இந்த மாதத்திற்கான அளிப்பை அறிமுகப்படுத்துதல்
1 இன்று அநேகர் பைபிள் கட்டுக்கதைகளடங்கிய புத்தகம் என்றும் அது ஒழுக்கசம்பந்தமாக காலத்துக்கொவ்வாத புத்திமதியைக் கொண்டிருக்கிறது என்றும் நினைக்கின்றனர். இதனால் ஜனங்களில் கடவுளுடைய வார்த்தையினிடமாக மதிப்பைக் கட்டியமைப்பது சவாலாக இருக்கலாம். ஆனால் உண்மையில் பைபிள் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட ஒரு புத்தகமே என்பதை ஆட்களுக்குக் காட்ட விலைமதிக்கமுடியாத உதவியாக நிரூபித்திருக்கும் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தை நாம் கொண்டிருக்கிறோம்.
2 இந்தப் புத்தகத்தை வீட்டுக்காரர் வாசிப்பதற்கு அவருடைய அக்கறையைத் தூண்ட நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? பின்வருபவர்களின் கருத்தைக் கவர என்ன குறிப்புகளை அல்லது அம்சங்களை சிறப்பித்துக்காட்டுவீர்கள்: கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டுகிறவர்களுக்கு? கிறிஸ்தவமல்லாத நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு? அல்லது விசுவாசம் இல்லாதவர்களுக்கு? பின்வரும் ஆலோசனைகள் உண்மையில் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது,” என்பதை நம்முடைய அயலாருக்குக் காட்ட தயாராக இருக்க நமக்கு உதவும். (2 தீமோ. 3:16, 17) ஆலோசனைகள் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளப்படலாம்.
3 நாம் என்ன சொல்லவேண்டுமென்பதை ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும்?: அநேகர் பைபிளைக் குறித்து நிலையான கருத்தைக் கொண்டிருப்பதாலும் காரியங்கள் எப்படி இருக்கின்றன எனக் காண விருப்பமற்றிருப்பதாலும் நாம் என்ன சொல்லவிருக்கிறோமோ அதை வீட்டுக்காரர் திறந்த மனதுடன் ஆராய உதவி செய்வதற்கு நம்முடைய அறிமுகத்தை ஏற்றபடி மாற்றியமைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.
4 பொருத்தமான வாழ்த்துதலுரைக்குப் பின்பு நீங்கள் பின்வருமாறு சொல்லக்கூடும்:
▪“நம்முடைய நாளுக்கு பைபிள் இனிமேலும் நடைமுறைக்கு ஏற்றதல்ல என்று அநேக ஆட்கள் உணருவதை எங்களுடைய அயலார்களிடத்தில் பேசும் போது நாங்கள் காணக்கூடியவர்களாக இருந்தோம். ஆனால் உண்மையில் நேரம் செலவழித்து பைபிள் உண்மையில் எதை உள்ளடக்கியதாய் இருக்கிறது என்பதை ஆட்கள் சோதித்துப் பார்க்கும் போது பைபிள் தெளிவாகவே என்ன சொல்லுகிறது என்பதை காண அவர்கள் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [வீட்டுக்காரர் பதிலளிக்க அனுமதியுங்கள்.] நமக்கு பைபிள் எவ்வாறு உபயோகமுள்ளதாக இருக்கிறதென்பது பற்றி அது என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்.” 2 தீமோத்தேயு 3:16, 17-ஐ வாசித்தபின் பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தில் அதிகாரம் 12-க்கு அவருடைய கவனத்தைத் திருப்புங்கள். அங்கு பாராக்கள் 11, 15 மற்றும் 16-லுள்ள, இன்று நமக்கு நடைமுறைப்பயனுள்ளதாய் இருக்கும் பைபிளின் ஒருசில குறிப்பிட்ட ஞானமான வழிகாட்டும் குறிப்புகளை சுட்டிக்காட்டுங்கள். சங்கீதம் 119:159, 160-ல் உள்ள சங்கீதக்காரனின் வார்த்தைகளின் உண்மைத்தன்மையை இவை எடுத்துக்காட்டுகின்றன.
