மனதையும் இதயத்தையும் கவருவதற்கு சிற்றேடுகளைப் பயன்படுத்துங்கள்
1 மனதையும் இதயத்தையும் கவரும்படி பைபிள் சத்தியத்தை சொல்ல வேண்டும். இயேசு, தமக்கு செவிகொடுத்தவர்களிடம் சத்தியத்தை விளக்குகையில் அவர்களுக்கு அக்கறையூட்டுவதாகவும் தூண்டுதலளிப்பதாகவும் இருந்த விஷயங்களைத் தெரிந்தெடுத்து பேசினார். (லூக். 24:17, 27, 32, 45) நமக்கு செவிகொடுப்போரின் ஆவிக்குரிய தேவைகளை அறிவதற்கு நாம் எடுக்கும் முயற்சியிலேயே நம் ஊழியத்தின் வெற்றி பெருமளவு சார்ந்திருக்கிறது.
2 ஊழியத்தில் நாம் சந்திப்பவர்களின் மனதையும் இதயத்தையும் கவருவதற்கு சிற்றேடுகள் மிகச்சிறந்த கருவிகள். ஆகஸ்ட் மாதத்தில் நாம் அளிக்கும் ஒவ்வொரு சிற்றேட்டிலும் உள்ள செய்தி யாரைக் கவர்ந்திழுக்கும் என்பதைப் பற்றி முன்னதாகவே சிந்தியுங்கள்:
—கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? துன்பமில்லாத எதிர்காலத்தைப் பற்றிய ஆறுதலளிக்கும் இந்தச் செய்தி, பொருளாதார கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அல்லது பெருந்துன்பத்தை எதிர்ப்பட்டவர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கலாம்.
ல—வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? எதிர்காலத்தைப் பற்றி கருத்தாய் சிந்திக்கும் இளைஞர், இந்தச் சிற்றேட்டில் காணப்படும் பைபிள் அடிப்படையிலான பதில்களால் பயனடைவர்.
—பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! அதிலுள்ள அநேக படங்களும் மேற்கோள் காட்டப்பட்ட வசனங்களும், சிறுபிள்ளைகளும் அதிக படிப்பறிவு இல்லாதவர்களும்கூட கடவுளுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்ள உதவும்.
—பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். மனிதவர்க்கத்தின் சிக்கலான பிரச்சினைகளை கடவுளுடைய ராஜ்யம் எப்படி தீர்க்கும் என்பதைப் பற்றிய செய்தி, அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட எவருக்கும் அக்கறையூட்டுவதாக இருக்கலாம்.
—நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். இழப்பால் துயரப்படும் குடும்பத்தினருக்கு கொடுப்பதற்கென இந்தச் சிற்றேட்டின் பிரதிகளை வைத்திருக்க கல்லறை நிர்வாகிகள் அநேகர் விரும்புகின்றனர். கல்லறைகளில் சாட்சிகொடுக்கும் பிரஸ்தாபிகள், துயரப்படுபவர்களுக்கு ஆறுதலளிக்க இந்தச் சிற்றேட்டை உபயோகிக்கின்றனர். கல்லறையில் ஜெபம் செய்துகொண்டிருந்த ஏழு பேர் அடங்கிய ஒரு குடும்பத்தினரை இரண்டு சகோதரிகள் சந்தித்தனர். இந்தச் சிற்றேட்டின் ஆறுதலளிக்கும் செய்தியைப் பகிர்ந்துகொண்டதன் விளைவாக அடுத்த நாளே அந்தக் குடும்பத்தின் தாயோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது!
—நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? கிறிஸ்தவமண்டலத்தின் அடிப்படை கோட்பாடு தவறு என்பதை ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியிருக்கும் இந்தச் சிற்றேட்டிலுள்ள சத்தியம் ஆழ்ந்த மதப்பற்றுடைய ஒருவரின் இதயத்தைக் கவரலாம்.
3 ஒவ்வொரு சிற்றேட்டையும் நன்றாக அறிந்துகொள்ளுங்கள், உங்கள் பிராந்தியத்தில் அதை எவ்வாறு திறம்பட உபயோகிக்கலாம் என்பதைப் பற்றி முன்பே யோசியுங்கள். மாதிரிப் பிரசங்கங்களுக்கு ஜூலை 1998 நம் ராஜ்ய ஊழியத்தின் பின்பக்கத்தைப் பாருங்கள். மக்களின் மனதையும் இதயத்தையும் கவர நீங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பாராக.—மாற். 6:34.