‘திருத்தமான அறிவிலே மேன்மேலும் விருத்தியடையுங்கள்’
கடவுளை பற்றிய திருத்தமான அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது. (யோவா. 17:3) யெகோவாவை பற்றிய திருத்தமான அறிவிலே விருத்தியடைய நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்க வேண்டும். (கொலோ. 1:9, 10, NW) ஏப்ரல் 29 முதல், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை புத்தகப் படிப்பிலே நாம் படிப்போம். கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய நம் சொந்த புரிந்துகொள்ளுதல் மெருகேற்றப்படுவதோடு மட்டுமின்றி, மற்றவர்களுக்குப் போதிப்பதற்கும் நாம் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாய் இருப்போம். ஒவ்வொரு வாரமும் முன்கூட்டியே தயாரித்து, கூட்டத்திற்குச் சென்று, அதில் பங்கேற்று, அந்த விஷயத்தை ஊழியத்தில் உபயோகித்தால் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், உங்கள் குடும்பமும் ஆசீர்வதிக்கப்படும்.