“எப்போதையும்விட அதிகமாக” கூட்டங்களுக்கு ஆஜராகுங்கள்
1 ஒன்றுகூடிவருவது யெகோவாவின் மக்களுக்கு எப்போதுமே அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இஸ்ரவேலர்களுக்கு ஆலயமும் ஜெப ஆலயங்களும் மெய் வணக்கத்திற்கும், தெய்வீக போதனைக்கும், மகிழ்ச்சியான கூட்டுறவுக்குமுரிய மைய இடங்களாக இருந்தன. இதைப் போலவே, ஆரம்பகால கிறிஸ்தவர்களும் ஒன்றுகூடி வருதலைப் புறக்கணிக்கவில்லை. அழுத்தங்களும் சோதனைகளும் அதிகரிக்கும் இந்த கொடிய கடைசி நாட்களில் நம்முடைய சபை கூட்டங்கள் அளிக்கும் ஆவிக்குரிய பலமூட்டுதல் நமக்கும்கூட தேவை; “எப்போதையும்விட அதிகமாக” அது நமக்கு தேவை. (எபி. 10:25, NW) கூட்டங்களுக்கு நாம் ஏன் ஆஜராக வேண்டும் என்பதற்கு மூன்று காரணங்களை கவனியுங்கள்.
2 கூட்டுறவுக்காக: “ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்” என்று வேதவசனங்கள் நமக்கு அறிவுரை கூறுகின்றன. (1 தெ. 5:11) தேவபக்திக்குரிய கூட்டுறவு நம் மனதை கட்டியெழுப்புகிற சிந்தனைகளால் நிரப்பி, நற்கிரியைகள் செய்ய தூண்டுகிறது. ஆனால் நாம் நம்மையே தனிமைப்படுத்திக் கொள்வோமென்றால், முட்டாள்தனமான, சுயநலமான அல்லது ஒழுக்கக்கேடான சிந்தனைகள்கூட நமக்குள் எளிதில் நுழைந்துவிட அனுமதிக்கிறோம்.—நீதி. 18:1.
3 போதனைக்காக: கடவுள்மீதான அன்பு நம் இருதயத்தில் உயிரோட்டமுள்ளதாக இருப்பதற்கு உதவிசெய்யும் விதத்தில் கிறிஸ்தவ கூட்டங்கள் பைபிள் போதனைகள் அடங்கிய தொடர் நிகழ்ச்சித் தொகுப்பை அளிக்கின்றன. ‘தேவனுடைய ஆலோசனைகள் . . . எல்லாவற்றையும்’ பொருத்துவதற்கு அவை நடைமுறையான வழிநடத்துதலை கொடுக்கின்றன. (அப். 20:26) நற்செய்தியை பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்குமான கலையில் கூட்டங்கள் நம்மை பயிற்றுவிக்கின்றன; இத்திறமைகள் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறவர்களை கண்டுபிடிப்பதிலும் அவர்களுக்கு உதவி செய்வதிலும் கிடைக்கும் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியை அனுபவிக்க எப்போதையும் விட இப்போது நமக்கு அதிகமாக தேவைப்படுகிறது.
4 பாதுகாப்பிற்காக: இந்த பொல்லாத உலகில், சபை மெய்யான ஆவிக்குரிய கோட்டையாக, அதாவது சமாதானத்திற்கும் அன்பிற்கும் புகலிடமாக இருக்கிறது. சபை கூட்டங்களில் நாம் ஆஜராகையில், கடவுளுடைய பரிசுத்த ஆவி நம்மீது பலமான செல்வாக்கு செலுத்துகிறது; “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய குணங்களை அது நம்மில் பிறப்பிக்கிறது. (கலா. 5:22, 23) கூட்டங்கள் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும் திடமாய் இருப்பதற்கும் நம்மை பலப்படுத்துகின்றன. வரவிருக்கும் சோதனைகளுக்கு ஆயத்தமாயிருப்பதற்கு அவை நம்மை பயிற்றுவிக்கின்றன.
5 தவறாமல் கூட்டங்களுக்கு ஆஜராவதன் மூலம், சங்கீதக்காரர் எதை விவரித்தாரோ அதை நாம் அனுபவிப்போம்; சங்கீதம் 133:1, 3-ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறபடி: “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” இன்று கடவுளுடைய மக்கள் எங்கெல்லாம் சேவிக்கவும் ஒன்றுகூடவும் செய்கிறார்களோ, “அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.”