இன்றைய உலகில் பைபிளின் மதிப்பு
1 இன்று அநேகர் பைபிளை காலத்திற்கொவ்வாததாகவும் நடைமுறையற்றதாகவும் நோக்குகிறார்கள். சரித்திரத்திலேயே அதுதான் மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகமாகவும் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமாகவும் இருக்கிறபோதிலும், ஒப்பிடுகையில் சிலரே அதை வாசிக்கின்றனர், மேலும் வெகு சிலரே அதன் வழிநடத்துதலை இன்னும் பின்பற்றுகின்றனர்.
2 மாறாக, நாம் பைபிளை கடவுளுடைய வார்த்தையாக மதிக்கிறோம். அது சரித்திரப்பூர்வமாக உண்மையாய் இருக்கிறது என்பதை உண்மைகள் காட்டுகின்றன. மேலுமாக, அதன் குறிப்பிடத்தக்க ஒத்திசைவு, அதன் தீர்க்கதரிசனங்கள், அதன் ஞானம், மக்களின் வாழ்க்கைக்கு நன்மைகளைக் கொண்டுவருகிற பலமான தூண்டுவிக்கும் சக்தியாக அது இருப்பது ஆகிய இவையனைத்தும் பைபிள் “கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்டது” என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன. (2 தீ. 3:16, NW) நம்முடைய தனிப்பட்ட அனுபவமும் இந்த அற்புதமான பரிசுக்கான நம்முடைய போற்றுதலும் அதன் உண்மை மதிப்பை ஆராய்வதற்கு மற்றவர்களை உற்சாகப்படுத்த நம்மைத் தூண்டவேண்டும்.
3 ஓர் அணுகுமுறை இவ்வாறு இருக்கலாம்:
◼ “மனிதவர்க்கம் எதிர்ப்படுகிற மோசமான பிரச்னைகளைப் பார்க்கையில், கடவுளில் நம்பிக்கை வைப்பதை அநேகர் கடினமாகக் காண்கிறார்கள், அல்லது நாம் எதிர்ப்படுகிற பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கடவுளின் திறமையை அவர்கள் சந்தேகிக்கிறார்கள். அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] இந்தத் துண்டுப்பிரதியின் தலைப்பைக் கவனியுங்கள், நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம்.” அட்டையிலுள்ள விளக்கப்படத்திற்குக் கவனத்தைத் திருப்பி, பின்பு பக்கம் 2-லுள்ள முதலாவது இரண்டாவது பாராக்களை வாசியுங்கள். வீட்டுக்காரர் அக்கறை காட்டுவாராகில், நீங்கள் இரண்டாவது பாராவில் இடக்குறிப்புக் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள். அந்தத் துண்டுப்பிரதியிலிருந்து மேலுமாக சிந்திப்பதற்கு மறு சந்திப்புச்செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள்—அக்கறையைத் தூண்டுவதற்காக, ஒருவேளை கேள்வி வடிவிலுள்ள உபதலைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.
4 மற்றொரு அணுகுமுறை இதுபோன்ற ஒன்றாக இருக்கலாம்:
◼ “வாழ்க்கையின் பிரச்னைகளைக் கையாளுவதில் மனிதவர்க்கத்திற்கு வழிநடத்துதல் தேவை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] கடந்த காலங்களில், வழிநடத்துதலுக்காக மக்கள் அடிக்கடி பைபிளைச் சார்ந்திருந்தார்கள்; ஆனால் காலங்கள் மாறிவிட்டன. பைபிள் இன்றைக்கு நடைமுறையான மதிப்புடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] 2 தீமோத்தேயு 3:16-ல் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள். [வாசியுங்கள்.] கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தை ஞானமான தீர்மானங்களைச் செய்வதற்கு நமக்கு உதவிசெய்வது மட்டுமல்லாமல், எதிர்காலத்தைப் பற்றிய நம்பத்தக்க நம்பிக்கையைக் கொடுக்கிறது.” யோவான் 17:3-ஐ வாசியுங்கள். வீட்டுக்காரர் சாதகமாகப் பிரதிபலிப்பாராகில், பைபிளின் நடைமுறையான மதிப்பை விளக்கிக்காட்டுவதற்கு பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (The Bible—God’s Word or Man’s?) புத்தகத்திலிருந்து நீங்கள் ஏற்கெனவே தெரிந்தெடுத்திருக்கிற திட்டவட்டமான குறிப்புகள் ஒன்றிரண்டைச் சுட்டிக்காட்டுங்கள்.
5 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கம் 10-ல் “பைபிள்/கடவுள்” என்ற உபதலைப்பின்கீழ் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டுள்ள அறிமுகங்கள் சிலவற்றை பயன்படுத்துவதை நீங்கள் உதவியானவையாகக் காணலாம். மேலுமான தகவல் பக்கங்கள் 58-68-ல் கொடுக்கப்பட்டிருக்கிறது; அது வீட்டுக்காரர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அல்லது அவர்களுடைய ஆட்சேபணைகளை மேற்கொள்வதில் பயனுள்ளதாக இருக்கலாம்.
6 புதிய உலக மொழிபெயர்ப்பை அளித்தல்: ஆரம்ப சந்திப்பில் அல்லது ஒரு மறு சந்திப்பில் ஓரளவு அக்கறை தூண்டப்படுமாகில், புதிய உலக மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்தலாம். வீட்டுக்காரர் ஒரு பைபிள் பிரதியை வைத்திருக்கிறாரா, மேலும் அதை வாசிப்பதை எளிதாகக் காண்கிறாரா என்று நீங்கள் கேட்கலாம். பதிலைப் பொறுத்து, புதிய உலக மொழிபெயர்ப்பின் சில பயனுள்ள அம்சங்களுக்குக் கவனத்தைத் திருப்புங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 276-80 வரையான பக்கங்களிலுள்ள ஒன்றிரண்டு குறிப்புகளை நீங்கள் சிறப்பித்துக் காண்பிக்கலாம்.
7 பைபிளை மக்கள் வாசிக்க உற்சாகப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்கு விழிப்புடனிருங்கள். கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தைக்கான மதிப்பையும் அன்பையும் கட்டியெழுப்புவதற்கு அக்கறையுள்ள நபர்களுக்கு உதவிசெய்யுங்கள். அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அதன் நியமங்களைப் பொருத்தி சத்தியத்தைப் பற்றிய அறிவை அடைவதன்மூலம், அவர்கள் இப்பொழுதும் எதிர்காலத்திலும் அநேக நன்மைகளைப் பெற்றுக்கொள்வார்கள்.—சங். 119:105.