தேவராஜ்ய செய்திகள்
பெனின்: ஏப்ரல் அறிக்கை 2,793 பிரஸ்தாபிகள் 4,442 வீட்டு வேதப்படிப்புகளை நடத்தி, 30,814 மறுசந்திப்புகளை செய்தார்கள் என்று காட்டுகிறது. இந்த எண்கள் மூன்று புதிய உச்சநிலைகளை குறிக்கின்றன.
பல்கேரியா: ஒரே ஒரு வருடத்தில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 107-லிருந்து 218-ஆக அதிகரித்ததாக மார்ச்-ல் அறிக்கை செய்தனர். அது 104 சதவீத அதிகரிப்பாகும். பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் சராசரியாக 19.7 மணிநேரங்களையும், மொத்தமாக 585 வீட்டு வேதப்படிப்புகளையும் நடத்தினர். மார்ச்-ல் அவர்களுடைய முதல் விசேஷ அசெம்பிளி தினம் நடைபெற்றது, அதற்கு 900 பேர் ஆஜரானார்கள்.
செக்கஸ்லோவாக்கியா: மார்ச்-ல் புதிய உச்சநிலையாக 25,111 பிரஸ்தாபிகள் அறிக்கை செய்தனர். கடந்த வருட சராசரியோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீத அதிகரிப்பாக இருந்தது.
ஈக்வேடார்: இவ்வருட நினைவு ஆசரிப்புக்கு ஆஜரானவர் 99,987. ஏப்ரல்-ல் 21,734 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலையோடு தொடர்ந்து அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
நிக்கராகுவா: ஏப்ரல்-ல் உண்மையில் ராஜ்ய சேவையின் ஒவ்வொரு அம்சத்திலும் புதிய உச்சநிலைகள் அடையப்பெற்றன. ஞாபகார்த்த ஆசரிப்பிற்கு ஆஜரானவர்கள் பிரஸ்தாபிகளின் மொத்த எண்ணிக்கையைவிட ஐந்து மடங்கு இருந்தது, அம்மாதத்துக்கு 9,629-ஐ அடைந்தது.