சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ளபத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்
1 மிகைப்படுத்திக் காட்டும் விளம்பரங்கள், தவறாக வழிநடத்தும் அரசியல் வாக்குறுதிகள், வஞ்சனையான சர்வதேச உரிமைபாராட்டல்கள் ஆகியவற்றின் காரணமாக, சத்தியமும் உண்மையுமான தகவலின் மதிப்பு இன்றைய சமுதாயத்தில் பேரளவில் கெடுக்கப்படுகிறது. காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் மாத்திரமே கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய சத்தியத்தை அறிவித்து, அது கொண்டுவரவிருக்கும் நித்திய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ எல்லாரும் என்ன செய்ய வேண்டுமென்பதை விளக்குவதில் இணையற்று நிற்கின்றன.
2 ஒரு நாட்டில், இந்த இரண்டு பத்திரிகைகளின் மதிப்பை மதித்துணர்ந்த தகவல் சேவை அதிகாரி ஒருவர், அவற்றின் வினியோகத்துக்காக அனுமதியைப் பெறுவதில் மனமுவந்து உடனடியாக உதவிசெய்தார். அவர் சொன்னதாவது: “காவற்கோபுர பத்திரிகையை மிகச் சிறந்த பத்திரிகைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன்; நான் உதவிசெய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” உயிரளிக்கும் அறிவைக் கொடுக்கக்கூடிய இந்தப் பத்திரிகைகளை வினியோகிப்பதால் மற்றவர்களுக்கு உதவிசெய்வது நம்முடைய சிலாக்கியமாக உள்ளது. (யோவா. 17:3) மே மாதத்தின்போது இந்தப் பத்திரிகைகளை எவ்வாறு அளிப்பீர்கள், மற்றும் அவற்றிற்குச் சந்தா எடுப்பீர்கள்? பின்வரும் ஆலோசனைகள் ஒருவேளை உதவியாக இருக்கலாம்.
3 மே 15 “காவற்கோபுரம்” பத்திரிகையின் தொடக்கக் கட்டுரைகளை நீங்கள் முக்கியப்படுத்திக் காட்டினால் இவ்வாறு சொல்லலாம்:
◼ “உலகத்திலேயே மிக நன்றாய் விற்பனையாகிற புத்தகத்தைப்பற்றி நாங்கள் ஆட்களிடம் பேசிவருகிறோம். அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? [பதிலுக்கு நேரம் அனுமதியுங்கள்.] பைபிளைப்பற்றி நாங்கள் பேசுகிறோம். இத்தனை அநேக மக்கள் பைபிளை வாங்கியிருப்பதற்கு மிக நல்ல காரணம் ஒன்று இருக்க வேண்டும். இந்தக் காரணம் 2 தீமோத்தேயு 3:16-ல் காணப்படுகிறது.” இந்த வசனத்தை வாசித்தப் பின்பு, அந்தக் கட்டுரைகளில் ஒன்றிலிருந்து பொருத்தமானக் குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
4 அல்லது சுருக்கமான ஓர் அறிமுகத்துக்குப் பின், இதைப்போன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “சமீப ஆண்டுகளில் பிள்ளைகள் எதிர்ப்படும் பிரச்னைகள் உலகமெங்கும் அதிகரித்துக்கொண்டேயிருப்பது கவலைக்குரியதாக இருந்துவருகிறது என்பதை நீங்கள் ஒருவேளைக் கவனித்திருக்கலாம். உள்ளூரில் உங்களுக்குக் கவலைக்குரியதாயிருக்கிற, பிள்ளைகளுக்குரிய என்ன பிரச்னைகளைக் காண்கிறீர்கள்?” [பதிலுக்கு நேரம் அனுமதியுங்கள்.] மே 8 விழித்தெழு! பத்திரிகையிலுள்ள தொடக்கக் கட்டுரைகளில் சிந்திக்கப்படும் உலகெங்குமுள்ள பிள்ளைகள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வினைமையான பிரச்னைகளில் சிவற்றைக் குறிப்பிட்டுக் காட்டி, (மாதம் இருமுறை வரும் பதிப்புகள்; மாதாந்தர பதிப்புகளை அளிக்கையில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் பிரச்னையை நீங்கள் குறிப்பிடலாம்) கடவுளுடைய ராஜ்யம் அளிக்கும் பரிகாரத்துக்குக் கவனத்தை திருப்புங்கள்.
5 உங்கள் மறுசந்திப்புகளுக்குரிய பதிவில், தொடக்கத்தில் சிறிது அக்கறை காண்பித்து, ஆனால் அதனால் பலன் உண்டாகாத ஆட்களின் பெயர்ப்பட்டியல் இருக்கலாம். மட்டுப்பட்ட பிரதிபலிப்பே இருந்ததால், தொடர்ந்து மறுசந்திப்பு செய்யும் தேவையை நீங்கள் உணராதிருக்கலாம். ஆனால் பத்திரிகை ரஸ்தா ஒன்றை உண்டாக்குவதற்கு இந்தப் பெயர்ப்பட்டியலை நீங்கள் பயன்படுத்தக் கூடியோராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஆளுக்குக் கவர்ச்சிகரமாக இருக்குமென உணரும் ஒரு கட்டுரையை நீங்கள் கவனிக்கையில் அந்த நபரைச் சந்தித்து பத்திரிகை அளிக்க நிச்சயமாயிருங்கள்.
6 சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல்: பத்திரிகைகளில் அக்கறையைத் தூண்டுவதில் இது ஒரு மிகச் சிறந்த முறை. கண்ணைக் கவரும் அட்டைகளின் விவேகமான கவர்ச்சிமிகுந்த காட்சியே ஒரு உரையாடலைத் தொடங்குவதற்குப் போதுமானது. ஒரு சகோதரி தன் உடன் வேலைத்தோழர்கள் கடந்து செல்கையில் காணுவதற்கேற்ப தன் எழுத்துமேசையின்மீது பத்திரிகைகளின் வெளியீடுகள் சிலவற்றை வைத்தாள்; அவள் பல பிரதிகளை அளிக்க முடிந்தது. ஒருசில பிரதிகளை உங்களோடு கொண்டுசெல்லும்படி நிச்சயமாயிருந்து, நீங்கள் கடைக்குச் செல்கையில், பள்ளிக்குச் செல்கையில், பஸ்ஸில் பயணப்படுகையில், அல்லது வேறு எங்கேயேனும் மற்றவர்களுடன் தொடர்புகொள்கையில் அவர்களுக்கு அளிக்க இம்மாதம் முன்முயற்சியெடுங்கள்.
7 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் உதவியைக் கொண்டு யெகோவாவையும் அவருடைய வணக்கத்தையும் பற்றிய இன்றியமையாதக் கேள்விகளுக்குப் பதில்களை நாம் கண்டடைந்தோம். ‘சத்தியபரரான கடவுளாகிய யெகோவாவை’ மற்றவர்களும் அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உதவிசெய்யக்கூடிய எல்லா வழிகளிலும் இந்தப் பத்திரிகையைப் பயன்படுத்த நாம் விரும்புகிறோம்.—சங். 31:5, NW.