பள்ளிக்கூடத்திலிருந்து முழு நன்மையைப் பெறுங்கள்
1 வருடத்தின் இந்த காலப்பகுதியில்தான் அநேக இளைஞர்கள் பள்ளியில் ஒரு புதிய வகுப்புக்கு போகிறார்கள். பள்ளியின் புதிய ஆண்டு ஆரம்பிப்பதுடன் சம்பந்தப்பட்ட சில சவால்களும் கவலைகளும் இருந்தபோதிலும், தங்கள் கல்வியிலிருந்து மிகச்சிறந்ததை பெற முயற்சியெடுக்கும் இளைஞர்கள் பெறக்கூடிய நன்மைகளும் அநேகம் இருக்கின்றன.
2 ஒரு நல்ல அடிப்படை கல்வி ஒருவருடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு உதவக்கூடும். ஒருவர் தன்னுடைய வாலிபத்தில் என்ன செய்கிறாரோ அதன் பேரிலேயே அவர் வயதுவந்தவராக எதை சாதிப்பார் என்பதும் அதிகம் சார்ந்திருக்கிறது. பள்ளி சம்பந்தப்பட்ட விஷயத்திலும்கூட, “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலா. 6:7) தங்களுடைய பள்ளிப்பாடங்களை ஊக்கந்தளராமல் படிக்கும் இளைஞர்கள் யெகோவாவுக்கு தாங்கள் அதிக உபயோகமாக இருக்கும்வண்ணம் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும்.
3 ஒருவர் சரியான பள்ளிப்பாடத்திட்டத்தை தெரிவுசெய்ய வேண்டுமென்றால் கவனமான முன்யோசனை அவசியம். வாழ்க்கையில் ஆவிக்குரிய இலக்குகளை அடைவதற்கு அதிக நடைமுறையான பயிற்சியை அளிக்கிற பாடத்திட்டங்களை தெரிவுசெய்ய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்ய வேண்டும். தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம், பயனியர் சேவையில் தங்களையே ஆதரித்துக்கொள்ளக்கூடிய திறமையை இளைஞர்கள் கொண்டிருப்பர். அவர்களுடைய அடிப்படை கல்வியானது அவர்கள் எங்குச் சேவை செய்தாலும் யெகோவாவை துதிக்க அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்.
4 இளைஞரே, உங்களுடைய பள்ளிக்காலத்தை மிகவும் சிறந்த விதத்தில் பிரயோஜனப்படுத்திக்கொள்ள முயலுங்கள். அப்படிச் செய்கையில், உலகப்பிரகாரமான வாழ்க்கைப்போக்கை பின்பற்றுவதற்கு மாறாக, பரிசுத்த சேவையில் ஒரு முழுநிறைவான வாழ்க்கை வாழ்வதில் கவனத்தை ஊன்றவையுங்கள். யெகோவாவுடைய சித்தத்தை செய்வதற்கு உங்களுடைய வாழ்க்கையை உபயோகிக்க பிரயாசப்படுங்கள். இவ்வாறு, யெகோவாவுக்கு துதியுண்டாக உங்களுடைய வழியில் வெற்றியடைவீர்கள்.—சங். 1:3.