கூட்டங்கள் நற்கிரியைகள் செய்ய ஊக்குவிக்கின்றன
1 சபைக் கூட்டங்களுக்குச் செல்வதும் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதும் நம் வணக்கத்தின் இரு முக்கிய அம்சங்களாகும். இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று மற்றொன்றைப் பாதிக்கிறது. கிறிஸ்தவ கூட்டங்கள் நற்கிரியைகளுக்கு ஏவுகின்றன; அவற்றில் மிகச் சிறந்தவை ராஜ்ய பிரசங்கிப்பு வேலையும் சீஷராக்கும் வேலையுமாகும். (எபி. 10:24) நாம் கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டால், விரைவிலேயே பிரசங்கிப்பதையும் நிறுத்திவிடுவோம்; ஏனெனில் பிரசங்கிப்பதற்கு ஏவப்படமாட்டோம்.
2 வாராந்தர கூட்டங்களில், பிரசங்கிப்பதற்கு நம்மை உந்துவிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஆவிக்குரிய போதனையை நாம் பெறுகிறோம். காலங்களின் அவசரத்தன்மை நமக்கு தொடர்ந்து நினைப்பூட்டப்படுகிறது; இது, பைபிளின் உயிர்காக்கும் செய்தியை மற்றவர்களுக்குச் சொல்லும்படி நம்மை உந்துவிக்கிறது. பிரசங்க வேலையில் சகித்திருக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம், பலப்படுத்தவும்படுகிறோம். (மத். 24:13, 14) கூட்டங்களில் பதில்சொல்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், மற்றவர்கள்முன்பாக நமது விசுவாசத்தை எடுத்துச்சொல்ல நாம் இன்னும் நன்றாக பழக்குவிக்கப்படுகிறோம். (எபி. 10:23) தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருவதன் மூலம், இன்னுமதிக திறம்பட்ட ஊழியர்களாவதற்கும் நமது போதனா திறமைகளை முன்னேற்றுவிப்பதற்கும் பயிற்றுவிப்பைப் பெறுகி
றோம்.—2 தீ. 4:2.
3 ஊழியக் கூட்டங்கள் எவ்வாறு பிரசங்கிக்கும்படி நம்மை ஏவுகின்றன: நம் ராஜ்ய ஊழியத்தை முன்கூட்டியே படித்துவரும்படி நாமனைவரும் உற்சாகப்படுத்தப்படுகிறோம். அப்போது, ஊழியக்கூட்டத்தில் அமர்ந்து, மேடையில் செய்துகாண்பிக்கப்படும் நடிப்புகளைப் பார்க்கையில் நாம் படித்தது நம் மனதில் பதிகிறது. வெளி ஊழியத்திற்கு செல்லும்போது, நம் ராஜ்ய ஊழியத்தில் படித்தவற்றை நாம் நினைத்துப்பார்த்து, நடித்துக்காண்பிக்கப்பட்ட பிரசங்கங்களை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்; இவ்வாறு செய்வதன் மூலம் அதிக திறம்பட்ட விதத்தில் சாட்சி கொடுக்கிறோம். இதுதான் அநேக பிரஸ்தாபிகளுடைய அனுபவமாய் இருந்திருக்கிறது.
4 ஊழியக் கூட்டத்தைப் பின்தொடர்ந்து, ஒன்றாக ஊழியம் செய்வதற்காக சிலர் மற்றவர்களோடு ஏற்பாடுகள் செய்கின்றனர். ஊழியத்தில் பொருத்தக்கூடிய குறிப்புகள் பிரஸ்தாபிகளின் மனதில் பதிந்திருக்கின்றன; அவற்றை பயன்படுத்திப் பார்க்க அவர்கள் தூண்டப்படுகிறார்கள், ஏனென்றால் இந்தக் கூட்டங்கள் பிரசங்க வேலையில் ஒவ்வொரு வாரமும் ஈடுபடும்படி அவர்களை உற்சாகப்படுத்தியிருக்கின்றன.
5 நமது கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஈடிணை வேறெதுவுமில்லை; அங்கு நாம் உடன் வணக்கத்தாரோடு ஒன்றுகூடுகிறோம், நற்கிரியைகளுக்கும் ஏவப்படுகிறோம். நம் ஊழியம் செழித்தோங்க, நாம் தொடர்ந்து சபைக் கூட்டங்களுக்குச் செல்லவேண்டும். ‘சபை கூடிவருதலை . . . நாம் விட்டுவிடாமல்’ இருப்பதன்மூலம், யெகோவா அளித்திருக்கும் இந்த அருமையான ஏற்பாட்டிற்குப் போற்றுதல் தெரிவிப்போமாக.—எபி. 10:25.