உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/01 பக். 1
  • பிரசங்கிக்க தயங்காதீர்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிரசங்கிக்க தயங்காதீர்!
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
  • இதே தகவல்
  • ‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சவால்களைச் சமாளித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
  • யெகோவாவுக்கு உங்கள்மீது நிஜமாகவே அக்கறை இருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2013
  • “வீடு வீடாக”
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 7/01 பக். 1

பிரசங்கிக்க தயங்காதீர்!

1 வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்க தயாராகையில், நாம் எதிர்ப்படும் மிகப் பெரிய சவால் நம் வீட்டைவிட்டு வெளியே செல்வதாகவே இருக்கக்கூடும். ‘எல்லாவகை மனிதரிடமும்’ போய் சத்தியத்தை பேசுவதிலிருந்து தகுதியில்லை என்ற உணர்வு நம்மை தயங்க வைக்கலாம். (1 தீ. 2:4) ஆனால் நற்செய்தியை பிரசங்கிப்பதற்கு நாம் தயங்கக் கூடாது. ஏன்?

2 இது யெகோவாவின் செய்தி: பைபிளின் மூலமாக யெகோவா தம்முடைய வார்த்தையை தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியை நாம் மற்றவர்களிடம் சொல்லும்போது, நாம் அவருடைய எண்ணங்களை தெரிவிக்கிறோம், நம்முடையதை அல்ல. (ரோ. 10:13-15) ஆட்கள் ராஜ்ய செய்தியை கேட்க மறுக்கையில், அவர்கள் உண்மையில் யெகோவாவையே ஏற்க மறுக்கிறார்கள். இருந்தாலும் நாம் சோர்ந்து போவதில்லை. உலக நிலைமைகளில் மாற்றத்துக்காக காத்திருக்கிறவர்களின், தங்கள் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருக்கிறவர்களின் இதயத்தை இந்த செய்தி எவ்விதத்திலாவது தொட்டுவிடும் என நம்புகிறோம்.​—⁠எசே. 9:4; மத். 5:3, 6.

3 யெகோவா மக்களை இழுத்துக் கொள்கிறார்: முன்பு நாம் சொல்வதை கேட்க மறுத்த ஒருவர் இப்போது சூழ்நிலை மாறியிருப்பதாலும், இருதயம் மென்மையாகிவிட்டதாலும் செவிசாய்க்கக்கூடும். அப்படிப்பட்ட ஒருவரிடம் யெகோவா இப்போது கருணை காட்டி ‘இழுத்துக்கொள்ளலாம்.’ (யோவா. 6:44, 65) இது நிகழும்போது, இப்படிப்பட்டவர்களை கண்டுபிடிக்க யெகோவா நம்மை பயன்படுத்தும்படி நாம் தயார்நிலையில் இருந்து தேவதூதர்களின் வழிநடத்துதலுக்கு இசைவாக செயல்பட வேண்டும்.​—⁠வெளி. 14:⁠6.

4 கடவுள் தம் ஆவியை தருகிறார்: “யெகோவாவின் அதிகாரத்தினால் தைரியமாய்” பேச பரிசுத்த ஆவி நமக்கு உதவுகிறது. (அப். 14:1-3, NW) ஊழியத்தில் நமக்கு இத்தகைய பலமான ஆதரவு இருப்பதை நினைவில் வைத்திருந்தால், அக்கம்பக்கத்தார், உடன் வேலை செய்கிறவர்கள், பள்ளித்தோழர்கள், உறவினர்கள், அல்லது படிப்போ பணமோ மிக்கவர்களிடம் பேச தயங்க மாட்டோம்.

5 எப்படி பேசுவதென இயேசு கற்பித்தார்: சிந்தனையைத் தூண்டும் கேள்விகள், நடைமுறையான உதாரணங்கள், வேதப்பூர்வமான நியாயவாதம் ஆகியவற்றை இயேசு பயன்படுத்தினார். அவர் எளிய, கவரத்தக்க முறையில், சத்தியத்தை தம் உள்ளத்திலிருந்து எடுத்துச் சொன்னார். இன்றும் இவையே சிறந்த முறைகள். (1 கொ. 4:17, NW) நாம் பிரசங்கிக்கும் சூழல் மாறலாம், ஆனால் வல்லமை வாய்ந்த ராஜ்ய செய்தி மாறுவதில்லை.

6 விசேஷமான, இன்றியமையாத முறையில் மக்களுக்கு உதவ யெகோவாவால் நாம் பயன்படுத்தப்படும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறோம். இதில் தயக்கம் காட்டாதிருப்போமாக! தைரியமாக இருந்து, மற்றவர்களிடம் நாம் நற்செய்தியை சொல்வதற்கு ஏதுவாக “வசனம் செல்லும்படியான வாசலை” யெகோவா “திறந்தருளும்படி” அனுமதிப்போமாக.​—⁠கொலோ. 4:2-4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்