நீங்கள் உதவிக்கரம் நீட்டுவீர்களா?
1 ஒருவருக்கொருவர் ‘கரிசனை காட்டும்படி’ சபை அங்கத்தினர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் நினைப்பூட்டினார். (1 கொ. 12.25, NW) ஆகவே, ஒருவருக்கொருவர் நாம் தனிப்பட்ட அக்கறை காண்பிக்க வேண்டும், தேவைப்படும் சமயத்தில் அன்போடு உதவ மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். உதாரணமாக, நம் மத்தியிலுள்ள ஆவிக்குரிய சகோதரிகளில் சிலர் சத்தியத்தில் தன்னந்தனியாக தங்கள் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய பயிற்சி அளிக்கும் மொத்த பொறுப்பையும் இந்தச் சகோதரிகள் சுமக்கிறார்கள். நிச்சயமாகவே, ‘அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப’ நம்முடைய கரிசனையான உற்சாகமூட்டுதலுக்கும் நடைமுறையான உதவிக்கும் அவர்கள் தகுதியானவர்களே. (ரோ. 12:13அ, NW) அவர்களுக்கு நீங்கள் உதவிக்கரம் நீட்டுவீர்களா?
2 உதவும் வழிகள்: சிலர் கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் செல்வதற்கு பொது போக்குவரத்தை நம்பியிருக்கிறார்கள். நம் வாகனங்களிலே அவர்களை கூட்டிச்செல்லும்போது அந்தக் குடும்பத்திற்கு ஓரளவு பணம் மிச்சமாகும். சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாயிற்கு கூட்டங்களில் நாம் உதவி செய்கையில், நிகழ்ச்சியிலிருந்து அவர்கள் இன்னும் முழுமையாக பலனடைய முடியும். அதேபோல வெளி ஊழியத்திலும் அவர்களுடைய குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் அவர்களுக்கு உதவலாம். அதனால் அவர்களின் பாரம் கொஞ்சம் குறையும். அந்தப் பிள்ளைகளிடம் மனதார கரிசனை காட்டி அவர்களுடன் நல்ல தோழமை கொள்ளலாம். இது நம் இளைஞர்கள்மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். எப்போதாவது ஒற்றை பெற்றோர் குடும்பத்தாரை நம்மோடு குடும்ப படிப்பில் கலந்துகொள்ள அழைப்பதன் மூலம் அவர்களுக்கு ஆவிக்குரிய புத்துணர்ச்சியூட்டலாம்.
3 விவேகத்தோடு செயல்படுங்கள்: உதவி தேவையில்லாதவர்களுக்கு உதவி செய்வதாக சொல்லி உபத்திரவப்படுத்தாதபடி கவனமாயிருக்க வேண்டும். தேவையிலிருப்பவர்களுக்கு உதவும்போதும் அவர்களுடைய சொந்த விஷயங்களில் அனாவசியமாக தலையிடக்கூடாது. தேவையிலிருக்கும் ஒரு சகோதரிக்கு, சகோதரிகளும் தம்பதியினருமே உதவி செய்யும் சிறந்த நிலையில் இருக்கின்றனர்.
4 ஒருவரையொருவர் ‘உபசரிக்கும்படி’ கிறிஸ்தவர்கள் அனைவரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். (ரோ. 12:13ஆ) நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு உதவியளிப்பது, நம் மத்தியில் காணப்படும் கிறிஸ்து காட்டியதைப் போன்ற அன்பை வெளிக்காட்டுவதற்கு நமக்கிருக்கும் அநேக வழிகளில் ஒன்றாகும்.—யோவா. 13:35.