பைபிள்—மனிதகுலத்தின் மிகப் பழமையான நவீனகால புத்தகம் வீடியோவிற்கு போற்றுதலை அதிகரித்தல்
இந்த வீடியோவில் நீங்கள் பார்த்த முக்கிய விஷயங்களை பின்வரும் கேள்விகள் சிறப்பித்துக் காட்டுகின்றன: (1 ) பைபிளை நிகரற்றதாக விளங்கச் செய்யும் அம்சங்கள் யாவை? (2 ) பைபிள் பழமையானதாக இருந்தாலும், நவீன விஞ்ஞானத்தோடு ஒத்திருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள். (3 ) இன்றுள்ள பைபிள், ஆரம்பத்தில் எழுதப்பட்டபடியே எந்த மாற்றமுமில்லாமல் இருக்கிறது என எப்படி நிச்சயமாக சொல்லலாம்? (4 ) பைபிளின் பூர்வ கையெழுத்துப் பிரதிகளுடைய எழுத்துமுறையின் ஒரு சிறப்பம்சம் என்ன, இது உங்களுக்கு என்ன நம்பிக்கையை அளிக்கிறது? (5 ) ஜான் வைக்ளிஃப், யோஹானஸ் கூட்டன்பர்க், வில்லியம் டின்டேல், மேரி ஜோன்ஸ், சார்ல்ஸ் டேஸ் ரஸல் ஆகியோர், உலகெங்கும் கடவுளுடைய வார்த்தையை பரப்புவதில் என்ன பங்காற்றினர்? (6 ) சர்ச் எவ்வாறு பைபிளை கடுமையாக எதிர்த்தது, ஆனால் நம் நாள்வரை அது பாதுகாக்கப்பட்டிருப்பதன் இரகசியம் என்ன? (7 ) யெகோவாவின் அமைப்பு எந்தளவுக்கு பைபிளை மொழிபெயர்த்து அச்சிட்டிருக்கிறது? (8 ) சூதாட்டத்திற்கு அடிமையாதல் (1 தீ. 6:9, 10), மணவாழ்வில் பிரிவு அல்லது நம்பிக்கைத் துரோகம் (1 கொ. 13:4, 5; எபே. 5:28-33), மனதை ஆக்கிரமிக்கும் பொருளாசை (மத். 16:26) ஆகிய பிரச்சினைகளை சமாளிக்க பைபிளின் நடைமுறை ஆலோசனைகள் எவ்வாறு உதவியிருக்கின்றன? (9 ) பைபிள் நியமங்களைப் பொருத்துவதால் உலகிலுள்ள தேச, குல, இன பகைமையை மேற்கொள்ளலாம் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (10 ) பைபிளிலுள்ள விஷயங்களை கற்றுக்கொண்டது என்ன விதங்களில் உங்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தந்திருக்கிறது? (11 ) இந்த வீடியோவினால் யார் நன்மையடைவார்கள் என நினைக்கிறீர்கள், அவர்களுக்கு எவ்வாறு இதை அளிப்பீர்கள்?