ராஜ்ய மன்றம் கட்டுவதற்கான தேவையை பூர்த்திசெய்தல்
1 உலகளாவிய பிராந்தியத்தை கவனிக்கையில், யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு அனுபவித்துவரும் மகத்தான அதிகரிப்பை பார்ப்பது நம்மை களிகூரச்செய்கிறது. சென்ற வருடம், இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 25 புதிய சபைகள் உருவாயின, அதே சமயத்தில் உலகமுழுவதிலும் மொத்தமாக 3,288 சபைகள் சேர்க்கப்பட்டன. இந்த அதிகரிப்பின் காரணமாக, அதிகமான ராஜ்ய மன்றங்கள் தேவையாயிருப்பது ஆச்சரியமல்லவே.
2 மண்டல கட்டடக் குழுக்கள்: ராஜ்ய மன்ற கட்டுமான திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக, தமிழ் நாடு வட்டாரங்களிலுள்ள சபைகளுக்கு உதவுவதற்கு ஒன்றும் கேரளம் வட்டாரங்களுக்கு மற்றொன்றுமாக இப்போது, சங்கமானது இரண்டு மண்டல கட்டடக் குழுக்களை நியமித்திருக்கிறது. இந்த மண்டல குழுக்களுக்கு, புதிய கட்டடங்களாகவோ புதுப்பிக்கப்படும் இடங்களாகவோ இருக்கும் எல்லா ராஜ்ய மன்ற கட்டடத் திட்டங்களையும் மேற்பார்வை செய்யும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உலகம் பொதுவாக வெளிப்படுத்தும் மனநிலையிலிருந்து முற்றிலும் நேர் எதிராக இருக்கும் கொடுத்தல் மற்றும் சுயதியாகம் என்னும் கிறிஸ்தவ ஆவியினால் ராஜ்ய மன்ற கட்டுமானத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் நிறைவேற்றப்படுகின்றன.—2 தீ. 3:2, 4.
3 கட்டுமான திட்டங்களை மறுபார்வை செய்வதில் மண்டல குழுக்களுக்கு உதவுவதற்காக சங்கமானது வழிகாட்டுக் குறிப்புகளை அவைகளுக்கு கொடுத்திருக்கிறது. இப்படியாக, எளிமையாகவும் செயல்படக்கூடியதாகவும், அர்ப்பணிக்கப்பட்ட வளங்களை ஞானமாக உபயோகிப்பதாகவும் இருக்கும் ஒரு ராஜ்ய மன்றத்தை திட்டமிடுவதில் இந்த குழுக்கள் உள்ளூர் மூப்பர்களுக்கு உதவ தயார்நிலையில் இருக்கும். மண்டல கட்டடக் குழுக்களில் சேவை செய்யும்படி நியமிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த மூப்பர்களின் ஆலோசனைகளிலிருந்து முழு பயனை அடைய, எல்லா காரியங்களையும் கவனமாக சீர்தூக்கி பார்ப்பது மூப்பர் குழுக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்.—லூக். 14:28-30.
4 கட்டுமான செலவுகளை சிக்கனமாக செய்தல்: ஒரு தகுதிவாய்ந்த மூப்பருடைய மேற்பார்வையின்கீழ் உள்ளூர் சபைக்காக பொருட்களை வாங்கும் இலாக்கா ஒன்று அமைக்கப்பட வேண்டுமென மண்டல கட்டடக் குழுக்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இலாக்காவில் வேலை செய்யும் சகோதரர்கள், அநேக டீலர்களுடைய விலைகளை ஒப்பிடுவதன் மூலமும் நல்லவிதமாக பேரம் பேசுவதன் மூலமும் சாதகமாக இருக்கும் விலைகளை கண்டுபிடிக்க, மார்கெட்டில் நிலவும் விலைகளை கவனமாக ஆராய்வர். இவ்விதமாக, எந்த சப்ளையர்களை உபயோகிக்க வேண்டும், எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கலாம்.
