உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/01 பக். 5-6
  • டெலிபோன் ஊழியத்தில் வெற்றி காண

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டெலிபோன் ஊழியத்தில் வெற்றி காண
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
  • இதே தகவல்
  • தொலைபேசியில் சாட்சிகொடுப்பது பயனளிக்கிறது
    நம் ராஜ்ய ஊழியம்—2009
  • நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—தொலைபேசி மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • வீட்டு வாசலிலும் தொலைபேசியிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • “நாடோறும்” யெகோவாவை ஸ்தோத்திரியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 2/01 பக். 5-6

டெலிபோன் ஊழியத்தில் வெற்றி காண

1 யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய குறிக்கோள் வெறுமனே ஊழியத்தில் ஈடுபடுவது மட்டுமே அல்ல; ஆனால் ராஜ்ய நற்செய்தியை முடிந்தவரைக்கும் எல்லாருக்கும் அறிவிப்பதும் ஆகும். (அப். 10:42; 20:24) ஜனங்களுக்குப் பிரசங்கிக்க வீட்டுக்கு வீடு ஊழியம் முக்கியமான வழியாக தொடர்ந்து இருந்து வருகிறது. எனினும், ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஊழியத்திலும் எல்லாரையும் சந்திக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். எனவே, ‘ஊழியத்தை முழுவதும் நிறைவேற்றுவதற்கு,’ அதாவது செம்மறியாடு போன்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கு, நாம் டெலிபோன் மூலம் சாட்சிகொடுப்பது போன்ற மற்ற முறைகளையும் பயன்படுத்துகிறோம்.​—⁠2 தீ. 4:5, தி.மொ.

2 பெரும்பாலும், பலத்த பாதுகாப்புமிக்க அடுக்குமாடி கட்டடங்களில், காம்ப்ளக்ஸுகளில், அல்லது குடியிருப்பு வளாகங்களில் ஜனங்கள் வசிக்கின்றனர். நாம் பொதுவாக செய்யும் வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது இப்பகுதிகளில் வசிப்பவர்களை அணுகுவது முடியாத காரியம். மற்ற இடங்களிலும்கூட பெரும்பாலானோர் வீடுகளில் இருப்பதில்லை. எனினும், இப்படிப்பட்டவர்களை டெலிபோனில் ‘சந்தித்து’ அநேக பிரஸ்தாபிகள் வெற்றி கண்டிருக்கின்றனர். காலை நேரத்தில் ஒரு தம்பதியினர் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது ஒன்பது வீடுகள் பூட்டிக்கிடந்தன. ராஜ்ய மன்றத்திற்கு வந்த பின்பு, அந்தந்த விலாசத்திற்குரிய டெலிபோன் நம்பர்களை டைரக்டரியிலிருந்து பெற்றனர். அந்த நம்பர்களுக்குப் போன் செய்ததில் எட்டு வீடுகளில் உள்ளவர்களை ‘சந்திக்க’ முடிந்தது!

3 டெலிபோன் ஊழியத்தில் பங்குகொள்ள தயங்குகிறீர்களா? “எதையாவது விற்பதற்காக யாராவது என் வீட்டிற்குப் போன் செய்தால் எனக்கு சுத்தமா பிடிக்காது. அதனாலதான் டெலிபோன் ஊழியத்தை ட்ரை செய்து பார்க்கக்கூட எனக்கு இஷ்டமே இருந்ததில்ல” என ஒப்புக்கொள்கிறார் ஒரு சகோதரர். எனினும், இரண்டு முறை டெலிபோன் மூலம் சாட்சி கொடுத்த பின்னர் அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? “இப்போ எனக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு! இப்படி செய்வேன் என நினைக்கவே இல்லை, ஆனால் இப்போ ரொம்ப பிடிச்சுப்போச்சு! போனில் பேசும்போது ஆட்கள் சாவகாசமாக பேசுகின்றனர், நமக்குத் தேவையான அனைத்தும் ‘டக்’கென புரட்ட கைவசம் உள்ளன. இதனால் கைமேல் பலன் கிடைக்கிறது!” இப்படித்தான் ஒரு சகோதரியும் சொன்னார்கள்: “எனக்கு டெலிபோன் ஊழியத்தில் துளியும் ஆர்வம் இருந்ததில்லை. உண்மையைச் சொன்னா, அதை செய்யவே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஒருமுறை முயற்சி செய்து பார்த்தேன், அதிக பலனளித்தது. இப்போது டெலிபோன் ஊழியத்தில் எனக்கு 37 மறுசந்திப்புகள் கிடைத்துள்ளன; எக்கச்சக்கமான பைபிள் படிப்புகள் வேறு, எனக்கு நடத்துவதற்கு நேரமே இல்லை!” டெலிபோன் ஊழியத்தை முயன்று பார்த்தீர்களென்றால் நீங்களும் வெற்றி காண்பீர்கள்.

