உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/96 பக். 2
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • உங்களுடைய சபையின் பொதுப் பேச்சு நிகழ்ச்சிக்கு முழுமையாக ஆதரவளியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • நான் எவ்வாறு சிறந்த பேச்சாளராக முடியும்?
    விழித்தெழு!—2004
  • தேவனை மகிமைப்படுத்துங்கள் மனிதனை அல்ல
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 8/96 பக். 2

கேள்விப் பெட்டி

◼ நியமிக்கப்பட்ட பொதுப் பேச்சாளர் ஒருவர் நேரத்தோடு கூட்டத்திற்கு வர தவறும்போது என்ன செய்யப்பட வேண்டும்?

எப்போதாவது, தவிர்க்க முடியாத சந்தர்ப்பச் சூழ்நிலைமைகள் ஒரு சகோதரரைத் தன்னுடைய நியமிக்கப்பட்ட பேச்சைக் கொடுக்க நேரத்தோடு வருவதை தடைசெய்கின்றன. ஒருவேளை அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவார் என்று நம்புவதற்கான காரணம் இருக்கும் என்றால், முன்னதாக காவற்கோபுர படிப்பை நடத்த மூப்பர்கள் முடிவு செய்யலாம்; பிறகு பொதுக் கூட்டம் அதனை அடுத்து தொடரலாம். ஒருவேளை அவர் வரமாட்டார் என்பது தெள்ளத்தெளிவாக இருந்தால் அப்போது என்ன? ஒருவேளை உள்ளூர் பேச்சாளர்களில் ஒருவர் தான் ஏற்கெனவே தயாரித்திருக்கும் ஏதேனும் ஒரு பேச்சைக் கொடுக்கலாம்.

முன்கூட்டியே கவனமாக செய்யப்படும் திட்டமானது பொதுவாகவே இந்தப் பிரச்சினையைத் தடுத்துவிடுகிறது. பொதுப் பேச்சு ஒத்திசைவாளர், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே ஒவ்வொரு பேச்சாளரோடும் தொடர்புகொண்டு, அவருக்கு நியமிப்பு இருப்பதை நினைவுபடுத்த வேண்டும். கூட்டத்தின் நேரம், ராஜ்ய மன்றத்தின் விலாசம், கூடுமானால் ஒருவேளை தொலைபேசி எண், கூடவே மன்றத்தை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதற்கு தெளிவான வழிகாட்டும் விவரங்கள் அந்த நினைவுபடுத்துதலில் கண்டிப்பாக உள்ளடக்கி இருக்க வேண்டும். அந்தப் பேச்சாளர் இந்த விவரங்களையெல்லாம் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். அந்த நியமிப்பை அவர் கருத்தாய் ஏற்று, தனது தனிப்பட்ட விவகாரங்களில் ஏதாவது தேவையான சரிப்படுத்துதல்களைச் செய்துகொள்ள வேண்டும், அப்போது அவரால் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியும். ஒருவேளை தவிர்க்க முடியாத ஏதோவொன்று குறுக்கிட்டு, அவரைத் தடுத்துவிடுமென்றால், அவர் உடனடியாக பொதுப் பேச்சு ஒத்திசைவாளருடன் தொடர்புகொள்ள வேண்டும்; அப்போதுதான் பதில் ஆளை அவர் ஏற்பாடு செய்ய முடியும். கடைசி நிமிட ரத்துக்களைத் தவிர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டாக வேண்டும். ஒருவேளை அந்தப் பேச்சாளர் தாமதித்து விட்டார், சில நிமிடங்களே தாமதமாகும் என்றால், அவர் ராஜ்ய மன்றத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டும்; அப்போது என்ன செய்வதென்று சகோதரர்கள் அறிந்து கொள்வார்கள்.

பொதுப் பேச்சு நியமிப்புகளுக்கான மதித்துணருதல், சிறந்த முன் திட்டமிடுதல், நினைவுபடுத்துதல், கவனமான கண்காணிப்பு ஆகியவை பயனுள்ள பொதுப் பேச்சை ஒவ்வொரு வாரமும் சபை அனுபவித்து மகிழ இயல்வதை நிச்சயப்படுத்துகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்