நீங்கள் பெருக விதைக்கிறீர்களா?
1 “முயற்சி திருவினை ஆக்கும்,” என்ற பழமொழி ஒன்று உண்டு. இது முக்கியமாக நம்முடைய வணக்கத்தில் உண்மையாக இருக்கிறது. கூட்டங்களுக்குத் தயாரிப்பது, ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பது, நம்முடைய சகோதரர்களுக்கு அன்பு காட்டுவது போன்றவற்றில் நாம் எவ்வளவதிகம் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகிறோமோ அவ்வளவதிகம் நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைவோம். இதற்கு எதிர்ப்பதமும் உண்மையாகவே இருக்கிறது. நாம் செய்யும் காரியங்களில் கடினமாக உழைக்க மனமில்லாமலோ அரைமனதோடு செய்பவர்களாகவோ இருப்போமானால், திருப்திகரமான பலன்களை நாம் உண்மையிலேயே எதிர்பார்க்கமுடியுமா?
2 இரண்டு கொரிந்தியர் 9:6-ல் அப்போஸ்தலன் பவுல் அந்த நியமத்தை நன்றாக கூறினார்: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” நீங்கள் பெருக விதைக்கிறீர்களா?
3 தனிப்பட்ட பைபிள் படிப்பு: பலனளிக்கும் ஊழியர்களாக இருப்பதற்கு, நாம் முதலில் நம்முடைய தனிப்பட்ட பைபிள் படிப்பில் பெருக விதைக்கவேண்டும். நாம் ஆவிக்குரிய கடும்பசியைக் கொண்டிருக்கவேண்டும். (சங். 119:97, 105; மத். 5:3) அன்றாட கவலைகள் அனைத்தும் நம்மீது அழுத்தத்தைக் கொண்டுவருகையில், நம்முடைய ஆவிக்குரிய தேவையைப்பற்றிய மெய்யான உணர்வை வளர்த்துக்கொள்வது உள்ளூர முயற்சியைத் தேவைப்படுத்துகிறது. நம்மில் பெரும்பாலானோருக்கு, “வாய்ப்பளிக்கும் நேரத்தை வாங்குவதை,” தேவைப்படுத்துகிறது. (எபே. 5:16, NW) சிலர் குறிப்பிட்ட சில நாட்களில் தனிப்பட்ட படிப்புக்காக சீக்கிரமாக எழுந்திருக்க ஏற்பாடு செய்கின்றனர். மற்றவர்கள் அதற்காக சில சாயங்கால வேளைகளை ஒதுக்கிவைத்திருக்கின்றனர். எவ்வகையில் நாம் பெருக அறுப்போம்? உறுதியான விசுவாசம், பிரகாசமான நம்பிக்கை, சந்தோஷமும் நம்பிக்கையுமுள்ள ஓர் மனநிலை போன்றவற்றை நாம் பெறுவோம்.—ரோ. 10:17; 15:4; 1 பே. 1:13.
4 சபை கூட்டங்கள்: சங்கீதம் 122:1-ல் தாவீது சொன்னார்: “கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.” நீங்களும் அவ்வாறே உணருகிறீர்களா? பெருக விதைத்தல் என்பது நம்முடைய ஐந்து வாராந்தர கூட்டங்களுக்கும் தவறாது ஆஜராகியிருப்பதை அர்த்தப்படுத்துகிறது. விரும்பப்படாத சீதோஷ்ணநிலை உங்களைத் தடைசெய்ய அனுமதிக்கப்போவதில்லை என்று நீங்கள் மனதில் தீர்மானம் செய்துகொள்ளுங்கள். வழக்கமாகவே, எவ்வளவதிகம் தடங்கல்களை நாம் மேற்கொள்ளுகிறோமோ, அவ்வளவதிகம் நமக்கு ஆசீர்வாதங்களும் கிடைக்கின்றன.
5 உங்களுடைய சகோதரர்களோடு கட்டியெழுப்பும் உரையாடலில் பங்குகொள்ள, கூட்டத்திற்கு முன்கூட்டியே செல்லுங்கள்; முடிந்தபிறகும் அங்கு இருங்கள். வித்தியாசமான நபர்கள் எத்தனைபேரோடு உங்களால் கூட்டுறவுகொள்ள முடியுமோ அத்தனைபேரோடும் உங்களுடைய கூட்டுறவுகளை விரிவுபடுத்துங்கள். வாய்ப்பு கிடைப்பதைப் பொறுத்து குறிப்புகள் கொடுப்பதன்மூலம் பெருக விதைப்பதற்கு காவற்கோபுர படிப்புக்கும் இதர கூட்டங்களுக்கும் நன்கு தயார்செய்யுங்கள். கூட்டங்களில் மற்றவர்களுக்கு ‘தாராளமாக தண்ணீர் பாய்ச்சுவதன்’ மூலம், உங்களுக்கும் ‘தாராளமாக தண்ணீர் பாய்ச்சப்படும்.’—நீதி. 11:25.
6 வெளி ஊழியம்: பெருக விதைப்பதைப் பற்றிய இந்த நியமம் வெளி ஊழியத்தைவிட வேறு எதிலும் அதிக உண்மையாய் இருப்பதில்லை. அதற்காக நாம் எவ்வளவதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ அவ்வளவதிக ஆர்வமூட்டும் அனுபவங்களையும், பயனளிக்கும் மறுசந்திப்புகளையும், பலனளிக்கும் பைபிள் படிப்புகளையும் நாம் பெற வாய்ப்புகள் இருக்கின்றன.
7 வெளி ஊழியத்தில் பெருக விதைத்தல் தரத்தையும் அளவையும் உட்படுத்துகிறது. நம்முடைய ஊழியத்தின் தரத்தை உயர்த்த உதவும் ஒரு மிகச் சிறந்த துணை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகமாக இருக்கிறது. பக்கங்கள் 9-15-ல் 18 பேச்சுப் பொருட்களை உள்ளடக்கும் 40-க்கும் மேற்பட்ட அறிமுகங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவை வீடுகளில் உள்ளவர்களுடைய ஆர்வத்தைத் தூண்ட உதவுகின்றன. அக்கறைகாட்டுவதைக் காண்பீர்களென்றால், அதைக் குறித்துக்கொள்ள நிச்சயமாக இருங்கள். அவ்வாறு செய்வதன்மூலம் நீங்கள் திரும்ப சென்று உங்களுடைய விதைத்தலின் பலனை அறுவடை செய்யலாம். நம்பக்கூடியவகையில், உங்களுடைய முயற்சிகள் ஒரு பைபிள் படிப்பிற்கு வழிநடத்தும். அப்போது பெருக விதைப்பது எவ்வாறு என்று நீங்கள் மற்றொருவருக்குக் கற்றுக்கொடுக்க முடியும்.
8 நாம் பெருக விதைத்தால், யெகோவாவிடமிருந்து அபரிமிதமான ஆசீர்வாதங்களை எதிர்பார்க்க முடியும்.—மல். 3:10.