ஜூலையில் பலன்தரத்தக்கவிதமாகச்சிற்றேடுகளைப் பயன்படுத்துதல்
1 சீஷராக்கும் வேலையைத் துரிதப்படுத்துவதற்கு, அமைப்பு வித்தியாசமான அநேக பிரசுரங்களை தாராளமாக அளித்திருக்கிறது. அவற்றில் பூமிக்கான கடவுளுடைய நோக்கம், திரித்துவம், கடவுளுடைய பெயர், ராஜ்ய அரசாங்கம், மற்றும் துன்மார்க்கத்தைக் கடவுள் அனுமதித்திருப்பது ஆகிய குறிப்பிட்ட பொருள்களைக் கலந்தாராய்கிற சிற்றேடுகள் உள்ளன. நம்முடைய பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு உதவிசெய்ய எவ்வாறு பலன்தரத்தக்கவிதமாகச் சிற்றேடுகளை நாம் பயன்படுத்தலாம்?
2 நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? சிற்றேடு, துன்பத்திலிருந்து விடுபட்ட ஒரு புதிய உலகம் சமீபமாயிருக்கிறது என்பதை விளக்குகிறது. நாம் அதை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம்? ஆலோசனைகளை நியாயங்கள் புத்தகத்திலுள்ள “துன்பம்” என்ற முக்கியத் தலைப்பில் பக்கம் 393 தொடங்கி காணலாம், அல்லது பக்கம் 12-ல், “அநீதி/துன்பம்” என்ற தலைப்பின்கீழுள்ள அறிமுகத்தை நீங்கள் தெரிவுசெய்யலாம்.
3 நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நீங்கள் எப்பொழுதாவது இவ்வாறு சிந்தித்திருக்கிறீர்களா: ‘மனிதர்கள் எதிர்ப்படுகிற பிரச்னைகளையும் துன்பத்தையும் குறித்து உண்மையில் கடவுள் அக்கறைகொள்கிறாரா?’” பதிலுக்காக அனுமதியுங்கள். சங்கீதம் 72:12-14-ஐ வாசியுங்கள். பிறகு நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? என்ற சிற்றேட்டில் பக்கம் 8-க்குத் திருப்பி, அந்தப் பக்கத்தில் தடித்த தலைப்பின்கீழுள்ள குறிப்புகளையும், அதோடுகூட பக்கம் 18-ல் கொடுக்கப்பட்டுள்ள எதிர்காலத்திற்கான நம்முடைய நம்பிக்கையையும் கலந்துபேசுங்கள். அந்தச் சிற்றேடு மறுக்கப்பட்டால், மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் அல்லது சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை போன்ற ஒரு துண்டுப்பிரதியை ஏன் அளிக்கக்கூடாது?
4 நல்ல அரசாங்கம் இன்று அக்கறையூட்டும் பேச்சுப்பொருளாக இருக்கிறது. மனிதனுடைய ஆட்சி உலகத்தை ஐக்கியப்படுத்துமா என்று அநேகர் யோசிக்கின்றனர். பயன்தரும் தகவலானது, நியாயங்கள் புத்தகத்திலுள்ள “அரசாங்கம்” என்பதன்கீழ் பக்கம் 152-ல் தொடங்கி காணப்படுகிறது.
5 நீங்கள் இவ்வாறு கேட்கலாம்:
◼ “மனிதர்களால் உண்மையில் நிரந்தரமான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிக்கக்கூடுமா?” பதிலுக்காக அனுமதித்து, பிறகு இவ்வாறு கேளுங்கள்: “மனித சரித்திரத்தின் பதிவு என்ன காட்டுகிறது?” எரேமியா 10:23-க்குத் திருப்புங்கள், அல்லது நியாயங்கள் புத்தகத்தில் பக்கம் 152-க்குத் திருப்பி, பொருத்தமான வசனங்களையும் குறிப்புகளையும் வாசியுங்கள். அதற்குப்பிறகு, அரசாங்கம் சிற்றேட்டில் பக்கங்கள் 24 மற்றும் 25-க்குத் திருப்பி விளக்கப்படங்களையும் வேதவசனங்களையும் கலந்தாராயுங்கள். கடவுளுடைய அரசாங்கம் எவ்வாறு பூகோளம் முழுவதுமாக மக்களை ஐக்கியப்படுத்தும் என்பதை விளக்குங்கள். வீட்டுக்காரர் அந்தச் சிற்றேட்டை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற துண்டுப்பிரதியை நீங்கள் அளிக்கலாம்.
6 உங்களுடைய சுற்றுவட்டாரத்தில் குற்றச்செயல் பயம் இருந்தல், பின்வரும் அறிமுகம் கவனத்தை ஈர்ப்பதாய் இருக்கும்.
7 நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “‘கடவுள் அன்பானவர் என்றால், ஏன் அவர் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார்?’ என்று அநேக மக்கள் யோசிக்கின்றனர், நீங்களுங்கூட இதைக்குறித்து யோசித்திருக்கிறீர்களா?” குறிப்புக்காக அனுமதித்து, பிறகு இவ்வாறு சொல்லுங்கள்: “மக்கள் செய்கிற கெட்ட காரியங்களுக்காக கடவுளைக் குறைகூறுவதற்கு எதிராக நீதிமொழிகள் 19:3 எச்சரிப்பதைக் கவனியுங்கள்.” அந்த வசனத்தை வாசித்தப் பிறகு, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்ற சிற்றேட்டில் பக்கம் 15-க்குக் கவனத்தைத் திருப்புங்கள், பிறகு பத்தி 27-ஐ வாசியுங்கள். இது தொடர்ந்துவருகிற பத்திகளிலுள்ள ஒரு கலந்துரையாடலுக்கு வழிநடத்தக்கூடும்.
8 செம்மறியாடுபோன்ற மக்களுக்கு நற்செய்தியைப்பற்றி போதிக்கச் சிற்றேடுகளைப் பயன்படுத்துவது, நாம் அனைவரும் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கடவுளுடைய அமைப்போடு கூட்டுறவுகொள்வதற்கு எல்லா விதமான வாழ்க்கை நிலைகளிலிருந்து வரக்கூடிய மக்களுக்கு நாம் உதவிசெய்யலாம். நம்முடைய காலத்துக்கேற்ற சிற்றேடுகளை பலன்தரத்தக்கவிதமாக நாம் பயன்படுத்துகையில், பிரசங்க நடவடிக்கையில் பங்குகொள்வது நம்முடைய சிலாக்கியமாக இருக்கிறது.