4 டெலிபோன் ஊழியத்தை ஒழுங்கமைத்தல்: சபையில் ஊழியம் சம்பந்தப்பட்ட காரியங்களை ஊழியக் கண்காணி மேற்பார்வையிடுகிறார். தேவைப்பட்டால், டெலிபோன் ஊழியத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய அவருக்கு உதவியளிக்க வேறொரு மூப்பரையோ தகுதியான உதவி ஊழியரையோ மூப்பர் குழு தேர்ந்தெடுக்கும். பிராந்தியங்களைக் கவனித்துக்கொள்ள நியமிக்கப்பட்ட சகோதரரின் உதவியும் தேவைப்படும். அவரே பிராந்தியங்களை நியமித்து சரிவர பதிவுகளை வைத்துக்கொள்வார். அவ்வாறே, இந்த ஊழியம் எந்தளவுக்கு பயனளிக்கிறது என்பதில் வட்டாரக் கண்காணியும் ஆர்வம் காட்டுவார்.

5 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியாத பகுதிகள் உங்கள் பிராந்தியத்தில் இருந்தால் டெலிபோன் ஊழியத்திற்கான பிராந்தியத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். நியமிக்கப்பட்ட சகோதரர் அப்படிப்பட்ட விலாசங்களை வைத்து கவனமாக ஒரு லிஸ்டை தயாரிப்பார்; பின்னர் அவை டெலிபோன் ஊழியத்திற்கான பிராந்தியங்களாக ஒதுக்கப்படும். இந்தப் பிராந்தியம் சிறியதாக இருக்க வேண்டும். தவறாமல் ஊழியம் செய்வதற்கு இது வசதியாக இருக்கும். அனைத்து பிராந்திய வரைபடங்களிலும், டெலிபோன் ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதிகள் எவையெவை என குறித்துக் காட்டப்பட்டிருக்க வேண்டும்.

6 டெலிபோன் நம்பர்களை நீங்கள் எப்படி பெறலாம்? டெலிபோன் பூத்துகளிலுள்ள டைரக்டரியிலிருந்து பெறலாம். இதில் அகரவரிசையில் பெயர்களும் போன் நம்பர்களும் சுருக்கமான விலாசமும் இருக்கும். பலத்த பாதுகாப்புமிக்க அடுக்குமாடி கட்டடத்திலேயே அங்கு குடியிருப்பவர்களின் போன் லிஸ்ட் இருந்தால் அங்கு அதை நீங்கள் கேட்டுப் பெறலாம். அப்படி இல்லாவிட்டால், அக்கட்டடத்தில் வசிப்பவர்களின் பெயர் பட்டியல் அதன் நுழைவாயிலில் காணப்படும். அதைப் பார்த்து பெயர்களை எழுதி வரலாம். பின்னர் டெலிபோன் டைரக்டரியில் அவர்களுடைய டெலிபோன் நம்பர்களை கண்டுபிடிக்கலாம்.

7 டெலிபோன் ஊழியத்தில் அதிக அனுபவமுள்ளவர்கள் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்வதன் மூலம் மூப்பர்கள் இந்த ஊழியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். பயனியர்கள் மற்றவர்களுக்கு உதவும் திட்டத்தை இதற்காக அவர்கள் பயன்படுத்தலாம். அவ்வப்போது, ஊழியக்கூட்டத்தில் வரும் சபை தேவைகள் பகுதியில் இவ்வகை ஊழியத்தில் இன்னும் வெற்றி காண என்ன செய்யலாம் என்பதை ஆலோசிக்கலாம்.

8 நடமாட முடியாத நிலையில் இருப்பவர்களை அல்லது உடல்நிலை மோசமாக உள்ளவர்களை மூப்பர்கள் மேய்ப்பு சந்திப்பு செய்கையில் டெலிபோன் ஊழியத்தில் பங்குகொள்ள நினைப்பூட்டி உற்சாகப்படுத்தலாம். ஒருவேளை, எவ்வாறு டெலிபோன் மூலம் சாட்சி கொடுப்பது என்பதை மூப்பர் ஓரிரு முறை செய்துகாட்டலாம், அதன்பின் கவனித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரஸ்தாபியையே முயன்று பார்க்கச் சொல்லி உதவலாம். இவ்வாறு டெலிபோன் ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்த அநேகர் இதற்காக தினமும் சில நிமிடத்தை செலவழிக்கின்றனர், சந்தோஷத்தையும் காண்கின்றனர்.

