நீங்கள் மறுபடியும் செல்லும்போது என்ன சொல்வீர்கள்?
1 நம்முடைய ஊழியத்தில் நாம் திறம்பட்டவர்களாக இருப்பதற்குத் தயாரிப்புத் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் அக்கறை காண்பித்த ஆட்களை மறுபடியும் சென்று சந்திக்கும் போது, நாம் அவர்களுடைய அக்கறையை மறுபடியும் தூண்டி, நம்முடைய சம்பாஷணையைத் தொடர முடியும். இதை நாம் எவ்வாறு செய்யலாம்?
2 மெய்க் கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் பேரில் உண்மையான அக்கறையைக் கொண்டிருப்பதால், முந்தின சந்திப்பின் போது வீட்டுக்காரரைப் பற்றி நீங்கள் அறிந்து கொண்ட ஏதோவொன்றை முதலில் குறிப்பிடலாம்.
குற்றச்செயலைப் பற்றி தன் கவலையை வெளிப்படுத்திய நபரிடம், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “கவனிக்கப்படத்தக்க அளவுக்குச் சட்ட மீறுதல் அதிகரித்திருப்பதைக் குறித்து நீங்கள் கவலைப்படுவதாக, நாங்கள் சென்ற சந்திப்பில் உங்களிடம் பேசிய போது நீங்கள் சொன்னீர்கள். இன்னுமதிகமான போலீஸ்காரர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் இந்தப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
சமீபத்தில் உலக நிலைமையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி ஒரு நபர் கவலை தெரிவித்திருப்பாரானால், நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “சென்ற முறை நாம் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தபோது, உலகத்தில் சமாதானம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஒரு அக்கறைக்குரிய குறிப்பைச் சொன்னீர்கள். உலக தலைவர்கள் ஒரு புதிய உலக ஒழுங்குமுறையைக் கொண்டுவருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
மற்றவர்களுடைய சுயநலத்தால் கலக்கமடைந்திருக்கும் ஒரு நபரிடம் நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “சென்றமுறை நாம் பேசிய போது, ஜனங்களிடம் பொதுவாக போராசை காணப்படுவதைக் குறித்து நீங்கள் மிகச் சிறந்த குறிப்பு ஒன்று சொன்னீர்கள். பேராசை மிக்க ஜனங்களைப் பற்றி கடவுளுடைய நோக்குநிலை என்ன என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல நேரம் அனுமதியுங்கள்]. பைபிள் எபேசியர் 5:5-ல் இவ்வாறு சொல்கிறது.”
3 திறம்பட்டவிதமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மற்ற கூற்றுகள்:
◼ “நாம் சென்றமுறை கொண்டிருந்த சம்பாஷணையை நான் வெகுவாக அனுபவித்தேன். ஆகையால் வீடு இல்லாதவர்களின் நிலைமையை யெகோவா எவ்வாறு உணருகிறார் என்பதை உங்களிடம் காண்பிக்க, இந்தச் சுருக்கமான கருத்தை நான் ஆராய்ச்சி செய்தேன். ஏசாயா 65:21-23-ஐ கவனியுங்கள்.”
◼ “மனிதவர்க்கத்துக்கு மேலான அரசாங்கம் தேவை என்ற உங்களுடைய குறிப்பை நான் அனுபவித்தேன்.”
◼ “எல்லா மதங்களும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றனவா என்பதன் பேரில் நீங்கள் ஒரு அக்கறைக்குரிய கேள்வியைக் கேட்டீர்கள்.”
◼ “கடவுள் முன்நிர்ணயம் செய்து விட்டார் என்பதைக் குறித்து நீங்கள் சொன்ன காரியம் என்னைச் சிந்தித்துப் பார்க்கும்படி செய்தது.”
◼ “நம்முடைய சம்பாஷணையைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தில் ஒரு குறிப்பு இருக்கிறது. நீங்கள் அதை அனுபவிப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். [புத்தகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளை வீட்டுக்காரருக்குக் காண்பிக்கலாம்.]”
நம்முடைய முந்தின சம்பாஷணைக்கு நாம் போற்றுதல் தெரிவிக்கிறோம் என்பதையும் மறுபடியும் வீட்டுக்காரரோடு பேசுவதில் அக்கறையாயிருக்கிறோம் என்பதையும் இப்படிப்பட்ட முன்னுரைகள் காண்பிக்கின்றன.
4 மறுசந்திப்பு செய்வதற்கு முன்பு, நீங்கள் என்ன சொல்வீர்கள் என்பதைக் குறித்துச் சிந்தியுங்கள். ஒவ்வொரு நபருக்கு ஏற்றபடி உங்களுடைய அளிப்பை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
5 நாம் சந்தித்திருக்கும் நபர் அதிக வேலையாயிருந்தால், அப்போதுங்கூட இவ்வாறு சொல்வதன் மூலம் நாம் திறம்பட்டவர்களாய் இருக்கலாம்:
◼ “உங்களுக்கு ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் இருக்கிறது என்பதை நான் அறிவேன், ஆனால் நீங்கள் உங்களுடைய வேவையைமுடித்துக்கொண்டிருக்கையில், நீங்கள் சிந்திப்பதற்கு இங்கு ஒரு காரியம் இருக்கிறது. [மத்தேயு 5:3-ஐ வாசியுங்கள்.]”
அல்லது நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நான் உங்களுக்காக இந்த மூன்று வசனங்களையும் எழுதி வைத்திருக்கிறேன். பேசுவதற்கு இப்போது ஏற்ற சமயமாக இல்லாததால் இவைகளை நான் உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் திரும்பி வரும்போது, அவைகளை உங்களோடு கலந்தாலோசிக்க ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.”
6 தவிர்க்க வேண்டிய எதிர்மறையான அணுகுமுறைகள்: எதிர்மறையான பதிலைக் கொண்டுவரக்கூடிய கேள்விகள் அல்லது வீட்டுக்காரரைச் சங்கோஜமான நிலையில் வைக்கக்கூடிய கேள்விகளைக் கேட்பது சாதாரணமாக நல்ல விளைவுகளைக் கொடுக்காது. இவை: “நான் விட்டுச் சென்ற பிரசுரங்களை நீங்கள் வாசித்தீர்களா?” “உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா?” “உங்களுக்கு என்னை ஞாபகமிருக்கிறதா?” “இந்தப் பூமிக்காகக் கடவுள் கொண்டிருக்கும் நோக்கங்களைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் இன்னும் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறீர்களா என்பதைக் கேட்பதற்கு நான் வந்தேன்.”
7 முன்பு அக்கறை காண்பித்த ஆட்களுக்கு உதவியைக் கொடுப்பதற்கு நாம் முன்னதாகவே தயாரித்திருந்தோமானால், அவர்களைச் சென்று சந்திப்பதற்கு நாம் ஆர்வமுள்ளவர்களாய் இருப்போம்.