உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/95 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • இதே தகவல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளி நன்மைகளைக் கொண்டுவருகிறது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • மிக முக்கியமானவற்றிற்கு நம்மை தயார்படுத்தும் ஒரு பள்ளி
    நம் ராஜ்ய ஊழியம்—2002
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • வெற்றிகரமான உலகளாவிய பள்ளி
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 5/95 பக். 3

கேள்விப் பெட்டி

◼ நாம் கூட்டங்களுக்கு எவற்றையெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும்?

நாம் ஒவ்வொரு வாரமும் சபை கூட்டங்களில், பயனுள்ள போதனையையும் உற்சாகத்தையும் பெறுகிறோம். (ஏசா. 48:17; எபி. 10:24, 25) என்றபோதிலும், எவ்வளவு பயனடைகிறோம் என்பது நாம் நன்கு தயாரித்து வருகிறோமா இல்லையா என்பதையே பெரிதளவு சார்ந்திருக்கிறது.

படிப்பிற்குரிய கட்டுரையையும் கூட்டங்களுக்குத் தேவையான மற்ற பொருட்களையும் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் சொந்தமாக வைத்திருப்பது நல்லது. ஒரு பைபிள், ஒரு பாட்டுப்புத்தகம், அங்கு படிக்கக்கூடிய பிரசுரம்(ங்கள்), ஒரு நோட்டுப்புத்தகம், ஒரு பேனா அல்லது பென்சில் ஆகியவற்றை இது உட்படுத்தும்.

தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்கு, தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை மற்றும் தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல் தேவைப்படுகின்றன. இவை, கொடுக்கப்படுகிற மாணாக்கர் பேச்சுக்களின் பொருளை மனதில் வைப்பதற்கும் பள்ளி கண்காணி ஆலோசனை கொடுக்கும்போது அதில் கவனத்தை ஊன்றவைப்பதற்கும் நமக்கு உதவுகின்றன. அங்கு கொடுக்கப்படும் ஆலோசனைகள் மற்றும் புத்திமதிகளை நம்முடைய பேச்சுக்கள், வெளி ஊழிய பிரசங்கங்கள் ஆகியவற்றை முன்னேற்றுவிக்க தனிப்பட்ட விதத்தில் பொருத்திக்கொள்ளலாம். ஜனவரி முதல், ஆங்கில அட்டவணையிலுள்ள போதகப் பேச்சுக்கள் பெரும்பாலும் யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்பதிலிருந்து இருக்கும். குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் தன் சொந்த பிரதியை எடுத்துசெல்வது நடைமுறையற்றதாக இருக்கலாம்; அந்தக் குடும்பத்தினர் குறிப்புகளைப் பார்ப்பதற்கு ஏதுவாக ஒருவேளை ஒரு புத்தகத்தைக் கொண்டு வரலாம். ஆனாலும், பிராந்திய மொழி அட்டவணைகளைப் பின்பற்றும் சபைகளில், ஒவ்வொரு நபரும் இந்த அட்டவணைகளில் சிந்திக்கப்படுகிற கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள், ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் புத்தகம் ஆகியவற்றின் சொந்த பிரதியைக் கொண்டுவருவது நல்லது.

ஊழியக் கூட்டத்திற்கு, அப்போதைக்குரிய நம் ராஜ்ய ஊழியம் மற்றும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் ஆகியவற்றை வைத்திருக்கவேண்டியது அவசியம். கூட்டத்தின்போது மேற்கோள் காட்டப்படக்கூடிய, நடித்துக்காட்டப்பட வேண்டிய பிரசங்கங்களில் பயன்படுத்தப்படும் பிரசுரங்கள் போன்ற அனைத்தையும் எடுத்துச்செல்லுங்கள். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தின் ஒரு பிரதியை மூப்பர்கள் வைத்திருக்க வேண்டும்.

பிள்ளைகள் அமைதியாக இருந்து சபை கூட்டங்களில் கவனம் செலுத்தும்படி பெற்றோர் பார்த்துக்கொள்ளவேண்டும். அவர்களால் வாசிக்க முடிவதற்கு முன்னரேகூட காவற்கோபுரம், மற்ற பிரசுரங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட பிரதிகளை அவர்களுக்குக் கொடுப்பது அக்கறை காட்டும்படி உற்சாகப்படுத்தும். தேவராஜ்ய பிரசுரங்களை மதிப்பதற்கும் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் இளைஞர் கற்பிக்கப்படும்போது, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆரோக்கியமான ஆவிக்குரிய பழக்கங்கள் உருவாகின்றன.

தேவையான எல்லாவற்றோடும் வந்தோமென்றால், சபை கூட்டங்களிலிருந்து நாம் பெறும் சந்தோஷமும் திருப்தியும் மிகவும் அதிகரிக்கின்றன. (2 தீ. 3:17) நாம் “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய [கடவுளுடைய] சித்தத்தை அறிகிற அறிவினால் நிரப்பப்”படுவதை உறுதிசெய்துகொள்ள இதுவே மிகச் சிறந்த வழியாக இருக்கிறது.—கொலோ. 1:9.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்