9 வெற்றிக்கு வழிகள்: பிரசங்கிப்பதற்கு இயேசு தம்முடைய சீஷர்களை “இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” (லூக். 10:1) ஏன்? சேர்ந்து ஊழியம் செய்யும்போது ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளலாம், ஒருவருக்கொருவர் உற்சாகம் அளிக்கலாம் என்பதை அவர் அறிந்திருந்தார். டெலிபோன் ஊழியத்தைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. இரண்டு பேராக சேர்ந்து ஈடுபடுகையில், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளலாம், வீட்டுக்காரரின் பிரதிபலிப்பை கலந்தாலோசிக்கலாம், அடுத்த நபரிடம் பேசுகையில் என்ன சொல்லலாம் என்பதற்கு ஆலோசனைகளை பரிமாறிக்கொள்ளலாம். மேலும், ஒருவர் பேசுகையில் மற்றவர் பொறுத்தமான தகவல்களைத் தேடித் தருவதன் மூலம் உதவலாம்.

10 நன்கு யோசித்துப் பேசவும் கவனம் சிதறாமல் இருக்கவும் வசதியான இடத்தில் அமருங்கள். பைபிள், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், தேவைப்படுத்துகிறார் சிற்றேடு, பத்திரிகைகள் போன்றவை அனைத்தையும் உங்கள் முன் வைப்பதற்கு வசதியான இடத்தை தேர்ந்தெடுங்கள். சில பிரசங்கங்களை எழுதி, பார்வையில் படும்படி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் எப்போது அழைப்பது என்பதை அறிந்துகொள்வதற்கு தேதி, நேரம் உட்பட அனைத்து தகவல்களையும் திருத்தமாக, முழுமையாக எழுதிக்கொள்ள தயாராக இருங்கள்.

11 டெலிபோனில் முன்பின் பழக்கமில்லாத குரலைக் கேட்கையில் ஜனங்கள் பெரும்பாலும் எச்சரிக்கையாய் இருக்கின்றனர். எனவே, கனிவுடனும், சிநேகப்பான்மையுடனும், சாதுரியத்துடனும் பேசுங்கள். உங்களைப் பற்றியும் உங்களுக்கிருக்கும் அக்கறையை பற்றியும் வீட்டுக்காரர் உங்கள் குரலை வைத்துத்தான் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே பதற்றமில்லாமல், இதயத்திலிருந்து பேசுங்கள். மெதுவாகவும், தெளிவாகவும், போதுமான சத்தத்துடனும் பேசுங்கள். மறுமுனையில் இருப்பவர் பேசுவதற்கும் வாய்ப்பு கொடுங்கள். உங்கள் முழுப் பெயரையும் நீங்கள் வசிக்கும் ஏரியாவையும் சொல்லுங்கள். டெலிபோன் மூலம் வியாபாரம் செய்பவர்கள் என ஜனங்கள் நம்மை தவறாக எடைபோடுவதற்கு இடம் கொடுக்கக்கூடாது. ஒரு குறிப்பிட்ட கட்டடத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் டெலிபோன் செய்வதாக சொல்லாமல், அவரிடம் பேச விரும்பி போனில் அழைத்ததாக சொல்லுங்கள்.

12 டெலிபோன் பிரசங்கங்கள்: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 9-15-லுள்ள அறிமுகங்களில் பலவற்றை டெலிபோன் ஊழியத்திற்கு வசதியாக மாற்றிக்கொள்ளலாம். “உங்களை நேரில் வந்து சந்திக்க முடியாததால் டெலிபோனில் பேசுகிறேன். ஒரு முக்கியமான கேள்விக்கு உங்கள் பதிலைத் தெரிந்துகொள்வதற்காகவே டெலிபோன் செய்தேன்.” பின்னர் கேள்வியைச் சொல்லுங்கள்.

13 “குற்றச்செயல்களும்/பாதுகாப்பும்” என்ற தலைப்பின் கீழுள்ள முதல் அளிப்பை இவ்வாறு பயன்படுத்தலாம்: “வணக்கம். என் பெயர் _____. நான் _____-⁠ல் குடியிருக்கிறேன். எதையோ விற்பதற்காகவோ சர்வே எடுப்பதற்காகவோ நான் போன் செய்ததாக நினைத்துக்கொள்ளாதீர்கள். தனிப்பட்ட பாதுகாப்பைப் பற்றி பேச உங்களுக்குப் போன் செய்தேன். எங்கே பார்த்தாலும் குற்றச்செயல்கள் எக்கச்சக்கமாக நடந்துகொண்டிருக்கின்றன, இவை நம்முடைய வாழ்க்கையைப் பாதிக்கின்றன. நாம் எல்லாருமே இரவில் பாதுகாப்பு உணர்ச்சியுடன் தெருவில் நடக்கக்கூடிய ஒரு காலம் வருமென்று நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] கடவுள் என்ன செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார் என்பதை வாசித்துக் காட்டுகிறேன்.”

