உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/00 பக். 1
  • ‘விழிப்பாயிருங்கள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘விழிப்பாயிருங்கள்’
  • நம் ராஜ்ய ஊழியம்—2000
  • இதே தகவல்
  • “விழித்திருங்கள்”!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • “முடிவு காலத்தில்” விழித்திருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • விழித்துக்கொண்டிருப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2000
km 5/00 பக். 1

‘விழிப்பாயிருங்கள்’

1 இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களை அடையாளம் காட்டும் முக்கிய நிகழ்ச்சிகளை விவரித்த பிறகு, ‘விழிப்பாயிருங்கள்’ என இயேசு தம் சீஷர்களுக்கு வலியுறுத்தினார். (மாற். 13:33) கிறிஸ்தவர்களாகிய நாம் ஏன் விழிப்பாய் இருக்க வேண்டும்? ஏனெனில், மனித சரித்திரத்திலேயே மிக இக்கட்டான காலத்தில் வாழ்கிறோம். எனவே, ஆவிக்குரிய விதத்தில் மயக்க நிலையில் இருக்க இது காலமல்ல. அப்படி இருந்தால், இந்த முடிவு காலத்தில் செய்யும்படி யெகோவா கொடுத்திருக்கும் வேலையை நாம் மதிக்கவில்லை என்பதையே காட்டும். என்ன வேலை அது?

2 யெகோவா தம் மக்களைக் கொண்டு பூமி முழுவதிலும் ராஜ்ய செய்தியை அறிவிக்கிறார். இந்த ராஜ்யமே மனிதவர்க்கத்தின் ஒரே நம்பிக்கை. கடவுளுடைய அமைப்போடு சேர்ந்து நாமும் இந்த வேலையை செய்ய வேண்டும். அப்படி செய்தோமானால், இந்தக் காலத்தின் முக்கியத்தை உணர்ந்த உண்மை கிறிஸ்தவர்கள் நாமே. அதே சமயம், “நித்தியஜீவ வசனங்களை” மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறோம். (யோவா. 6:68) இந்த முக்கியமான வேலையில் முழுமூச்சாக ஈடுபட வேண்டும். ஆவிக்குரிய ரீதியில் நாம் விழிப்பாக இருப்பதற்கு இதுவே அடையாளம்.

3 பிரசங்கிக்க தூண்டுதல்: யெகோவாவின் சாட்சிகளாக நாம், ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலையுடன் ஈடுபட வேண்டும். கடவுள் மீதும் அயலான் மீதும் உள்ள அன்பு நம் ஒவ்வொருவரையுமே பிரசங்கிக்க தூண்டுகிறது. (1 கொ. 9:16, 17) அப்படி பிரசங்கித்தால், நம்மையும் நம் செய்தியைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வோம். (1 தீ. 4:16) மனிதவர்க்கம் இதுவரை கண்டிராத மிகச் சிறந்த அரசாங்கத்தை, அதாவது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தவறாமல் பிரசங்கிக்க வேண்டும்; அதை எவ்வளவு காலம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காலம் விடா முயற்சியோடு செய்ய வேண்டும்.

4 இந்த வேலையை செய்துகொண்டிருக்கும்போதே மிகுந்த உபத்திரவம் வரும் என்ற முக்கியமான உண்மை நம் ஊழியத்தின் அவசரத்தன்மையை உணர்த்துகிறது. அந்த நாளையும் அந்த நாழிகையையும் நாம் அறியோம். எனவே, ஜெப சிந்தையோடு யெகோவா மேல் சார்ந்திருந்து, எல்லா நேரத்திலும் தயாராகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். (எபே. 6:18) பிரசங்க வேலை தொடர்ந்து பெருகி வருகிறது. ஆனால் வெகு சீக்கிரத்தில், மனித சரித்திரத்திலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரசங்க வேலை, ஒருநாள் முடிவடையும்.

5 ‘விழிப்பாயிருங்கள்’ என்ற இயேசுவின் கட்டளையை உண்மையாய் பின்பற்றுங்கள். எப்போதையும்விட, இப்போது இதைப் பின்பற்றுவது மிக அவசியம். சாவகாசமாக இல்லாமல், அவசரத்தன்மையோடு இதைச் செய்வோமாக. ஆவிக்குரிய மயக்கத்தில் வீழ்ந்துவிடாமல், விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் யெகோவாவின் சேவையில் ஒவ்வொரு நாளும் ஈடுபடுவோமாக. ஆகவே, ‘விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருக்கக்கடவோம்.’—1 தெ. 5:6, பொது மொழிபெயர்ப்பு.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்