உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 1/04 பக். 3
  • கேள்விப் பெட்டி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விப் பெட்டி
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
  • இதே தகவல்
  • நேரத்திற்குள் முடித்தல், நேரத்தை சரிவர பிரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • பொருத்தமான முடிவுரையும் உங்கள் நேரமும்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • கூட்டங்களை நேரத்துக்கு ஆரம்பித்து நேரத்துக்கு முடியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1991
  • ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் முறை
    நம் ராஜ்ய ஊழியம்—2009
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 1/04 பக். 3

கேள்விப் பெட்டி

◼ சபைக் கூட்டங்களில் நேரத்தை எப்படி சரிவர கடைப்பிடிக்கலாம்?

சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி நண்பர்களுடன் பேசுகையில் நேரம் போவதே தெரிவதில்லை. எனவேதான் கூட்டங்களில் பேச்சுக்கள் கொடுக்கும்போது அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் முடிப்பது சில சமயங்களில் சிரமமாக இருக்கும். இதை எப்படி சமாளிப்பது?

குறித்த நேரத்தில் ஆரம்பியுங்கள். முழு சபையாக கூடிவருகையில், கூட்டம் ஆரம்பிப்பதற்கு ஓரிரு நிமிடத்திற்கு முன்னதாகவே சபையாரை தங்கள் இருக்கைகளில் உட்காரும்படி சொல்லலாம். குறித்த நேரத்தில், கிரமமாக கூட்டத்தை ஆரம்பிக்க இது உதவும். (பிர. 3:1) வெளி ஊழியக் கூட்டங்கள் போன்று, சிறு சிறு தொகுதிகளாக கூடிவருகையில், பிந்தி வருபவர்களுக்காக காத்துக்கொண்டு நேரத்தை வீணாக்கக் கூடாது.

முழுமையாக தயாரியுங்கள். நேரத்தை சரிவர கடைப்பிடிக்க உதவும் முக்கிய வழி, முன்கூட்டியே தயாரிப்பது. நீங்கள் கையாளவிருக்கும் நியமிப்பின் நோக்கத்தை நன்கு புரிந்துகொள்ளுங்கள். முக்கிய குறிப்புகள் எவையென கண்டுபிடியுங்கள்; இவற்றை சிறப்பித்துக் காட்டுங்கள். சிறு சிறு விவரங்களைச் சொல்லி முக்கிய விஷயத்திலிருந்து திசைதிரும்பிவிடுவதை தவிருங்கள். உங்கள் நியமிப்பை எளிதாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் நடிப்புகளோ பேட்டிகளோ இருந்தால் அவற்றை முன்கூட்டியே பழகிப் பாருங்கள். கூடுமானால் உங்கள் பேச்சை சத்தமாக பேசிப் பழகுவதோடு நேரத்தையும் சரிபாருங்கள்.

தகவலை பிரித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்த நியமிப்பு ஒரு பேச்சாக இருந்தாலும் சரி, சபையார் கலந்தாலோசிப்பாக இருந்தாலும் சரி, அதை பகுதி பகுதியாக பிரித்துக்கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு நேரத்தை ஒதுக்குவது என தீர்மானித்து அதை மார்ஜினில் குறித்துக் கொள்ளுங்கள். பின்பு அந்த நியமிப்பை செய்கையில் அவ்வப்போது அதை ஒரு பார்வை பார்த்துக் கொள்ளுங்கள். சபையார் கலந்தாலோசிப்பில், முன்னுரையின்போது அநேகரை குறிப்புகள் சொல்ல அழைக்கும் பழக்கத்தை தவிருங்கள். அவ்வாறு செய்தால் பின்னர் வரவிருக்கும் முக்கியமான விஷயங்களைச் சொல்வதற்கு நேரம் போதாது; எனவே அவசர அவசரமாக பேசி முடிக்க வேண்டியதாகிவிடும். காவற்கோபுர படிப்பு நடத்துபவர்கள் முடிவில் மறுபார்வைக்கான கேள்விகளை சிந்திப்பதற்கு போதிய நேரத்தை ஒதுக்க வேண்டும். முடிவான பாட்டுக்கும் ஜெபத்துக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளாதவாறும் கவனமாக இருக்க வேண்டும்.

குறித்த நேரத்தில் முடியுங்கள். ஊழியக் கூட்டத்தைப் போன்ற அநேக பகுதிகளுள்ள ஒரு கூட்டத்தில், ஒவ்வொரு பேச்சாளரும் அவரவர் பகுதியை ஆரம்பித்து முடிக்கும் நேரத்தை மனதில் வைத்திருக்க வேண்டும். கூட்டம் குறிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச் செல்கிறது என்றால் என்ன செய்வது? அதற்கு அடுத்து வரும் பேச்சாளர்கள் அந்த நேரத்தை ஈடுகட்ட உதவலாம்; முக்கிய குறிப்புகளை மட்டும் சொல்லி, அந்தளவு முக்கியமற்ற சில விவரங்களை அவர்கள் சொல்லாமல் விட்டுவிடலாம். இவ்வாறு செய்வது அவர்கள் திறமைமிக்க போதகர்கள் என்பதைக் காட்டுகிறது.

சுருக்கமாகவும் குறிப்பாகவும் பதில் சொல்வதன் மூலம், சபையாரும் பேச்சாளருடன் ஒத்துழைக்கலாம். இவ்வாறு கூட்டங்கள் “நல்லொழுக்கமாயும் கிரமமாயும்” நடைபெற நாம் எல்லாருமே பங்களிக்கலாம்.​—⁠1 கொ. 14:⁠40.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்