உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 6/95 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • இதே தகவல்
  • சபைக் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • சபையில் யெகோவாவைப் புகழுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • “சபை நடுவில்” யெகோவாவை துதியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • கூட்டங்களில் பதில் சொல்வதன்மூலம் ஒருவரையொருவர் கட்டி எழுப்புங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 6/95 பக். 2

கேள்விப் பெட்டி

◼ கூட்டங்களில் மிகவும் பிரயோஜனமான முறையில் நாம் குறிப்புகள் சொல்லுவது எப்படி?

வாராந்தர சபைக் கூட்டங்களில் ஒன்றுகூடிவருவதை நாம் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறோம். அச்சமயம் நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கும், நாம் குறிப்புகள் சொல்லுவதன்மூலம் மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் வாய்ப்பு நமக்கிருக்கிறது. (நீதி. 20:15, NW; எபி. 10:23, 24) குறிப்புகள் சொல்வதை நாம் ஒரு சிலாக்கியமாக கருதி, அதில் தவறாது பங்குகொள்ள முயற்சிக்கவேண்டும். இதை மிகவும் பிரயோஜனமான முறையில் நாம் செய்வது எப்படி?

தயாரிப்பதே முதல் படியாகும். கொடுக்கப்பட்ட பகுதிகளை முன்கூட்டியே வாசித்து தியானிப்பது முக்கியம். கொடுக்கப்பட்ட பகுதியின் மெய்யான அர்த்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள். அவ்விஷயம் ஏற்கெனவே கலந்தாலோசிக்கப்பட்டு இருக்கலாம். இருப்பினும், விரிவாக்கப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட கருத்துக்கள் எவையேனும் கொடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று பாருங்கள். அப்பகுதியின் முக்கியப்பொருளை ஞாபகத்தில் வைத்திருங்கள். பைபிள்புத்தகம் ஒன்றை ஆழ்ந்து படிப்பதைச் சிறப்பித்துக் காட்டக்கூடிய, வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் (ஆங்கிலம்) புத்தகத்தைப்போன்ற பிரசுரத்திலிருந்து குறிப்புகளைத் தயாரித்துக் கொண்டிருக்கையில், குறிப்பிட்ட ஒரு வசனம் அதைச் சுற்றியுள்ள வசனங்களோடு எவ்வகையில் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைக் காண முயற்சியுங்கள். இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவது உங்களுடைய சிந்தனாசக்தியைத் தூண்டிவிடும். நல்ல குறிப்புகளைத் தயாரிக்கவும், பங்குகொள்வதில் சந்தோஷத்தைக் கண்டடையவும் இது உங்களுக்கு உதவிசெய்யும்.

படிக்கப்படுகிற பிரசுரத்தை ஆதாரமாகக்கொண்டு, சுருக்கமாக, எளிமையாக சொல்லப்படும் குறிப்புகளே மிகச் சிறந்த குறிப்புகள் ஆகும். முதலில் குறிப்பு சொல்பவர் கேள்விக்கு நேரடியான பதிலை சொல்லிவிட்டு, மற்ற கருத்துக்களைக் கூடுதல் குறிப்புகளாக சொல்லும்படி விட்டுவிடவேண்டும். அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்படியும், மற்றவர்கள் குறிப்பு சொல்வதைத் தடைசெய்யக்கூடிய விதத்திலும் நீண்ட குறிப்புகளைச் சுற்றிவளைத்து சொல்லாதீர்கள். வார்த்தைக்கு வார்த்தை பிரசுரத்திலிருந்து வாசிக்காமல், உங்கள் கருத்தை சொந்த வார்த்தைகளில் சொல்லுங்கள். துணைக் குறிப்புகள், இடக்குறிப்பு காட்டப்பட்டுள்ள வசனங்களில் அடங்கியுள்ள கருத்துக்களை உள்ளடக்கலாம். ஏற்கெனவே சொல்லப்பட்டதைத் திரும்ப சொல்வதைத் தவிர்க்கும்பொருட்டு, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனமாகக் கேளுங்கள்.

நீங்கள் பலமுறை கையைத் தூக்குவது நல்லதுதான், ஆனால் ஒவ்வொரு பாராவுக்கும் அல்ல. குறிப்பு சொல்வதில் பங்குகொள்ளும்படி இளைஞர்களை நாங்கள் அழைக்கிறோம். குறிப்பு சொல்வதற்கு நீங்கள் கூச்சப்படலாம். அப்படியானால், எந்தப் பாராவில் நீங்கள் பதில் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கூட்டத்தை நடத்துபவரிடம் முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். அப்போது அந்தப் பாரா வரும்போது அவர் உங்களுக்கு அநேகமாக வாய்ப்பளிப்பார்.

சபையினர் கலந்துகொள்ள வேண்டியிருக்கும் சபைக் கூட்டங்களில், பகிர்ந்துகொள்ள ஏதாவதைக் கொண்டிருக்கும்படி தயாரிக்க நாம் அனைவருமே இருதயப்பூர்வமாக முயற்சிக்கவேண்டும். அத்தகைய கூட்டங்கள் வெற்றியடைவது, குறிப்பு சொல்வதற்கான நம்முடைய விருப்பம் மற்றும் பிரயோஜனமான முறையில் நாம் குறிப்புகள் சொல்லுவது ஆகியவற்றின்பேரில் பெருமளவில் சார்ந்திருக்கிறது என்பதை ஞாபகம் வைத்திருங்கள்.—சங். 26:12.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்