உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/01 பக். 8
  • யெகோவா பலம் தருகிறார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா பலம் தருகிறார்
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
  • இதே தகவல்
  • சோர்ந்துபோகிறவனை யெகோவா பலப்படுத்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • “யெகோவாவையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • யெகோவா உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • பெலத்தை மீண்டும் பெறுதல், சோர்ந்து போகாதிருத்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 2/01 பக். 8

யெகோவா பலம் தருகிறார்

 1 அப்போஸ்தலனாகிய பவுலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அப்போஸ்தலர் புத்தகத்தை நாம் வாசிக்கும்போது, அவர் யெகோவாவின் சேவையில் எந்தளவு கடுமையாக உழைத்தார் என்பதை நன்கு புரிந்துகொள்கிறோம். பவுலால் எப்படி அதிகத்தை சாதிக்க முடிந்தது? “என்னைப் பலப்படுத்துகிறவருக்குள் எல்லாவற்றையுஞ்செய்ய எனக்கு வல்லமையுண்டு” என்று அவரே சொன்னார். (பிலி. 4:13, தி.மொ.) யெகோவா தரும் பலத்தினால் நாமும் நன்மையடையலாம். எப்படி? நமக்கு புத்துணர்ச்சியும் தெம்பும் தருவதற்காக அவர் செய்திருக்கும் ஆறு ஏற்பாடுகளை அனுகூலப்படுத்திக் கொள்வதன் மூலமாகும்.

 2 கடவுளுடைய வார்த்தை: தெம்போடு உயிர் வாழ்வதற்கு உணவு உண்பது எவ்வாறு அவசியமோ, அதேபோல் ஆன்மீக ரீதியில் தெம்போடு வாழ்வதற்கு கடவுளுடைய வார்த்தையென்ற சத்துள்ள உணவு உண்பதும் அவசியம். (மத். 4:4) நமக்குத் தேவையான பலத்தை பைபிள் தருகிறது. சத்தியத்திற்கான நம் வைராக்கியமும் ஆர்வமும் தணியாதிருக்க, முடிந்தால் தினந்தோறும் பைபிளை அர்த்தத்தோடு படித்து தியானிக்க வேண்டும்.​—⁠சங். 1:2, 3.

 3 ஜெபம்: யெகோவாவிடம் நெருங்கிச் செல்வது அவசியம், அதுவும் உதவி கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில். பலத்தைக் கேட்டு ஜெபிப்பவர்களுக்கு அவர் தமது ஆவியின் மூலம் தெம்பளிக்கிறார். (லூக். 11:13; எபே. 3:16) ‘ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருக்கும்படி’ வேதவாக்கியங்கள் உற்சாகப்படுத்துகின்றன. (ரோ. 12:12) நீங்கள் அதைச் செய்கிறீர்களா?

 4 சபை: சபைக் கூட்டங்களிலிருந்தும் சகோதர சகோதரிகளின் அன்பான கூட்டுறவிலிருந்தும்கூட நாம் பலத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறோம். (எபி. 10:24, 25) நாம் பிரச்சினைகளால் தளர்ந்து போகும் சமயத்தில் அவர்கள் பாசத்தோடு உதவிக்கு வந்து நம்மை தாங்குகிறார்கள்.​—⁠நீதி. 17:17; பிர. 4:⁠10.

 5 வெளி ஊழியம்: ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது, ராஜ்யத்திலும் அதன் ஆசீர்வாதங்களிலும் மனதை ஒருமுகப்படுத்த உதவும். யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்போது நம் சொந்த மனம் புத்துணர்வு பெறுகிறது. (அப். 20:35) தேவை அதிகமிருக்கும் இடத்திற்கு செல்லவோ முழுநேர ஊழியத்தில் ஈடுபடவோ நம் அனைவராலும் முடியாது என்றாலும், மற்ற விதங்களில் ஊழியத்தில் ஒரு குறிக்கோளோடு பங்குகொள்ளலாம்.​—⁠எபி. 6:10-12.

 6 சபை கண்காணிகள்: மூப்பர்கள் தரும் உற்சாகத்தாலும் உதவியாலும் நாம் நன்மையடைகிறோம். யெகோவா தமது மந்தையை மேய்க்கும் பொறுப்பை அவர்களிடம் அளித்திருக்கிறார். (1 பே. 5:2) அன்று பவுல் செய்ததுபோலவே இன்றும் பயணக் கண்காணிகள் சபைகளை சந்தித்து அவற்றைக் கட்டியெழுப்புகின்றனர்.​—⁠ரோ. 1:11, 12.

