சத்தியத்தைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருங்கள்
1 அப்போஸ்தலர்கள் இவ்வாறு அறிவித்தார்கள்: ‘நாங்கள் கண்டவைகளையுங் கேட்டவைகளையும் பேசாமலிருக்க எங்களால் முடியாது.’ இன்று, நாமும் தொடர்ந்து சத்தியத்தைப் பேசிக்கொண்டு இருக்க வேண்டும். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை விநியோகிப்பது செவிகொடுத்துக் கேட்போரைக் கண்டுபிடிப்பதற்கு வழிவகையாக இருக்கிறபோதிலும், அக்கறை காட்டுவோருக்கு சத்தியத்தைப் பற்றி மேலுமதிகத்தைக் கற்பிக்க வேண்டுமானால் நாம் திரும்பச் சென்று சந்திக்க வேண்டும்.
2 “இனி போர்களே இல்லாமல் போகையில்” என்ற கட்டுரை பொருளைக் கொண்ட ஏப்ரல் விசேஷித்த “விழித்தெழு!” வெளியீட்டை அளித்ததைப் பின்தொடர்ந்து செய்யும் மறுசந்திப்பில் பின்வருமாறு கேட்பதன்மூலம் பைபிள் படிப்பை நீங்கள் அறிமுகம் செய்யலாம்:
◼ “போன தடவை, தேசங்களின் போர்களைப் பற்றியும் அவற்றில் மதங்கள் பங்கெடுப்பதைப் பற்றியும் நாம் பேசினோம். இத்தகைய சம்பவங்கள், கடைசி நாட்கள் என்று பைபிள் அழைப்பவற்றில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று தெளிவாக நிரூபிக்கிறதென்பதை நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? [அறிவு புத்தகத்தைக் காட்டுங்கள். அதிகாரம் 11-ன் முதல் பாராவை வாசித்துவிட்டு, 102-ம் பக்கத்திலுள்ள பெட்டியிலடங்கியவற்றை விளக்கிக் காட்டுங்கள்.] இந்தப் புத்தகம் இவ்விஷயத்தோடுகூட, இங்கே பொருளடக்கத்தில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள வேறு 18 விஷயங்களையும் விளக்கிக் காட்டுகிறது. [பக்கம் 3-ஐக் காட்டுங்கள்.] நீங்கள் அனுமதித்தால், இந்த முக்கிய பைபிள் காரியங்களைப் புரிந்துகொள்ள இந்தப் புத்தகம் எவ்வாறு உங்களுக்கு உதவிசெய்யக்கூடும் என்பதை நான் நடத்திக் காட்ட விரும்புகிறேன்.” அனுமதித்தால், 6-ம் பக்கத்தில் ஒரு படிப்பைத் தொடங்குங்கள்.
3 நீங்கள் திரும்ப வந்து, பாதுகாப்பான வாழ்க்கையை இப்போது அனுபவித்து மகிழ்வது எவ்வாறு சாத்தியமாக உள்ளது என்பதை விளக்கிக்கூறுவதாகச் சொல்லியிருந்தால், பின்வருவதைப் போன்ற ஒன்றைச் சொல்லலாம்:
◼ “நாம் முதலில் சந்தித்தபோது, மனிதனின் எதிர்காலத்தைப் பற்றிய நல் நம்பிக்கைக்கான காரணத்தை நமக்கு அளிக்கிற பைபிள் பகுதி ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொண்டேன். இன்று, பாதுகாப்பான ஓர் உணர்ச்சியை இப்போதே நமக்குக் கொடுக்கக்கூடியவர் யார் என்பதைக் காட்டும் ஒன்றுக்கு உங்கள் கவனத்தை திருப்ப நான் விரும்புகிறேன்.” சங்கீதம் 4:8-ஐ வாசியுங்கள். அறிவு புத்தகத்தில் 168-ம் பக்கத்துக்குத் திருப்பி, 19-ம் பாராவை வாசியுங்கள். பின்பு இவ்வாறு கேளுங்கள்: “இந்த வகையான பாதுகாப்பை உங்கள் வாழ்க்கையில் நீங்களும்கூட எவ்வாறு கண்டடையலாம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிற இலவச வீட்டு பைபிள் படிப்பை வைத்துக்கொள்வதில் நீங்கள் சந்தோஷம் அனுபவிக்க விரும்புவீர்களா?” சரி என்பதாக பதிலளித்தால் 1-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள்.
4 வேலை செய்யுமிடத்தில் நேர்மையாக இருப்பதன் அவசியம் தொடக்கத்தில் கலந்துபேசப்பட்டிருந்தால், மறுசந்திப்பின்போது பின்வரும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தலாம்:
◼ “வேலை செய்யுமிடத்தில் நேர்மையாக இருப்பதற்கான அவசியத்தைப் பற்றி நாம் பேசினோம் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். லூக்கா 16:10-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவின் கூற்றும் தொழிற்சந்தையில் ஒருவருடைய எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கலாம். [வசனத்தை வாசித்து விளக்கமளியுங்கள்.] நவீனகால மனிதனுக்கு நடைமுறையான மிகுந்த அறிவுரைகள் பைபிளில் அடங்கியிருக்கின்றன. அவற்றில் மத்தேயு 4:4-ல் காணப்படுகிற இயேசுவின் வார்த்தைகளும் அடங்கியுள்ளன.” வசனத்தை வாசியுங்கள். பைபிளை ஒழுங்காகப் படிப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுங்கள். முதல் சந்திப்பில் சந்தா ஏற்கப்பட்டில்லை என்றால், இப்போது ஏற்கும்படி அதை அளியுங்கள் அல்லது அறிவு புத்தகத்தில் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை ஏற்கும்படி அளியுங்கள்.
5 பின்வருமாறு சொல்வதன்மூலம், மறுசந்திப்பில் படிப்பை ஏற்கும்படி நேரடியான அளிப்பு முறையை நீங்கள் பயன்படுத்தலாம்:
◼ “பைபிள் கற்பிக்கிறவற்றைப் பற்றி எல்லா இடங்களிலுமுள்ள மக்களுக்கும் தெரிவிக்கும்படி, எங்கள் பத்திரிகைகளை நாங்கள் உலகமெங்கும் விநியோகிக்கிறோம். தாங்கள் கற்றுக்கொள்வதன் மதிப்பைத் தனி நபர்கள் உணர்ந்தால், இலவச வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை நாங்கள் அளிக்கிறோம். [காவற்கோபுர பின் அட்டையிலுள்ள ‘உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?’ பெட்டியைக் குறிப்பிடுங்கள்.] நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற இந்தப் புத்தகத்தை, ஒரு வழிகாட்டியாக நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரு படிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறதென்பதை நான் உங்களுக்குச் சுருக்கமாகக் காட்டுகிறேன்.”
6 நாம் தொடர்ந்து சத்தியத்தைப் பேசிக்கொண்டிருந்தால், அதற்குச் செவிகொடுத்துக் கேட்டு, சாதகமாய்ப் பிரதிபலிப்பவர்கள் சிலர் இருப்பார்கள் என்று நாம் நிச்சயமாக இருக்கலாம்.—மாற். 4:20.