உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp20 எண் 1 பக். 14-15
  • எதிர்காலம்​—உண்மைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எதிர்காலம்​—உண்மைகள்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நல்லாட்சி
  • ஆரோக்கியம்
  • பூமியெங்கும் சமாதானம்
  • நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள்
  • பூமியே பூஞ்சோலையாக இருக்கும்
  • நம்பிக்கை
    விழித்தெழு!—2018
  • கடவுள் அனுமதித்திருக்கும் துன்பத்திற்கு முடிவு அருகில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • கடவுளுடைய அரசாங்கமே மேம்பட்டது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோமா?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
wp20 எண் 1 பக். 14-15
பூஞ்சோலை பூமியில் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்

எதிர்காலம்​—உண்மைகள்

எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சீக்கிரத்தில் நடக்கப்போகும் முக்கியமான சம்பவங்களை பைபிள் சொல்கிறது. பூமியிலுள்ள எல்லாரும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

“கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்பதை எதை வைத்துத் தெரிந்துகொள்ளலாம்? இயேசு அதற்குப் பதில் கொடுத்தார். (லூக்கா 21:31) கொடூரமான போர்கள், பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள் போன்ற பல சம்பவங்கள் நடக்கும் என்று அவர் முன்னறிவித்தார்; இவையெல்லாம் நடப்பதை இன்று நாம் கண்ணாரப் பார்க்கிறோம், இல்லையா?​—லூக்கா 21:10-17.

கடவுளுடைய அரசாங்கம் வருவதற்கு முன்பு, அதாவது மனிதர்களுடைய ஆட்சியின் “கடைசி நாட்களில்,” மக்கள் மோசமானவர்களாக இருப்பார்கள் என்றும்கூட பைபிள் சொல்கிறது. அவர்கள் எப்படியெல்லாம் நடந்துகொள்வார்கள் என்பதை 2 தீமோத்தேயு 3:1-5-ல் நீங்கள் பார்க்கலாம். இதுபோன்ற குணங்களை இன்று மக்கள் காட்டுவதைப் பார்க்கும்போது, இந்த பைபிள் தீர்க்கதரிசனம் எந்தளவு உண்மை என்பதை நீங்களே ஒத்துக்கொள்வீர்கள்.

இப்போது நாம் பார்த்த விஷயங்களிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியில் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்வதற்கான காலம் நெருங்கிவிட்டது. அந்த மாற்றங்கள் பூமியில் வாழும் எல்லா உயிர்களுக்கும் நன்மையளிக்கும். (லூக்கா 21:36) பூமிக்கும் அதில் வாழப்போகிற மக்களுக்கும் நிறைய நல்லது செய்யப்போவதாக பைபிளில் கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதோ அவற்றில் சில!

நல்லாட்சி

“எல்லா இனத்தினரும் தேசத்தினரும் மொழியினரும் [இயேசுவுக்கு] சேவை செய்வதற்காக, அரசாட்சியும் மேன்மையும் ராஜ்யமும் இவருக்கே கொடுக்கப்பட்டன. இவருடைய அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும், இவருடைய ராஜ்யம் அழிக்கப்படாது.”​—தானியேல் 7:14.

அப்படியென்றால்... கடவுள் எல்லாவற்றுக்கும் மேலான ஓர் உலகளாவிய அரசாங்கத்தை ஏற்படுத்தி தன் மகனை அதன் ராஜாவாக நியமித்திருக்கிறார்; அப்படிப்பட்ட அரசாங்கத்தில் நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள்.

ஆரோக்கியம்

வீல் சேரில் இருக்கும் ஒரு சிறுமி எழுந்து நடக்கிறாள்

“‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”​—ஏசாயா 33:24.

அப்படியென்றால்... உங்களுக்கு வியாதி வரவே வராது, உங்களுக்கு எந்த உடல் குறைபாடும் இருக்காது; சாவே இல்லாமல் என்றென்றும் வாழ்வீர்கள்.

பூமியெங்கும் சமாதானம்

துண்டு துண்டாக உடைக்கப்பட்ட துப்பாக்கி

“அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.”​—சங்கீதம் 46:9.

அப்படியென்றால்... போரும் சரி, அதனால் ஏற்படும் வேதனைகளும் சரி, இருக்கவே இருக்காது.

நல்லவர்கள் மட்டுமே இருப்பார்கள்

“பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். . . . தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.”​—சங்கீதம் 37:10, 11.

அப்படியென்றால்... தேடினாலும் கெட்டவர்களைப் பார்க்க முடியாது, கடவுளுக்குக் கீழ்ப்படிய ஆசைப்படும் மக்கள் மட்டுமே இருப்பார்கள்.

பூமியே பூஞ்சோலையாக இருக்கும்

“ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.”​—ஏசாயா 65:21, 22.

அப்படியென்றால்... முழு பூமியுமே ரம்மியமான இடமாக மாறும். கடவுளுடைய விருப்பம் ‘பூமியில்’ நிறைவேற வேண்டுமென்று நாம் செய்யும் ஜெபங்களுக்குக் கடவுள் பதிலளிப்பார்.​—மத்தேயு 6:10.

பூஞ்சோலை பூமியில் மக்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்