 7 உத்தமர்களின் உதாரணம்: அன்றும் சரி இன்றும் சரி உத்தமத்தோடு ஊழியம் செய்தோ(வோ)ரின் நல்ல உதாரணங்களை சிந்திப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. (எபி. 12:1) புத்துணர்வு தேவைப்படும் சமயத்தில், நம் பத்திரிகைகளில் வரும் வாழ்க்கை சரிதைகளில் ஒன்றை ஏன் எடுத்து வாசிக்கக்கூடாது? அல்லது வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) உள்ள உற்சாகமளிக்கும் அறிக்கையை வாசிக்கலாம், அல்லது அறிவிப்பாளர்கள் (ஆங்கிலம்) புத்தகத்தில் யெகோவாவின் சாட்சிகளது நவீனகால சரித்திரத்தைப் பற்றிய சுவாரஸ்யமான விவரப்பதிவுகளை வாசிக்கலாம்.

 8 கிட்டத்தட்ட 95 வயதாகும் ஒரு சகோதரர், இளமையில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். இளைஞனாய் இருந்த போதே அவரது விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. முதலாவதாக, சபையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்த சிலர் யெகோவாவின் அமைப்பை விட்டு விலகினர். அதோடு, வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது இவருக்கு கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இவர் எப்போதும் யெகோவாவை சார்ந்திருந்தார். கொஞ்ச காலத்திற்குள், ஊழியத்தில் சந்தோஷத்தைக் காண துவங்கினார். இப்போது? சுகவீனத்தின் மத்தியிலும், புரூக்ளின் பெத்தேல் குடும்பத்தின் அங்கத்தினராக, ஆளும் குழு உறுப்பினராக செயலாற்றி வருகிறார். யெகோவாவின் அமைப்பை விட்டு விலகாததற்கு அவர் ஒருபோதும் வருந்துவதில்லை.

 9 பிரிட்டன் பெத்தேலில் பணியாற்றும் ஒரு சகோதரி 13 வயதில் முழுக்காட்டப்பட்டார். அதற்கடுத்த வருடம் தன் அண்ணனோடு பயனியர் ஊழியம் செய்ய துவங்கினார். அடுத்த வருடம், இரண்டாம் உலகப் போரின்போது நடுநிலைமை காத்துக் கொண்டதால் அவரது அப்பா சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தும், அந்தச் சகோதரி பலத்திற்காக யெகோவாவையே சார்ந்திருந்து தொடர்ந்து உண்மைக் கடவுளை சேவித்து வந்தார். காலப்போக்கில், உத்தமமுள்ள ஒரு கிறிஸ்தவரை மணந்தார். இருவருமாக சேர்ந்து யெகோவாவின் சித்தத்தை தொடர்ந்து செய்துவந்தனர். திருமணமாகி 35 வருடங்களுக்குப் பிறகு அவரது கணவர் திடீரென இறந்துவிட்டார். மீண்டும் யெகோவாவிடமிருந்து பலத்தைப் பெற்று, இந்நாள் வரை தொடர்ந்து அவரை சேவித்து வந்திருக்கிறார். யெகோவாவின் பூமிக்குரிய குடும்பத்தின் பாகமாக என்றென்றும் அவரை சேவிக்கும் வாய்ப்பையும் எதிர்பார்த்திருக்கிறார்.

 10 யெகோவா, உண்மையுள்ள தமது ஊழியர்களுக்கு உதவியும் உற்சாகமும் தருகிறார். “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.” வற்றாத இந்த ஊற்றுமூலத்திலிருந்து நாம் பலத்தை மொண்டெடுக்கலாம், மேற்கண்ட ஆறு ஏற்பாடுகளையும் அனுகூலப்படுத்திக்கொள்ளும் பட்சத்தில். ‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைவார்கள். . . . அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்’ என்பதை ஞாபகம் வையுங்கள். (ஏசா. 40:29-31) பவுல் பலத்திற்காக யெகோவாவை பெருமளவில் சார்ந்திருந்தார், நாமும் அவ்வாறே செய்வோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்