5 வீட்டுக்காரருக்கு குறிப்பாக அக்கறையைத் தூண்டும் ஏதோ ஒரு காரியத்தை கலந்தாலோசிக்கும் ஓர் அதிகாரத்திற்கு புத்தகத்தைத் திருப்புவதன் மூலம் அவருடைய கவனத்தைக் கவர்ந்திழுக்கமுடியுமென அநேகர் கண்டிருக்கின்றனர். இது எவ்விதமாகச் செய்யப்படலாம் என்பதை கவனியுங்கள்.
6 உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு நீங்கள் சொல்லக்கூடும்:
▪“இன்று ஆட்கள் அநேக மதப்புத்தகங்கள் ‘புனிதமான’வை என்று அழைக்கும்போது எது உண்மையில் கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டதென நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம் என எப்பொழுதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?” வீட்டுக்காரர் பதிலளித்தபின் அவருடைய கவனத்தை பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தில் பக்கம் 3-ல் பொருளடக்கத்திற்குத் திருப்பவும். உதாரணமாக அவர் விஞ்ஞானத்தில் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்துகிறார் என்றால் அதிகாரம் 8-க்குத் திருப்பி பாரா 1-ஐ காண்பித்து பைபிள் ஒரு விஞ்ஞானப் பாடபுத்தகமாக இல்லையென்றாலும் விஞ்ஞானக் காரியங்களைக் குறித்து பேசுமிடத்தில், அது என்ன குறிப்பிடுகிறதோ அது முழுவதும் திருத்தமானதாக இருக்கிறது என்பதைக் காட்டலாம். நேரம் அனுமதிக்குமானால் பாரா 2-ல் உள்ள வசனங்களில் ஒன்றை திருப்பிப் பார்க்கவும். பைபிள் மேலான ஊற்றுமூலத்தால் ஏவப்பட்டெழுதப்பட்டதென்று நிரூபிக்கும்வண்ணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பைபிள் விஞ்ஞானப் பூர்வமாக திருத்தமான அறிக்கைகளை செய்தது என்பதை அவருக்குக் காட்டவும்.
7 உதவக்கூடிய மற்ற அம்சங்கள்: அதிகாரம்வாரியாக விரிவாக மேற்கோள் குறிப்பிடும் புத்தகத்தின் பின்னால் உள்ள பட்டியல் இந்தச் சிறிய புத்தகம் எவ்வளவு சிறந்தமுறையில் ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்ட பயன்படுத்தப்படலாம். உதாரணமாக, அதிகாரம் 8-ல் விஞ்ஞானம் சம்பந்தமாக உள்ளவற்றை நீங்கள் கலந்தாலோசிக்கிறீர்களென்றால் நன்கு அறிமுகமான விஞ்ஞானிகளின் புத்தகங்கள் மற்றும் எண்ணற்ற கலைக்களஞ்சியங்களின் மேற்கோள்களை நீங்கள் குறிப்பிடக்கூடும். கடவுளிலோ அல்லது ஒரு மதத்திலோ நம்பிக்கையற்ற அநேக ஆட்கள் விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானிகளால் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் எல்லாம் பைபிள் ஏவப்பட்டெழுதப்பட்டது என்ற உண்மையைக் குறித்துக் காட்டுவதைக் காண அக்கறையுள்ளவர்களாய் இருப்பார்கள். பைபிள் நியமங்களை பின்பற்றுவது நமக்கு எப்படி அதிக பிரயோஜனமாய் இருக்கிறது என்பதைக் காண்பித்து சத்தியத்தைப் பேசுவதில் பைபிள் அறிவுரையை ஆதரிக்க பத்திரிகையில் குறிப்பிட்ட பத்தியில் தொடர்ந்து எழுதுபவரையும், ஒரு மனநோய் மருத்துவ புத்தகத்தையும் பக்கம் 167-ல் பாரா 14 மேற்கோள்காட்டுகிறது.
8 பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்த பலன்தரும் இணைப்புகளை பயன்படுததுவதன் மூலம், நாம் பேசிக்கொண்டிருக்கும் ஆட்கள் பைபிளை மதிப்பதற்கு நாம் உதவி செய்யக்கூடும், அவர்கள் அதை கடவுளுடைய வார்த்தையாக கருத வரக்கூடும்.—1தெச. 2:13.