப்பை உபயோகியுங்கள்: புதிய பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க நாடுவதற்கு டிசம்பர் மாதம் விசேஷமாக ஒரு பொருத்தமான மாதமாக இருக்கிறது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) மற்றும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (The Bible—God’s Word or Man’s) என்ற புத்தகத்தையும் நாம் அளிப்போம். நியாயங்கள் புத்தகத்தில் இருக்கும் ஆலோசனைகளை உபயோகிப்பது வீட்டுக்காரரின் அக்கறையை வளர்ப்பதற்கு ஒரு நல்ல வழியாகும்.
4நியாயங்கள் புத்தகம் பக்கம் 10-ல் கொடுக்கப்பட்டுள்ள முன்னுரைகளை உபயோகிப்பதன் மூலம் நாம் பைபிளைச் சிறப்பித்துக் காட்டலாம். பைபிளுக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு ஐந்து வித்தியாசமான வழிகள் அங்கு பட்டியலிடப்பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் கேள்விகளுக்கு பைபிளின் பதில்களை நாடுமாறு ஜனங்களை உற்சாகப்படுத்துவது ஒரு பைபிள் படிப்புக்கான வழியைத் திறந்து வைக்கக்கூடும்.
5நியாயங்கள் புத்தகம், பக்கம் 12-ல் “வீட்டு பைபிள் படிப்பு” என்ற உபதலைப்பின் கீழ் கடவுளுடைய வார்த்தை புத்தகத்துக்குக் கவனத்தைத் திருப்புவதற்கு உபயோகமாயிருக்கும் இரண்டு ஆலோசனைகள் இருக்கின்றன. இரண்டு ஆலோசனைகளும் புத்தகத்தை ஓர் ஒழுங்கான படிப்பு முறையில் உபயோகிக்குமாறு உற்சாகப்படுத்துகின்றன. ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு நேரடியான அணுகுமுறையை நீங்கள் உபயோகிக்கிறீர்கள் என்றால், நம் ராஜ்ய ஊழியம் அக்டோபர் 1991-ம் இதழில் இருக்கும் சிறந்த ஆலோசனைகளை நீங்கள் கடைப்பிடிக்கலாம்.
6 யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்: பைபிள் படிப்பு வேலையில் வெற்றி அடைய வேண்டும் என்றால், வீட்டு பைபிள் படிப்புகளை அளிப்பதில் யெகோவாவின் உதவியோடு மட்டுமே வெற்றியை முயன்று அடைய முடியும் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஜனங்களுக்கு உதவி செய்யும் நம்முடைய முயற்சிகளில் அவர் முக்கியமான பங்கை வகிக்கிறார். (1 கொரி. 3:6) ஆகையால், நாம் படிப்பதற்கு யாரையாவது ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி மட்டும் ஜெபிக்காமல், நாம் கண்டுபிடிக்கும் அக்கறையுள்ள ஆட்களின் முன்னேற்றத்தைக் குறித்தும் ஜெபிக்க வேண்டும். (யோ. 16:23) “தேவனுக்கு உடன் வேலையாட்களாயிருக்கிறோம்,” என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும்.—1 கொரி. 3:9.