பல மொழி பிராந்தியத்தில் பிரசுரங்களை அளித்தல்
1 பெரிய நகரங்கள் பலவற்றில், ஒரே ஒரு மொழியில் நடத்தப்படும் சபைக் கூட்டங்களை தொடங்கியதில் நல்ல முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் மொழி தெரியாதவர்கள் அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியில் நடத்தப்படும் அருகிலுள்ள சபைகளுக்கு செல்லும்படி வழிநடத்தப்படுகின்றனர். பல்வேறு மொழிகள் பேசப்படும் பிராந்தியத்தில் சாட்சி கொடுப்பதற்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன?
2 பிரசுரங்களை எப்போது அளிப்பது: இதுபோன்ற சந்தர்ப்பத்தில், வெவ்வேறு மொழியிலான இரண்டு, மூன்று சபைகள் இப்படிப்பட்ட பிராந்தியத்தில் கிரமமாக ஊழியம் செய்வதற்காக ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு, மூப்பர் குழுக்கள் ஊழிய கண்காணிகளின் மூலமாக பேசி முடிவெடுத்து அவர்களுக்கு ஒத்துவரும் ஒரு ஏற்பாட்டை செய்துகொள்ள வேண்டும்; அப்போதுதான் எல்லா மொழியினருக்கும் முழுமையாக சாட்சி கொடுக்க முடியும். இப்படிப்பட்ட பிராந்தியத்தில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில், வேறு சபைகளின் மொழிகளில் பிரசுரங்களை பொதுவாக அளிக்க மாட்டார்கள். அப்படியே அளித்தாலும், பொருத்தமான சபையைச் சேர்ந்தோர் அவர்களை மீண்டும் சந்திப்பதற்காக அவர்களுடைய பெயர்களையும் விலாசங்களையும் குறித்துக்கொள்ள வேண்டும். தனித்தனி பிராந்திய நியமன அட்டையில், அங்கு வசிக்கும் குடும்பங்களின் மொழிகளைப் பற்றிய தகவலை ஊழிய கண்காணிகள் தெளிவாக குறித்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். இப்படி செய்வதனால் எதிர்காலத்தில் தங்கள் சபையின் மொழி பேசுபவர்களை மட்டுமே பிரஸ்தாபிகள் சந்திக்க முடியும்.
3 அந்தந்த சபை அதனதன் பிராந்தியத்தில் உரிய கால இடைவெளிகளில் முழுமையாய் ஊழியம் செய்து முடிப்பதற்கு சிறந்த திட்டமிடுதல் தேவை. ஊழியம் செய்யும்போது, தங்கள் சபையின் மொழி பேசுபவர்களிடமே முக்கிய கவனம் செலுத்துவதன் மூலம் இவ்விஷயத்தில் எல்லா பிரஸ்தாபிகளும் ஒத்துழைக்கலாம். விவரமான வீட்டுக்கு வீடு பதிவுகளை வைத்திருப்பதும் உதவும். S-8 ஃபார்ம்களை சரியான விதத்தில் பூர்த்தி செய்யுங்கள்; அதில் மொழியைப் பற்றிய விவரத்தை எழுதி தாமதமின்றி ஊழிய கண்காணியிடம் கொடுங்கள். வீட்டுக்காரர் இரண்டு, மூன்று மொழிகளை சரளமாக பேசுபவராக இருந்தால், எந்த சபை அந்த வீட்டாரை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க பகுத்துணர்வை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டுக்காரர்கள் அவ்வப்போது வேறு இடங்களுக்கு மாறிச்செல்வதால், பதிவுகளை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும்.
4 பிரசுரங்களை எப்போது கையிருப்பில் வைப்பது: பொதுவாக, வேறொரு சபையின் மொழியிலுள்ள பிரசுரங்கள் தேங்கிவிடும் அளவுக்கு ஒரு சபை எக்கச்சக்கமாக ஆர்டர் செய்யக் கூடாது. ஒருவேளை வேறொரு மொழி பேசுவோர் அநேகர் ஓர் ஏரியாவில் வசித்து வரலாம், ஆனால் அவர்கள் மொழியில் சபை ஏதும் இல்லாதிருக்கலாம். அப்போது என்ன செய்வது? அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், அந்த மொழியில் துண்டுப்பிரதிகள், தேவைப்படுத்துகிறார் சிற்றேடு, அறிவு புத்தகம் போன்ற அத்தியாவசிய பிரசுரங்களை மட்டும் கொஞ்சமாக ஆர்டர் செய்து சபைகள் கையிருப்பில் வைத்துக்கொள்ளலாம். அந்த மொழி வாசிக்கத் தெரிந்தவர்களை சந்திக்கும்போது பிரஸ்தாபிகள் இந்தப் பிரசுரங்களை அளிக்கலாம்.
5 அக்கறை காட்டும் ஒரு நபருக்குத் தெரிந்த மொழியில் பிரசுரங்கள் எதுவும் சபையில் இல்லாவிட்டால் அப்பிரசுரங்களை எப்படி பெறலாம்? அந்த மொழியில் என்னென்ன பிரசுரங்கள் இருக்கின்றன என்பதை பிரசுர ஊழியரிடம் பிரஸ்தாபி கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சபை அடுத்த பிரசுர ஆர்டரை அனுப்புகையில் தேவையான பிற பிரசுரங்களையும் சேர்த்து ஆர்டர் செய்ய முடியும்.
6 எந்த மொழியை பேசினாலும் சரி, “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” உதவுவதற்கு கிறிஸ்தவ பிரசுரங்களை பலன் தரும் வகையில் நாம் பயன்படுத்திக் கொள்வோமாக.—1 தீ. 2:3, 4.
[கேள்விகள்]
1. உள்ளூர் மொழி தெரியாதவர்களுக்கு எவ்வாறு உதவி அளிக்கப்படுகிறது?
2. வெவ்வேறு மொழி பேசும் இரண்டு, மூன்று சபைகள் ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் என்ன ஒத்துழைப்பு தேவை?
3. பல மொழி பிராந்தியத்தில் பலன் தரும் விதத்தில் ஊழியம் செய்வதற்கு உதவியாக பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?
4. தங்கள் மொழியல்லாத பிற மொழி பிரசுரங்களை எப்போது சபை கையிருப்பில் வைத்துக்கொள்ளும்?
5. சபையின் கையிருப்பில் இல்லாத, பிற மொழி பிரசுரங்களை எவ்வாறு பெறலாம்?
6. என்ன குறிக்கோளுடன் கிறிஸ்தவ பிரசுரங்களை நாம் அளிக்கிறோம்?