காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து தொடர்ந்து பயனடையுங்கள்
புதிதாக பின்பற்றத் தொடங்கிய எளிதாக்கப்பட்ட பிரசுர விநியோகிப்பு ஏற்பாட்டில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா செய்வதை நிறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் நாமும் நம் செய்திக்கு செவிசாய்ப்பவர்களும் ஓர் இதழைக்கூட தவறவிடாமல் பெற்றுக்கொள்ள இப்போது கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
தனிப்பட்ட பிரதிகள்: உங்களுடைய சந்தா தீர்ந்துபோகையில் சபையின் பத்திரிகை இலாகாவில் உங்கள் கோட்டாவை அதிகரியுங்கள். குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் சொந்த பிரதி இருக்கும்படிக்கு பெற்றோர் போதுமான பத்திரிகைகளை ஆர்டர் செய்ய வேண்டும். உங்கள் சொந்த பிரதியில் பெயரை எழுதி வைப்பது, மறந்துபோய் அதை ஊழியத்தில் விநியோகித்துவிடாமல் இருப்பதை உறுதி செய்யும். பத்திரிகைகள் வந்து சேர்ந்ததும் ஒவ்வொரு இதழையும் உடனடியாக ராஜ்ய மன்றத்தில் உள்ளோருக்கு அவற்றைக் கையாளும் சகோதரர்கள் கொடுத்துவிடுவார்கள்.
பத்திரிகை மார்க்கம்: ஒவ்வொரு இதழையும் பெற்றுக்கொள்ள விரும்பும் ஆர்வம் காட்டுபவர்கள் அனைவருடனும் பிரஸ்தாபிகள் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முயல வேண்டும். அத்தகையவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் பத்திரிகைகளைக் கொண்டு போய் கொடுப்பது அவர்களுக்குள்ள ஆர்வத்தை வளர்ப்பதற்கும், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும்.—நம் ராஜ்ய ஊழியம், அக்டோபர் 1998, பக்கம் 8-ஐக் காண்க.
விசேஷ உதவி தேவைப்படுவோருக்கு: ஒருவர் உண்மையிலேயே அதிக ஆர்வம் காட்டலாம், ஆனால் ஊழியம் செய்யப்படாத பிராந்தியத்தில் வசிக்கலாம். அவருடைய சூழ்நிலையின் காரணமாக, அப்படிப்பட்டவருக்கு சந்தா மூலம் தபாலில் பத்திரிகையைப் பெறுவதற்கு வழிசெய்யலாம். ஒருவர் அதே சபை பிராந்தியத்தில் வசித்தாலும் பத்திரிகை மார்க்கத்தின் மூலம் அவரைப் போய் சந்திக்க முடியாதிருக்கலாம்; உண்மையிலேயே பத்திரிகைகளைப் பெறுவதற்கு அவர் ஆர்வம் காட்டினால் அதைக் குறித்து சபை ஊழிய குழுவுடன் கலந்து பேசுங்கள். அவர்கள் சம்மதித்தால் ஆர்வம் காட்டும் அந்த நபருக்கு சந்தா செய்து கொடுக்கலாம். உரிய சந்தா படிவங்களை (M-1-TL, M-101-TL) அதற்கு உபயோகிக்க வேண்டும்.
காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் உதவியோடு ராஜ்யத்தை அறிவிக்க நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் யெகோவா தொடர்ந்து ஆசீர்வதிப்பார் என நாம் நம்பலாம்.