5 சில சபைகளுக்கு அவற்றின் ராஜ்ய மன்ற கட்டுமான திட்டத்தை முடிப்பதற்கு கூடுதல் பொருளாதார உதவி தேவைப்படும். சங்கத்திடமிருந்து முன்பணம் கேட்பதற்குமுன், பின்வருபவைகளை தீர்மானிக்க மூப்பர்கள் உள்ளூரில் ஒரு சர்வே எடுக்கவேண்டும்: (1) இப்போதைய தேவைகளுக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் போதுமானதாக இருக்கும் இடத்தை வாங்குவதற்கும், கட்டுமான செலவுகளுக்கும் உதவ எவ்வளவு நன்கொடை ஆரம்பத்தில் கிடைக்கும், (2) உள்ளூரில் சம்பந்தப்பட்ட சபையோடு கூட்டுறவு கொண்டவர்கள் எவ்வளவு கடனாக கொடுக்கமுடியும், மேலும் (3) சபையின் செலவுகளை சமாளிப்பதற்கும், சங்கத்திடமிருந்து ஏதாவது முன்பணம் வாங்கியிருந்தால் அதை திரும்ப செலுத்துவதற்கும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நன்கொடை கிடைக்கும். இந்த சர்வே எடுப்பதற்காக கொடுக்கப்படும் பேப்பர்களில் யாருடைய பெயரும் எழுதப்படக்கூடாது.
6 ராஜ்ய மன்ற டிசைனை எளிமையாக வைத்திருங்கள்: ராஜ்ய மன்றங்களை ஒரேமாதிரியாக கட்ட உதவுவதற்கு, சங்கமானது 100, 150 மற்றும் 250 பேர் அமரக்கூடிய அளவில் மூன்று வகையான ராஜ்ய மன்ற டிசைன்களை கொண்டிருக்கிறது. தேவையை பூர்த்திசெய்யும் அதே சமயத்தில், தங்கள் நண்பர்கள் மீதோ சங்கத்தின் ராஜ்ய மன்ற நிதி மீதோ தேவையற்ற பாரத்தை சுமத்தாமலிருக்க, எதிர்கால வளர்ச்சியை மனதில்கொண்டு இந்த அடிப்படை டிசைன்களிலிருந்து மூப்பர்கள் தெரிவுசெய்யலாம்.
7 ஒரு டிசைனை தெரிவு செய்வதற்குமுன், சபை மூப்பர்கள் மண்டல குழுவோடு தொடர்புகொண்டு, சங்கத்தால் கொடுக்கப்பட்ட திட்டங்களை வழிகாட்டியாக வைத்து, கட்டடத்தின் அமைப்புத்திட்டத்தை பற்றி கலந்துபேச வேண்டும். மண்டல கட்டடக் குழு இன்னும் நியமிக்கப்படாத இடங்களில், தங்கள் ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்டத்தை பற்றி எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் மூப்பர்கள் சங்கத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
8 வாலண்டியர்கள் ஒரு நல்ல வேலையை ஆதரிக்கின்றனர்: ராஜ்ய மன்ற கட்டுமானத்தில் உதவிசெய்யும் அநேக வாலண்டியர்களுக்கு சங்கமானது நன்றியுள்ளதாக இருக்கிறது. என்றபோதிலும், இன்னும் அதிகமான வாலண்டியர்கள் தேவை என்று மண்டல கட்டடக் குழுக்கள் அறிவிக்கின்றன. ராஜ்ய அக்கறைகளை ஆதரிப்பதில் இது ஒரு முக்கியமான சேவையாகும்.—1 கொ. 15:58.