14 டெலிபோனில் பேசும்போது பைபிள் படிப்புக்கு விருப்பமிருக்கிறதா என நேரடியாக கேட்பது நல்ல பலன்களைத் தந்திருக்கிறது. எப்படி படிப்பு நடத்தப்படுகிறது என்பதை ஒருசில நிமிடம் நடத்திக் காட்டலாம். படிப்பைத் தொடர அவரை வீட்டில் வந்து சந்திப்பதாக சொல்லுங்கள், அல்லது அவர் தயங்குகிறார் என்றால் இன்னொரு நாள் டெலிபோனில் படிப்பை தொடரலாம் என சொல்லுங்கள்.

15 உரையாடலை முடிக்கையில், அந்த நபரை நேரில் சென்று சந்திக்க அல்லது ஏதேனும் பிரசுரத்தை அனுப்பி வைக்க வழிசெய்யும் குறிப்பை சொல்ல மறக்காதீர்கள். அவர் தன் விலாசத்தை சொல்ல தயங்குகையில் மீண்டும் போன் செய்வதாக சொல்லுங்கள். தயக்கம் மாறி உங்களை வீட்டிற்கு வரும்படி அழைப்பதற்கு முன்பு அநேக முறை நீங்கள் டெலிபோனில் தொடர்புகொள்ள வேண்டியிருக்கலாம்.

16 முன்முயற்சி எடுத்தல்: 15 வயது சகோதரி ஒருநாள் காலை டெலிபோன் ஊழியம் செய்தாள். அவளிடம் பேசிய பெண் அறிவு புத்தகத்தை பெற ஒப்புக்கொண்டாள். புத்தகத்தைக் கொடுக்க அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது டைரக்டரியில் இல்லாத தன்னுடைய போன் நம்பர் எப்படி கிடைத்தது என்பதை இளம் சகோதரியிடம் கேட்டாள். அந்த சகோதரி தவறுதலாக அந்த நம்பருக்கு டயல் செய்திருந்தாள்! அந்தப் பெண்ணும் பைபிள் படிப்புக்கு சம்மதித்தாள், இப்போது அவள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி.

17 டெலிபோன் ஊழியத்திற்கான பிராந்தியத்தை ஒரு சகோதரி பெற்றுக்கொண்டார். பயத்தின் காரணமாக மூன்று வாரங்களுக்கு போன் செய்யாதிருந்தார். ஊழியத்தைத் துவங்க எது அவருக்குத் தைரியத்தைக் கொடுத்தது? 1997, ஜனவரி 22, விழித்தெழு! பத்திரிகையில், “நான் பலவீனமாய் இருக்கும்போதே பலமுள்ளவளாய் இருக்கிறேன்” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை அவர் நினைவுக்கு வந்தது. உடல்நலக்குறைவின் மத்தியிலும் டெலிபோன் மூலம் பிரசங்கிக்கும் ஒரு சகோதரியின் அனுபவம் அது. “பலத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபித்தேன். சரியான வார்த்தைகளை சொல்வதற்கு உதவும்படி அவரிடம் கேட்டேன்” என அந்த சகோதரி சொன்னார். அவருடைய முதல் நாள் அனுபவம் என்ன? “யெகோவா என் ஜெபத்திற்கு பதிலளித்தார். ஜனங்கள் நான் பேசியதை காதுகொடுத்துக் கேட்டனர், ஒரு மறுசந்திப்பும்கூட கிடைத்தது” என சொல்கிறார். பின்னர் அவருடைய டெலிபோன் ஊழியம் பைபிள் படிப்புக்கு வழிசெய்தது. “என்னையே சார்ந்திருக்காமல் யெகோவாவை சார்ந்திருக்க மீண்டும் அவர் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்” என முடிவாக சொல்கிறார்.​—⁠நீதி. 3:5.

18 டெலிபோன் மூலம் சத்தியத்தைத் தெரிவிப்பது நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் வெற்றிகரமான முறையாக ஆகியிருக்கிறது. நன்கு தயாரியுங்கள், மனப்பூர்வமாக பங்குகொள்ளுங்கள். ஒருசில தடவை டெலிபோனில் சாட்சிகொடுத்தும் காதுகொடுத்துக் கேட்போரை கண்டுபிடிக்கவில்லை என்றால் சோர்ந்து போய்விடாதீர்கள். யெகோவாவின் வழிநடத்துதலுக்காக ஜெபியுங்கள். இந்த ஊழியத்தில் ஆர்வமாக ஈடுபடும் மற்றவர்களிடம் பேசிப் பாருங்கள். நம் பிராந்தியத்திலுள்ள ஒருவரையும் தவறவிட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தால், அவசர உணர்வோடு நம்முடைய ஊழியத்தை முழுமையாய் செய்து முடிப்போமாக.​—⁠ரோ. 10:13, 14.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்