ராஜ்ய ஊழியப் பள்ளி தேவராஜ்ய கல்வியை அளிக்கிறது
1 மூப்பர்கள் ஒரு கனத்த உத்தரவாத சுமையைச் சுமக்கின்றன. இந்தப் பாரமான நியமிப்பை அவர்கள் கவனித்துக் கொள்ள உதவி செய்வதற்கு, 1959-ம் வருட ஆரம்பத்தில் “கண்காணிகளின் வேலைகளில் ஒரு விசேஷ பயிற்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (jp பக். 292-3; yb 77 பக். 14) 1984-ம் வருட உதவி ஊழியர்கள் முதல் முறையாக அழைக்கப்பட்டனர். கடைசி ராஜ்ய ஊழியப் பள்ளி 1988-ம் ஊழிய ஆண்டின்போது நடத்தப்பட்டது; ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர்.
அச்சமயத்திலிருந்து, நூற்றுக்கணக்கான சபைகள் அமைக்கப்பட்டுள்ளன, மற்றும் ஆயிரக்கணக்கான சகோதரர்கள் மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அமைப்பு சம்பந்தப்பட்ட மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆகையால் ஆளும் குழு எல்லாச் சபை மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் புதிய ஊழிய ஆண்டின்போது நடத்தப்படும் ராஜ்ய ஊழியப் பள்ளிக்கு ஆஜராவதற்கு ஏற்பாடு செய்கிறது. வெளி ஊழியத்திலிருக்கும் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்தில் இப் புதிய பயிற்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பயணக் கண்காணிகள் பள்ளிகளில் தலைமைத் தாங்கி கற்பிப்பர். மூப்பர்களும் உதவி ஊழியர்களும் பள்ளியிலிருந்து கற்றுக் கொள்ளும் காரியங்களைப் பொருத்திப் பிரயோகிக்கையில் எல்லாச் சபைகளும் நன்மையடையும்.