9 ஒருவர் எவ்வாறு வாலண்டியராக சேவிக்கமுடியும்? கேட்கப்படும்போது சங்கமானது ராஜ்ய மன்ற கட்டுமான வேலையாள் வினாப்பட்டியல் (Kingdom Hall Construction Worker Questionnaire) பாரங்களை மூப்பர்களுக்கு அனுப்புகிறது. பின்னர் தகுதிவாய்ந்த வேலையாட்களுக்கு இந்தப் பாரங்கள் கொடுக்கப்படுகின்றன. பொருத்தமான திறமைகளுள்ள, சபையோடு நல்ல நிலைநிற்கையிலுள்ள முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளை முன்வந்து சேவைசெய்யும்படி உற்சாகப்படுத்துகிறோம். கட்டுமானத் திறமைகளும், கட்டுமானத்தோடு நேரடியாக சம்பந்தப்படாத மற்ற திறமைகளும் தேவைப்படுகின்றன. தங்கள் சபையின் நடத்தும் கண்காணி அல்லது செயலாளரிடமிருந்து தேவையான பாரங்களை வாலண்டியர்கள் பெற்றுக்கொண்டு, வாணிகத் தொழிலாளராக (tradesmen) அல்லது உணவு வழங்கீடு, பாதுகாப்பு, பொருட்களை கையாளுதல், வரவுசெலவு கணக்கு வைத்தல், சட்டப்பூர்வ ஆவணங்களை கையாளுதல் போன்ற மற்ற துறைகளில் தங்களுக்குள்ள அனுபவத்தை குறிப்பிடலாம்.
10 மேலுமாக, அருகில் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்படும்போது, கட்டுமானத் திறமைகள் இல்லாத உங்கள் சபையிலுள்ள பிரஸ்தாபிகள், பொதுவான வேலையாட்களின் பாகமாக சேர்ந்து உதவிசெய்யும் வாய்ப்பை கொண்டிருப்பார்கள். இந்த வேலையாட்கள் வாலண்டியருக்கான வினாப்பட்டியலை பூர்த்திசெய்யமாட்டார்கள். இந்த ஒரு திட்டத்திற்காக மட்டும் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் சபையின் மூப்பர்கள் மூலமும் அருகிலிருக்கும் சபையின் மூப்பர்கள் மூலமும் தேவைகள் தெரிவிக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
[பக்கம் 4-ன் பெட்டி]
ஒரு ராஜ்ய மன்றத்தை பெறுவதற்கான படிகள்:
(1) கட்டட திட்டத்திற்காகவும் சபை ட்ரஸ்ட் ஒன்றை அமைக்க ட்ரஸ்ட் உறுப்பினர்களை நியமிப்பதற்காகவும் சபையானது தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்
(2) குறிப்பாக, வியாபாரத்தில் அல்லது கட்டுமானத்தில் அனுபவமுள்ள, இரண்டு அல்லது மூன்று மூப்பர்களைக்கொண்ட உள்ளூர் கட்டடக் குழு ஒன்றை மூப்பர் குழு நியமிக்கும்
(3) ராஜ்ய மன்ற டிசைனை தெரிவுசெய்வதற்கு, மண்டல கட்டடக் குழுவுடன் அல்லது சங்கத்துடன், உள்ளூர் கட்டடக் குழு தொடர்புகொள்ளும்
(4) தெரிவுசெய்யப்பட்ட டிசைன் அங்கீகாரத்திற்காக சங்கத்திடம் அனுப்பப்பட்டு, பிறகு உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறுவதற்காக திருப்பி அனுப்பப்படும்
(5) கட்டடத் திட்டத்திற்காக கிடைக்கக்கூடிய நிதியை மூப்பர்கள் தீர்மானிப்பர். (உங்களுக்கு பொருளாதார உதவி தேவையென்றால், சங்கத்திற்கு எழுதுங்கள்)
N(6) அதிகமான பிரஸ்தாபிகளுக்கு வசதியாக இருக்கும் இடத்தில் நிலத்தை கண்டுபிடித்து, வாங்கி, அதை ட்ரஸ்டின் பெயரில் உள்ளூர் கட்டடக் குழு பதிவு செய்யும்
(7) ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்டத்தை முடிக்க, மண்டல கட்டடக் குழுவும் உள்ளூர் கட்டட குழுவும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்யும்
[பக்கம் 4-ன் பெட்டி]
இடத்தை மதிப்பிடுவதற்கான விளக்கப்பட்டியல்
நிலம்
அளவு (இப்போதைய தேவைக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் போதுமானதாக இருக்கிறதா?)
வடிவம் (முழு நிலப்பரப்பையும் உபயோகிப்பது கடினமாக இருக்கிறதா?)
மண் (அது உங்கள் கட்டடத்தை தாங்குமா?)
