நட்பான உரையாடல்களால் இருதயத்தை அடைய முடியும்
1 “எண்ணங்களின் வாய்மொழியான பரிமாற்றம்” என்று உரையாடலை வரையறுக்கலாம். மற்றவர் அக்கறைக்கொள்ளும் தலைப்பின்பேரில் நட்பான உரையாடலைத் துவங்குவது ஒருவேளை அவர்களின் ஆர்வதைக் கவர்ந்து ஈர்க்கலாம், இது ராஜ்ய செய்தியைக் கொண்டு அவர்களின் இருதயத்தை அடைய நமக்கு உதவலாம். மக்களை நட்பான மற்றும் சாவகாசமான உரையாடலில் ஈடுபடுத்துவதானது அவர்களுக்கு சொற்பொழிவாற்றுவதைக் காட்டிலும் இன்னும் அதிக பயனுள்ளதாய் இருப்பதை அனுபவம் காட்டியுள்ளது.
2 நட்பான உரையாடலை துவங்குவது எப்படி: நம்மால் மற்றவர்களுடன் உரையாட இயலவேண்டுமானால், சில கருத்துக்களையும் வேதவசனங்களையும் கவரத்தக்கவிதத்தில் அமைத்து அளிக்கவேண்டும் என்று அர்த்தமல்ல. வெறுமனே அந்த நபரை நம்முடன் பேசுவதற்கு ஈடுபடுத்தவேண்டும். உதாரணமாக, நம்முடைய அடுத்த வீட்டுக்காரரிடம் நட்பான உரையாடலை நாம் கொண்டிருக்கும்போது, அது விறைப்பாக இருப்பதில்லை, ஆனால் சாவகாசமாக இருக்கிறது. அடுத்த வார்த்தைக்காக நாம் யோசித்துக்கொண்டிருப்பதில்லை, ஆனால் அவர் தெரியப்படுத்தும் கருத்துக்களுக்கு இயல்பாகவே பிரதிபலிக்கிறோம். அவர் என்ன சொல்கிறாரோ அதில் உண்மையான அக்கறையைக் காட்டுவது ஒருவேளை நம்மிடம் உரையாடலை தொடருவதற்கு அவரை உற்சாகப்படுத்தலாம். மற்றவர்களிடம் சாட்சிகொடுக்கையிலும் இதுவே உண்மையாக இருக்கவேண்டும்.
3 குற்றச்செயல், இளைஞரின் பிரச்சினைகள், விவாதத்திற்குரிய உள்ளூர் விவகாரங்கள், உலக நிலைமைகள் அல்லது சீதோஷணநிலை போன்ற தலைப்புகளை நட்பான உரையாடல்களைத் துவங்க உபயோகிக்கலாம். மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கும் விஷயங்கள் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதில் அதிக ஆற்றலுள்ளவையாக உள்ளன. ஒருவழியாக உரையாடல் துவங்கப்பட்டதும், அதனை மெல்ல ராஜ்ய செய்தியினிடமாக நாம் திருப்பலாம்.
4 சாவகாசமான உரையாடலைக் கொண்டிருப்பதானது முன்தயாரிப்பு தேவையில்லை என்று அர்த்தமல்ல. அது தேவை. ஆயினும், வளைந்துகொடுக்காத ஒரு பேச்சு குறிப்புத்தாளை உருவாக்குவதற்கோ ஒரு சொற்பொழிவை மனப்பாடம் செய்வதற்கோ தேவையில்லை, அது வளைந்து கொடுக்காத அல்லது எதிர்ப்படும் சந்தர்ப்பசூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறக்கூடாத ஓர் உரையாடலில் விளைவடையும். (1 கொரிந்தியர் 9:20-23-ஐ ஒப்பிடுக.) தயாரிப்பதற்கான ஒரு சிறந்த வழியானது ஓரிரு வேதாகம தலைப்புகளைத் தேர்ந்தெடுங்கள், அவற்றைக் கருத்தில்கொண்டு அவற்றைச் சுற்றியே உரையாடலை கட்டி அமைத்திடுங்கள். இதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் காணப்படும் தலைப்புப் பொருட்கள் உதவியாக நிரூபிக்கும்.
5 நட்பான உரையாடலுக்கான முக்கிய பண்புகள்: மற்றவர்களுடன் உரையாடும்போது, நாம் கனிவுள்ளவர்களாகவும் பாசாங்கற்றவர்களாகவும் இருக்கவேண்டும். புன்சிரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் கூடிய தோற்றமானது இந்தப் பண்புகளைப் பிரதிபலிக்க உதவுகிறது. உலகிலேயே மிகச் சிறந்த செய்தியை நாம் கொண்டுள்ளோம்; இது நேர்மை இருதயமுள்ளோருக்கு மிகவும் ஏற்கத்தக்கதாக இருக்கிறது. நாம் அவர்கள்மீது கொண்டுள்ள அக்கறையானது நற்செய்தியை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உண்மையான ஆர்வத்தினால் தூண்டப்பட்டது என்பதை அவர்கள் உணருவார்களானால், அப்போது ஒருவேளை செவிசாய்க்க தூண்டப்படலாம்.—2 கொ. 2:17.
6 உரையாடலில் ஈடுபடுவது ஓர் இனிமையான அனுபவமாக இருத்தல் வேண்டும். ஆகவே, ராஜ்ய செய்தியை அளிக்கும்போது நாம் தயவாகவும் சாதுரியமாகவும் இருத்தல் வேண்டும். (கலா. 5:22; கொலோ. 4:6) யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நல் அபிப்பிராயத்தை அந்த நபரிடத்தில் விட்டுவர கடும் முயற்சி செய்யுங்கள். இந்த விதமாக, முதல் தடவையில் அந்த நபரின் இருதயத்தை அடைய நாம் வெற்றிபெறவில்லையென்றாலும், அடுத்த தடவை ஒரு சாட்சி அவரிடத்தில் உரையாடும்போது நன்கு பிரதிபலிக்கக்கூடியவராக அவர் இருக்கலாம்.
7 நட்பான ஓர் உரையாடலை துவங்குதல் ஒரு சிக்கலான சொற்பொழிவில் புலமை பெறுதலின் விளைவல்ல. அது வெறுமனே ஒரு நபருக்கு அக்கறையான தலைப்பின்பேரில் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயம் ஆகும். எப்போது நாம் முன்னதாகவே தயாரித்துவிடுகிறோமோ, அப்போது ஆட்களை நட்பான உரையாடலில் ஈடுபடுத்த நாம் தயாராக இருப்போம். நாம் சந்திப்போரின் இருதயங்களை அடைவதற்காக, கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த செய்திகளை, அதாவது நித்தியகால ராஜ்ய ஆசீர்வாதங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் நாம் முயற்சிப்போமாக.—2 பே. 3:13.