தண்ணீர் (வெள்ளம் வரும் ஆபத்து இருக்கிறதா? செப்டிக் டாங்க் வடியுமா?)
அக்கம்பக்கத்தார் (உங்கள் கட்டடம் அங்கிருப்பதை விரும்புவார்களா?)
பொதுநல வசதிகளும் சேவைகளும்
வசதிகள் (சாக்கடை, தண்ணீர், எரிவாயு, மின்சாரம், தொலைபேசி)
குப்பைகளை அகற்றுவது
போலீஸ் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு
ஒழுங்கான தபால் பட்டுவாடா
பள்ளிகள் பக்கத்தில் இருக்கின்றனவா? பேர்பெற்றவையா?
சுற்றுப்புறம்
வாழ்க்கை தரம் (முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா, நிலையாயிருக்கிறதா?)
சுற்றுச்சூழல் நிலைமைகள் (நெடுஞ்சாலைகள், தொழிற்சாலைகள்?)
இட அமைப்பு
பொது போக்குவரத்து வசதி இருக்கிறதா?
வரம்புகள்
அந்த நிலத்திற்கு தெளிவான பத்திரம் கிடைக்குமா? (ஒரு வக்கீலை பார்க்கவும்)
பத்திரத்தில் ஏதாவது வரம்புகள் இருக்கின்றனவா?
மண்டலங்களாக பிரிப்பதில் வரம்புகள் இருக்கின்றனவா? (ரோட்டிலிருந்து எவ்வளவு தூரம் விடவேண்டும், கட்டடத்தின் கன அளவு எவ்வளவு இருக்கவேண்டும்)
நீங்கள் பொது வழிகளுக்கும் நடைபாதைகளுக்கும் இடம்விட வேண்டுமா?
நிதியுதவி
இடத்தை உங்களால் வாங்க முடியுமா?
கடன் தேவைப்படுமா?
மறைவான செலவுகள் இருக்கின்றனவா?
(பிரத்தியேக மதிப்பீடுகள், கட்டப்படாத வரிகள்)
உங்கள் வரிகள் எப்படிப்பட்டதாயிருக்கும்?
கட்டுமான விதிகளுக்குள் வரும் பொதுவான பகுதிகள்
[பக்கம் 4-ன் குறிப்பு]
மண்டல விதிமுறைகள்
மண்டல மாவட்டங்களை தீர்மானித்தல்
கட்டடங்கள் எப்படி உபயோகிக்கப்படலாம்
ஒரு கட்டடத்திற்கு உபயோகப்படுத்தக்கூடிய நிலத்தின் சதவீதம் (density)
கட்டடத்தின் அதிகப்படியான கன அளவு
அதிகப்படியான உயரம்
ரோட்டிலிருந்தும் அக்கம்பக்கத்தாரிலிருந்தும் இருக்கவேண்டிய தூரம்
வாகனம் நிறுத்தும் விதிமுறைகள்
குறைந்தபட்ச நில-அளவு தேவைகள் “சுற்றுப்புற தன்மையை” தக்கவைக்க அல்லது மாற்ற உபயோகிக்கப்படலாம்
கட்டட விதிகள்
தீயணைப்பு பாதுகாப்பு
பாதுகாப்பான வெளியேறுதல் (வெளியேறும் வழிகள்)
ஆபத்தாக இருக்கக்கூடிய கட்டடத்தின் பயன்களை கையாளுதல்
பெருங்கூட்டத்தினருக்காக டிசைன் செய்தல் (பொது கட்டடங்கள்)
வடிவமைப்பு பாதுகாப்பு
போதுமான வெளிச்சமும் காற்றோட்டமும்
சுகாதார குழாய்வசதிகள்
தீயணைப்பு சாதனம்
கட்டும்போது பாதுகாப்பு கட்டடத்தில் வசிப்பவர்களின் உயிர் மற்றும் நலனை பாதுகாப்பதுதான் அடிப்படை நோக்கம்
[பக்கம் 4-ன் குறிப்பு]
மோசம்
[பக்கம் 4-ன் குறிப்பு]
நன்று
[பக்கம் 14-ன் குறிப்பு]
சுமார்